முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவத்தினரின் உயிர் குடித்த கொடூர நிகழ்வு பற்றி ராணுவ வீரர் ஒருவர் விவரித்தார்.
"ஹெலிகாப்டர் பறந்த நேரத்தில் பனிமூட்டம் ஏற்படவேயில்லை. பனி மூட்டம் ஏற்பட்டாலும், அதை திறம்படக் கையாளக் கூடிய தொழில்நுட்பம் கொண்ட ஹெலி காப்டர்தான் அது.
இரண்டு மலைகளைத் தாண்டிய பின்னர்தான் வெலிங்டன் மையத்தின் ஹெலிபேடு உள்ள நிலையில், இரண்டு மலைகளுக்கு முன்னதாகவே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்திருக்கிறது. அதை பொதுமக்களே வீடியோ எடுக்கும் அளவு இருந்தபோது, ராணுவ அதிகாரிகள் எப்படி கவனிக்கத் தவறினார்கள் எனத் தெரியவில்லை.
மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான சோழா ஹால், அர்ஜூனா மெஸ் உள்ளிட்ட இன்னொரு கட்டிடத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றவே பிபின் ராவத் பயணம் ம
முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவத்தினரின் உயிர் குடித்த கொடூர நிகழ்வு பற்றி ராணுவ வீரர் ஒருவர் விவரித்தார்.
"ஹெலிகாப்டர் பறந்த நேரத்தில் பனிமூட்டம் ஏற்படவேயில்லை. பனி மூட்டம் ஏற்பட்டாலும், அதை திறம்படக் கையாளக் கூடிய தொழில்நுட்பம் கொண்ட ஹெலி காப்டர்தான் அது.
இரண்டு மலைகளைத் தாண்டிய பின்னர்தான் வெலிங்டன் மையத்தின் ஹெலிபேடு உள்ள நிலையில், இரண்டு மலைகளுக்கு முன்னதாகவே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்திருக்கிறது. அதை பொதுமக்களே வீடியோ எடுக்கும் அளவு இருந்தபோது, ராணுவ அதிகாரிகள் எப்படி கவனிக்கத் தவறினார்கள் எனத் தெரியவில்லை.
மொத்தம் ரூ.3 கோடி மதிப்பிலான சோழா ஹால், அர்ஜூனா மெஸ் உள்ளிட்ட இன்னொரு கட்டிடத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றவே பிபின் ராவத் பயணம் மேற்கொண்டார் என்கிறார்கள். வெலிங்டன் பயிற்சி முகாமுக்கு ஆகாய மார்க்கம் சரி வராது எனச் சொல்லப்பட்டதால் முதல்முறை திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்தார் ராவத். அப்படிப்பட்டவர், இரண்டாவது முறையிலும் தரைவழிப் பயணத்தை, அதாவது கோத்தகிரி வழி குன்னூர் என ராணுவத்தினர் அறிவுறுத்திய பின்னரும் ஆகாய மார்க்கத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை.
அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை என்றாலும், பெங்களூருக்கோ டெல்லிக்கோ ரகசியமாய் எடுத்துச் செல்லப்பட்டிருக்கும் ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி பிரகாசமான உண்மைகளை வெளிக் கொண்டுவரும்'' என்கிறார் அந்த ராணுவ வீரர்.
விபத்துக்கு சில நொடிகள் முன் ஹெலி காப்டரை சுற்றுலாப்பயணிகள் எடுத்த வீடியோவில், வனத்திற்குள் அது மறையும் காட்சியும், அதைத் தொடர்ந்து பயங்கர சத்தமும் கேட்கின்றன.
"என்னாச்சு... விழுந் திருச்சா?' என்று அதிர்ச்சி யுடன் ஒருவர் கேட்பதும் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து, "அந்த வீடியோ காட்சியை எடுத்தவர்கள் யார்?' என போலீசார் விசாரணை நடத்தும் தகவல் வெளியானதும், அந்த வீடியோவை தனது செல்போனில் எடுத்த கோவை இராமநாதபுரத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ஜோ பால், அவருடைய நண்பரும், காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வருபவருமான நாசர் ஆகியோர் கோவை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்கள். கமிஷனர் பிரதீப்குமாரிடம் விளக்கம் அளித்துவிட்டு, மீடியாக்களை சந்தித்தனர்.
"நாங்கள் கடந்த 8-ந் தேதி குன்னூருக்கு சென்றோம். அங்கு காட்டேரி அருகே சாலையோரம் காரை நிறுத்தி புகைப்படம் எடுத்தோம். பின்னர் அங்குள்ள மலை ரெயில் தண்டவாளப் பகுதியை காண குடும்பத்துடன் சென்றோம். அப்போது ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வரும் சத்தம் கேட்டு, அந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்தோம். சில விநாடிகளில் வானத்திற்குள் மறைந்து, சத்தம் கேட்டதும், ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்பது மட்டும் எங்களுக்குப் புரிந்தது.
முதலில் நாங்கள் அதை சுற்றுலாப் பயணிகளுக்கான ஹெலிகாப்டர் என்றே நினைத்தோம். ஆனாலும் நாங்கள் காரை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டர் விழுந்த இடம் எதுவும் தெரிகிறதா என்று தேடிப் பார்த்தபோது, எங்களது கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை .
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று, டி.வி. பார்த்தபோது ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தி வெளியானது. உடனே நாங்கள் எடுத்த வீடியோ மற்றும் நாங்கள் பார்த்த சம்பவத்தை தெரிவிக்க நீலகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு முக்கிய அதிகாரிகள் இல்லை. அங்கிருந்து, குன்னூர் காவல் நிலையத்திற்குச் செல்லும்போது... குன்னூர் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவரை சந்தித்து நடந்தைவைகளைச் சொன்னதோடு, எங்களிடம் இருந்த வீடியோவையும், எங்களது செல்போன் எண்களையும் கொடுத்துவிட்டு கோவைக்கு வந்துவிட்டோம்.
இதனிடையே சிலர் இந்த வீடியோ குறித்தும், நாங்கள் மாற்று மதத்தினர் என்பதால் தவறாக சித்தரித்து தகவல் பரப்புவதை அறிந்ததும், இங்கே கமிஷனரை சந்தித்து விளக்கமளித்தோம்.
மேலும் நாங்கள் எடுத்த வீடியோ, ஹெலிகாப்டர் விபத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதுகிறோம். இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராகவுள்ளோம்'' என்றார்கள்.