Advertisment

ட்ரம்ப் Vs மோடி!  விசா கட்டண உயர்வு! விழிபிதுங்கும் ஐ.டி. துறை!

moditrump

ந்திய ஏற்று மதிகளுக்கு 50% வரி விதித்து பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி யளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த அதிரடியாக, அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் வெளிநாட்டினருக்கு வழங்கும் ஹெச்1பி விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அதிர்ச்சியை கொடுத் துள்ளார். 

Advertisment

செப்டம்பர் 19ஆம் தேதி, டிரம்ப் வெளியிட்ட உத்தர வில், செப்டம்பர் 21ஆம் தேதி முதல், ஹெச்1பி விசா விண்ணப்பங் களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிப்பதாகத் தெரிவித்திருந் தது, உலகளவில் ஐ.டி. துறையினர் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்த

ந்திய ஏற்று மதிகளுக்கு 50% வரி விதித்து பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி யளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த அதிரடியாக, அமெரிக்காவில் பணியாற்றச் செல்லும் வெளிநாட்டினருக்கு வழங்கும் ஹெச்1பி விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அதிர்ச்சியை கொடுத் துள்ளார். 

Advertisment

செப்டம்பர் 19ஆம் தேதி, டிரம்ப் வெளியிட்ட உத்தர வில், செப்டம்பர் 21ஆம் தேதி முதல், ஹெச்1பி விசா விண்ணப்பங் களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிப்பதாகத் தெரிவித்திருந் தது, உலகளவில் ஐ.டி. துறையினர் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவிலுள்ள முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் அமெரிக்காவை சேர்ந்தவர்களே. ஹெச்1பி விசா மூலமாக சுமார் 7.30 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றிவருகிறார்கள். ஹெச்1பி விசா கட்டணத்தை தோராயமாக 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி யிருப்பது, இந்தியாவிலுள்ள ஐ.டி. நிறுவனங்களை மட்டுமல்லாது, அமெரிக்க நிறுவனங் களுக்கும் பாதிப்பாக அமையுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.

Advertisment

அமேசான், மைக்ராசாஃப்ட், இன்ஃபோஸிஸ், மெட்டா, காக்னிசன்ட், டி.சி.எஸ்., கூகிள், ஹெச்.சி.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். இப்படி தேர்வு செய்யப் படுபவர்களின் ஹெச்1பி விசா கட்டணத்தை அந்நிறுவனங்களே செலுத்துகின்றன. இனிவரும் காலங்களில், 88 லட்சம் வரை செலுத்தி ஊழியர்களை அமெரிக்காவுக்கு தேர்வுசெய்வதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயங் கக்கூடும். குறிப்பாக, குறைவான ஊதியத் தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு அமெ ரிக்கா செல்வதற்கான வாய்ப்பு பாதிக்கக் கூடும்.

இதில் ஒரே ஆறுதல் என்ன வென்றால், இந்த உயர்த்தப்பட்ட கட்டணமானது, புதிதாக விண்ணப் பிக்கக்கூடியவர்களுக்கு மட்டும் தானென்றும், ஏற்கெனவே அமெ ரிக்காவில் பணி யாற்றுவோருக்கு இதை எடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தக் கட்டணம், ஒருமுறை மட்டுமே செலுத்தப்பட வேண்டியதென்றும், ஒவ்வொரு ஆண்டும் செலுத்தவேண்டிய தேவையில்லை என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. எனவே ஏற்கெனவே அமெரிக்காவில் பணியாற்றிவரும் இந்தியர்களுக்கு இதனால் பாதிப்பில்லை. 

இந்த கட்டண உயர்வால், அமெரிக்க வேலைவாய்ப்பு என்பதற்கு பதிலாக மாற்று வழிகளை சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய ஐ.டி. துறை தள்ளப்பட்டுள்ளது. ட்ரம்பை பொருத்தவரை, அமெரிக்காவினுள் வெளிநாட்டினர் அதிகளவில் வேலைவாய்ப்பு களுக்காக வருவதைத் தடுப்பதே நோக்கமாக இருப்பதால், அந்த எதிர்பார்ப்பை இது பூர்த்திசெய்யக்கூடும். எனினும், இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில், விசா கட்டண உயர்வை எப்படி சமாளிப்பதென்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ஐ.டி. துறை!                     

nkn270925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe