யு.எஸ். ஷட் டவுன் எனும் சேவை நிறுத்தம் அமெரிக்காவை உலுக்கிவருகிறது. இதனால் அமெரிக்காவின் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான சம்பளம் கிடைக்காமல் இரண்டாவது நாளாகத் தவித்து வருகின்றனர்.

Advertisment

சரி, ஷட் டவுன் என்றால் என்ன?

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில், பட்ஜெட் பற்றிய முடிவுகளின்போது சில குறிப்பிட்ட செலவீனங்களில் இரு கட்சிகளும் ஒரு முடிவுக்கு வராமல் கையெழுத்திடுவதைத் தவிர்ப் பதே ஷட் டவுன் எனப்படுகிறது. இதனால் பல்வேறு அரசு அமைப்புகளுக்கான பட்ஜெட் கிடைக்காமல் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போகிறது. குறிப்பிட்ட அரசு நிறுவனங்கள் நிதி வரும்வரை மூடிக்கிடக்கும் நிலை உண்டாகிறது. இதில் ராணுவம், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு விதிவிலக்கு உண்டு.

Advertisment

இது அமெரிக்க அரசுக்குப் புதிதல்ல,… அமெரிக்காவில் முன்பும் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கிறது. 1976 முதல் தற்போதுவரை அமெரிக்காவில் 20 முறை இத்தகைய முடக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2019-ஆம் ஆண்டின்போது ஏற்பட்ட முடக்கத்தால் அமெரிக்கா 35 நாட்கள் பாதிக்கப்பட்டது. அதாவது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 35 நாட்கள் சம்பளம் வரவில்லை. பல அரசு அலுவலகங்கள் மூடியிருக்கும் நிலை ஏற்பட்டது. 

தற்போது, முந்தைய அரசு கொண்டுவந்த சுகாதார, மருத்துவ உதவித் திட் டங்களுக்கு ட்ரம்ப் நிதி ஒதுக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறார். டெமாக்ரடிக் ஆதரவு மாகாணங்களுக்கான 26 பில்லியன் டாலரை அவர் நிறுத்திவைத்திருக்கிறார். மேலும் அரசு அமைப்புகளில் பல ஆயிரம் பேரை வேலையிலிருந்து தூக்கவேண்டும் என்பது ட்ரம்பின் தரப்பு. இதில் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்படாததால் தற்போதைய ஷட் டவுன் தொடங்கியுள்ளது. இதனால் சிறு வணிகம், சுற்றுலா போன்ற துறைகளும் பாதிக்கப்படும் என்கின்றனர். முக்கியமாக இரு கட்சிகளும் ஒரு தீர்வுக்கு வரும்வரை அமரிக்காவின் ஏழரை லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வராது. 

Advertisment

ஆட்சிக்கு வந்தது முதலே சூறாவளியாகச் சுழன்று, சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் டேரிஃப் விதித்தார். அதில் சீனா, இந்தியாவுடனான டேரிஃப் விவகாரம் இப்போதுவரை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக மார்தட்டினார். அதிலும் தோல்வியே அடைந்தார். தற்போது சொந்த நாட்டினரின் அதிருப்திக்கும் ஆளாகியிருக்கிறார். 

ட்ரம்ப், மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட முடியாதென்பதால் அதனால் அவருக்குப் பாதிப்பில்லை. ஆனால் அமெரிக்காவுக்கும் குடியரசுக் கட்சிக்கும் வேண்டிய சேதங்களை இந்த ஐந்தாண்டுகளில் செய்துவிடுவார் என சர்வதேச விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.