அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, கடந்த 11ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, 10ஆம் தேதி பிரான்ஸ் சென்றடைந்தார். மறுநாள், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து, 2025ஆம் ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கி னார். அம்மாநாட்டில் பல நாட்டுத் தலைவர்கள், ஏ.ஐ. வல்லுநர் கள் பங்கேற்றனர். ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி. "ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் ஆற்றல் அற்புதமானது. எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தாலும் வேலைவாய்ப்பு பறிபோகாது. பாரீஸை தொடர்ந்து ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப் படும்'' என்றார். பின்னர், பிரான்ஸின் மார்சேயிலுள்ள மசார் குஸ் போர் கல்லறைக்குச் சென்று, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மார்சேய் நகரில் கட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அலுவலகத்தை பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடன் இணைந்து திறந்து வைத்தார். பிரான்ஸில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, புதன்கிழமை அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றார். அவருக்கு அமெரிக்க அரசாங்கம் சார்பாகவும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பாகவும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் மைக் வாட்ஸ், தேசிய புலனாய்வுப் பிரிவு இயக்குநர் துளசி கப்பாட், ஆளும் குடியரசுக்கட்சி தலைவர் விவேக் ராமசாமி ஆகியோரை அடுத் தடுத்து சந்தித்துப் பேசினார். எலான் மஸ்க், அவரது குழந்தைகளோடு மோடியை சந்தித்துப் பேசிய புகைப் படம் வைரலானது. பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடனான சந்திப்பு, ஜனாதிபதி மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெற்றது. வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், டொனால்ட் ட்ரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தினார். பின்னர், பேச்சுவார்த்தை விவரங்களை இருவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளி யிட்டனர். ட்ரம்ப் தனது பேச்சில், இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம். இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய், கேஸ், ராணுவத் தளவாடங்களை ஏற்று மதி செய்வோம். இந்த ஆண்டுமுதல், எஃப் 35 ரக விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவோம். சர்வதேச அளவில் இஸ்லாமிய பயங் கரவாதத்தை ஒடுக்க, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். உலகின் மோசமான மனிதர்களில் ஒருவரான, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்துவோம்.
இந்தியாவில் மக்களுக்கு அதிக வரி விதிக்கிறார்கள். அதே போல், குறிப்பிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா நியாய மற்ற முறையில் வரி விதிக்கிறது, ஆகவே இதேபோல் நாங்களும் இந்தியாவுக்கு அதிக அளவில் வரி விதிப்போம் என மிரட்டும் தொனியில் மோடியை வைத்தே ட்ரம்ப் பேசினார். இதுகுறித்து முன்கூட்டிய அறிந்ததாலோ ஏனோ, சுற்றுப்பயணத்துக்கு முந்தைய நாளில், அமெரிக்க தயாரிப்பான போர்பன் விஸ்கியின் இறக்கு மதிக்கான 150% வரியை, 100% வரியாக இந்தியா குறைத்திருந்தது.
செய்தியாளர்களிடம் மோடி பேசுகையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ட்ரம்பின் செயல்பாடுகளை வரவேற்பதாகவும், இதுதொடர் பாக அதிபர் புதினை சந்தித்த போது, இது போருக்கான தருண மல்ல என்று தான் வலியுறுத்திய தாகவும் குறிப்பிட்டார். சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை வெளி யேற்றும் ட்ரம்பின் நடவடிக் கையை வரவேற்ற மோடி, இதே பிரச்சனை இந்தியாவுக்கும் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இந்தியர்களை இழிவுபடுத் தும் வகையில் போர் விமானத்தில் அனுப்பிவைப்பது குறித்தோ, கை, கால்களில் விலங்கிடுவது குறித்தோ மோடி வாய் திறக்கவில்லை! அதேபோல், மோடி அமெரிக்காவி லிருக்கும்போதே இரண்டாவதாக 119 இந்தியர்கள் அமெரிக்காவி லிருந்து இந்தியாவிற்கு போர் விமானத்தில் அனுப்பப்படும் நிகழ்வும் நடந்தது!
மோடியிடம் செய்தியாளர் கள் கேள்வி கேட்கையில், அமெ ரிக்காவில் வழக்கு பதியப்பட்ட இந்தியத் தொழிலதிபர் அதானி குறித்து ட்ரம்பிடம் பேசினீர்களா? என்று கேட்டதால் ஜெர்க்கான மோடி, மழுப்பலாக, தனிப்பட்ட நபர் குறித்து ட்ரம்பிடம் விவாதிக்க வில்லை என்று கூறினார். மோடி யின் இந்த பதில் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "அமெரிக்கா விலும் கூட, அதானியின் ஊழலை மோடி மறைத்துள்ளார்’ என்று விமர்சித்துள்ளார். மோடியின் அமெரிக்க விசிட்டில், வரிவிதிப்பு, சட்டவிரோதக் குடியேற்றம் உட் பட இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் கொக்கரித்திருப்பதும், அத்தனை யையும் மோடி சைலண்டாகக் கேட்டுக்கொண்டு திரும்பி யிருப்பதும் தெரியவருகிறது!