மிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணத்தை துபாய் மற்றும் அபுதாபியில் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமார் 6,200 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

சென்னையிலிருந்து அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினருடன் 24-ந்தேதி மாலை தனி விமானத்தில் கிளம்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு துபாய் விமானநிலையத்தில் துபாய் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகளும் வரவேற்பளித்தனர். துபாய் அரசுக்கு சொந்தமான விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ. சொகுசு காரில் நட்சத்திர ஹோட்டல் ஓபராய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்டாலின்.

stalin

Advertisment

அன்றைய இரவு டி.பி.வேர்ல்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுல்தான் அகமதுபின் சுலைமானுடன் ஓபராய் ஹோட்டலில் இரவு விருந்து சாப்பிட்டார் ஸ்டாலின். தமிழக அரசோடு ஏற்கனவே வர்த்தக உறவு சுலைமானுக்கு உண்டு. தற்போதைய தி.மு.க. ஆட்சி யில், ரூ.2000 கோடிக்கான ஒப்பந்தத்தை போட்டிருக் கிறது டி.பி.வேர்ல்ட் நிறுவனம். அந்த வகையில், சுலைமானுடன் உரை யாடிய ஸ்டாலின், தமிழக அரசோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் அரசு சார்பில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?” என்று கேட்க,”"எந்த சிக்கலும் இல்லை. முதலீடுகளை செயல்படுத்து வதில் எளிமையான வழிமுறைகளை உங்கள் அரசு கையாள்வது தொழில் துறையினருக்கு ஒரு வரப்பிரசாதம்''’என்றார் சுலைமான்.

மறுநாள் 25-ந் தேதி காலையில், அமீரகத் தின் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், தமிழகத் திற்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட் டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், உணவு பதப்படுத்துதல், விவ சாயம், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள், ஜவுளி, நகை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணி யாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது பற்றி விரிவாக ஆலோசித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அமீரக அரசின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் அல்மரி மற்றும் அயலக வர்த்தகத்துறை அமைச்சர் தானிபின் அகமது சியோதி ஆகி யோர் வந்திருந்தனர். அமைச்சர் களிடம், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான எளிய சாதகமான சூழல்களை விவரித்துச் சொன்னதுடன் இருதரப்பின் பொருளாதார உறவுகளை வலிமைப்படுத்த தமிழகத்திற்கு வருமாறு அமீரக அமைச்சர்களை அழைத்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த ஆலோசனையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், முதல் வரின் செயலாளர்கள் உதயச் சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஜாகுல்கர்னி கலந்து கொண்டனர். அமீரக அமைச்சர்களின் சில சந்தேகங்களுக்கு விரிவான பதிலைத் தந்தனர் அரசு அதிகாரிகள்.

ss

Advertisment

அமீரக அரசு சார்பில் ஸ்டாலினுக்கு, கண்ணாடிப் பேழைக்குள் வடிவமைக்கப்பட்ட பாய்மரக் கப்பல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, அமைச்சர்களுக்கு, கலைஞர் எ லைஃப் மற்றும் சிவிலைஷேசன் இண்டஸ் டூ வைகை ஆகிய புத்தகங்களை பரிசளித்தார் ஸ்டாலின். தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு செல்லும்போது ஒன்றிய அமைச்சர்களின் செயல் பாடுகளையும், அமீரக அமைச்சர் களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு அமீரகத்தின் வரவேற்பினை ஸ்டாலினிடம் புகழ்ந்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

மதிய உணவு மற்றும் சிறிய ஓய்வுக்குப் பிறகு இரவு 7 மணிக்கு துபாய் எக்ஸ்போ நடக்கும் ஸ்பாட்டுக்கு வந்தார் ஸ்டாலின். மிக நேர்த்தியாக கண்கவரும் வகையில் எக்ஸ்போ வளாகத்தை வடிவமைத்திருந்தது துபாய் அரசு. வளாகத்தில் இந்திய பெவிலியனில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கத்தை துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் முபாரக் அல் நஹ்யானுடன் இணைந்து திறந்துவைத்தார் ஸ்டாலின். தமிழகத்தின் தொழில் சார்ந்த பல்வேறு துறைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழக அரங்கை மட்டுமல்லாமல் மற்ற சில நாடுகளின் பெவிலியன்களையும் முதல்வரும் அதிகாரிகளும் சுற்றிப்பார்த்தனர். அப்போது, துபாயில் உள்ள தமிழர்கள் பலரும் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்ததை புன்னகையுடன் ஏற்றார். இசைப்புயல் ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்த அவரது ஸ்டுடியோவுக்கு சென்ற ஸ்டாலினுக்கு, மூப்பில்லா தமிழே என்ற ஆல்பத்தை போட்டுக்காட்டி மகிழ்ந்தார் ரஹ்மான். இதனையடுத்து உலகின் உயரமான புர்ஜ் கலீஃபா கோபுரம் அமைந்த ஸ்பாட்டுக்கு சென்றனர்.

தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மின்னணுக் காட்சி வடிவத்தில் உருவாக்கப்பட்ட காணொலிக் காட்சி பிரமிப்பாக இருந்தது. சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கண்கவரும் மின்னணுக் காட்சியில், செம் மொழியான தமிழ் மொழியாம் பாடல் ஒலிக்க, முதல்வர், அதிகாரிகள், அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான அமீரகத் தமிழர்கள் அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. ரசித்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினார் ஸ்டாலின்.

மறுநாள் 26-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. தமிழகத்தின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் வகையில் சுமார் ரூ.6,200 கோடிக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் போடப்படும் என்பதை மாநாட்டில் பதிவு செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. மாநாட்டில் "வணக்கம் துபாய்' என தமிழில் பேச்சைத் துவக்கிய முதல்வர் ஸ்டாலின்,”"தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் இலக்கினை நிர்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம். எங்கள் நாட்டில் தொழில் தொடங்க ஏராளமான வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கின் றன'' என்று விரிவாகச் சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் இந்திய தொழில் வர்த்தக கவுன்சில் தலைவர் சுரேஷ்குமார், அமீரக சர்வதேச முதலீட்டாளர்கள் கவுன்சிலின் இயக்குநர் ஜமால், பிரபல நிறுவனமான லூலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

stalin

மாநாடு முடிந்து ஹோட்டலுக்கு திரும்பிய ஸ்டாலின், அன்றைய தினம் மாலையில் சில தொழிலதிபர்களைச் சந்தித்தார். குறிப்பாக, லூலு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி, ஸ்டாலினுடன் நிறைய விசயங்களைப் பேசினார். அவருடன் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகத்திலிருந்து அமீரக நாட்டிற்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், காய்கறிகள் மற்றும் பழங்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலையை உருவாக்குவது குறித்தும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

தவிர, சூப்பர் மார்க்கெட் மற்றும் மால்கள் துறையில் கோலோச்சும் லூலு நிறுவனம் தமிழகத்தில் பிரமாண்டமான 2 மால்கள் அமைப்பது குறித்த ஒப்பந்தமும் போடப் பட்டுள்ளது (இதனை இரண்டு இதழ்களுக்கு முன்பே நக்கீரனில் பதிவு செய்திருக்கிறோம்). இந்த மால்கள் சுமார் 3,500 கோடி ரூபாயில் உருவாக்கப்படும் என தெரிகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கும் லூலு குழுமத்தின் யூசுப் அலி முதன்முறையாக தமிழகத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார். யூசுப் அலியுடனான ஒப்பந்தம் போடுவது குறித்து சிலபல மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.

ஒப்பந்தங்கள் முடிவானதைத் தொடர்ந்து, ’நம்மில் ஒருவர்; நமக்கான முதல்வர்’ எனும் தலைப்பில் அமீரக தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் ஸ்டாலின். தி.மு.க.வின் அயலக அணி சார்பிலான இந்த நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, எம்.பி. அப்துல்லா, துபாய் தி.மு.க.வின் முக்கியஸ்தரான மீரான் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். நிகழ்ச்சிக்காக பல்வேறு தரப்பிலிருந்து நிதிகள் வசூலிக்கப்பட்டிருக் கின்றன.

துபாயில் இறங்கியதிலிருந்து கோட்லிசூட்டில் வலம் வந்த ஸ்டாலின், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூடியிருக்கும் இந்த அரங்கத்துக்கு வேட்டி-சட்டை அணிந்து வந்திருந்தார். கூட்டத் துக்கு மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரஃபுக் எம்.பி. ஆகியோர் வந்திருந்தனர். தமிழக அரசு மற்றும் தமிழர்களின் பெருமைகளைப் புகழ்ந்து பேசினர்.

தமிழர்கள் கூடியிருந்த அரங்கத்தில் பேச்சைத் துவக்கிய ஸ்டாலின், "உங்களில் ஒருவன் என நான் சொல்கிறேன்; நீங்களோ நம்மில் ஒருவர் எனச் சொல்கிறீர்கள். உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன்'' எனச் சொல்லி ஸ்டாலின் செல்ஃபி எடுத்தபோது அரங்கத்தில் எழுந்த ஆரவா ரம் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த உற்சாகத்துட னேயே தொடர்ந்து பேசிய ஸ்டாலின், அமீரகத்தில் உள்ள தமிழர்களின் உழைப்பை வானளாவப் புகழ்ந்தார்.

27-ந் தேதி மாலையில் அபுதாபிக்கு சாலை மார்க்கமாக பயணித்தார் ஸ்டாலின். அபுதாபியின் மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமான தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.

4 நாள் அமீரக பயணத்தில் சுமார் ரூ.6,200 கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தம் போடப் பட்டிருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக ஸ்டாலினின் பயணம் வெற்றியடைந்திருக்கும் நிலையில், சிறப்பு விமானத்தில் மருமகள், பேரன், பேத்திகளுடன் சென்றதும், உதயநிதி -சபரீசன் -தி.மு.க. வி.ஐ.பி.க்கள் ஆகியோர் முன்கூட்டியே சென்றதும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, "முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றாரா? குடும்ப சுற்றுலாவிற்காக சென்றாரா?' என்று அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித் திருந்தனர்.

மனைவியைத் தவிர மற்றவர்களை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் நெருக்கமானவர்கள். அரசுமுறைப் பயணமாக சென்றிருந்தாலும் சிறப்பு தனி விமானத்திற்கான செலவுகளை தி.மு.க. கட்சியே ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலடி தந்திருக் கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஹை-கமிஷனர் மட்டுமே இந்திய ஃபாரீன் சர்வீசிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர். மற்ற பணியாளர்கள் அனைவருமே இந்திய அரசின் ரா, சி.பி.ஐ., ஐ.பி., வருமானவரித்துறை, அமலாக்கத் துறை உள்ளிட்டவைகளிலிருந்து டெபு டேசனில் நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறியவர்கள்.

ஸ்டாலினின் இந்த அமீரகப் பயணத்தின் அனைத்து விபரங்களையும் அமீரக அரசிடமிருந்து ஏற்கனவே பெற்றிருக்கிறது இந்திய ஹை-கமிசன். இந்த விபரங்களை மேற்கண்ட அமைப்புகள் மற்றும் துறைகளின் துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப் படைத்துள்ளது இந்திய ஹைகமிசன். துணைத் தூதரக அதிகாரிகளும் இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாக அனுப்பி வைக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து துபாய் விமான நிலையத்திலிருந்து ஸ்டாலினை இன்ச் பை இன்ச்சாக கவனித்தபடி இருந்தனர். இதற்கு துபாய் அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்தனர்.

ஸ்டாலினைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நாளின் நிகழ்வுகளையும் ஹை-கமிஷனுக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்க, அந்த தகவல்கள் உடனுக்குடன் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு நகல், பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளரான சந்தோஷிற்கும் சென்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்த சந்தோஷ், பா.ஜ.க. அண்ணாமலை வீட்டில் தங்கினார். விடிய விடிய இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதில் துபாய் பயணத்தில் நடந்துள்ள பல விசயங்கள் பகிர்ந்துகொள்ளப் பட்டிருக்கின்றன.

மேலும், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர்களின் துறைகளைப் பற்றியும், சபரீசனுக்கு நெருக்கமான ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனம், முந்தைய ஆட்சியில் ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமாக இருந்து, தற்போது சபரீசனுக்கும் நெருக்கமாகி விட்ட பாஷ்யம் கட்டுமான நிறுவனம் ஆகியவை பற்றியும் சில கோப்புகளை அண்ணாமலையிடம் கொடுத்து சில இன்ஸ்ட்ரக்ஷன்களையும் தந்திருக்கிறார் சந்தோஷ் என்கின்றனர் தமிழக பா.ஜ.க.வினர். பல அதிரடியான அரசியல் ரகசியங்களையும் இந்த ஆலோசனையில் இருவரும் விவாதித்துள்ளனர். ஒவ்வொரு மாத இடைவெளியில் அந்த ரகசியங்களை அம்பலப்படுத்த தயாராகி வருகிறாராம் பா.ஜ.க. அண்ணாமலை.