ஆல்ட் நியூஸ் ஜுபைர் கைது! பழிவாங்கல் நடவடிக்கையா?

arrest

வீட்டுகளின் மூலமாக இந்து மத உணர் வைப் புண்படுத்தியதாகக் கூறி, போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் வலைத் தளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர் டெல்லி போலீ ஸால் கைதுசெய்யப் பட்டுள்ளதற்கு தேசிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஆல்ட் நியூஸின் மற்றொரு நிறுவனரான பிரதிக் சின்கா, "இந்த கைது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அவரைக் கைது செய்யும்முன் நோட்டீஸ் எதுவும் கொடுக்கப்பட வில்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுக்கான வழக்கில் கைதுசெய்யும்போது, காவல்துறை முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கவேண்டும். 2020-ல் பதிவான வழக்கொன்றில் விசாரிப்பதற்காக ஜுபைர் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவால் அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் இவரைக் கைதுசெய்வதற்கு ஏற்கெனவே டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. நாங்கள் திரும்பத் த

வீட்டுகளின் மூலமாக இந்து மத உணர் வைப் புண்படுத்தியதாகக் கூறி, போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் வலைத் தளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர் டெல்லி போலீ ஸால் கைதுசெய்யப் பட்டுள்ளதற்கு தேசிய அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஆல்ட் நியூஸின் மற்றொரு நிறுவனரான பிரதிக் சின்கா, "இந்த கைது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அவரைக் கைது செய்யும்முன் நோட்டீஸ் எதுவும் கொடுக்கப்பட வில்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுக்கான வழக்கில் கைதுசெய்யும்போது, காவல்துறை முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கவேண்டும். 2020-ல் பதிவான வழக்கொன்றில் விசாரிப்பதற்காக ஜுபைர் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவால் அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் இவரைக் கைதுசெய்வதற்கு ஏற்கெனவே டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. நாங்கள் திரும்பத் திரும்பக் கேட்ட போதும் போலீசார் எஃப்.ஐ.ஆர். நகல் எதுவும் வழங்க வில்லை. மருத்துவப் பரிசோத னைக்குப் பின் அவரை எங்கே கொண்டுபோகிறோம் என்பதை சொல்ல மறுத்து விட்டது. நானும் ஜுபைரின் வழக்கறிஞர்களும் வலி யுறுத்திக் கேட்டபோதும் காவல்துறை பதிலளிக்க வில்லை. அவர் அழைத்துச் செல்லப் படவிருந்த போலீஸ் வேனில் இருந்த காவலர்கள் யாரும் நேம் டேக் அணிந் திருக்கவில்லை''’என குற்றம்சாட்டியுள்ளார்.

dd

ஆனால் தற்போது போலீஸ் கைது செய்திருப்பது 2018-ல் ஜுபைர் பதிவிட்ட ஒரு ட்வீட்டுக்காக என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஹோட்டல் ஒன்றின் படத்தை வெளியிட்டு 2014-க்கு முன் ஹனி மூன் ஹோட்டலாக இருந்தது, பின் ஹனு மன் ஹோட்டலாக மாறிவிட்டது என அவர் பதிவிட்ட தாகவும் அது இந்துக்களின் மத உணர்வைப் புண் படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

ஜுபைர் தரப்பிலோ, "உண்மையில் இந்தக் கைது அதற்காக இல்லை. நூபுர் சர்மாவின் முகம்மது நபிக்கு எதிரான வெறுப்புப் பேச்சை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அம்பலப்படுத்தியதற்காகவும், அது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து இஸ்லாமிய நாடுகளின் கோபத்துக்கு காரணமாகி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வரை விளக்கம் சொல்லவேண்டிய நிலை வந்ததற்குமான பதிலடி'' என்கிறார்கள்.

"நான்காண்டு களுக்கு முன்பான ஒரு ட்வீட்டுக்கு, அவசர அவசரமாக அதிகாலை யில் வந்து கைதுசெய்யவேண்டிய அவசிய மென்ன, எங்கே கொண்டுசெல்கிறோம் என்பதைக்கூட சொல்லாமல் இழுத்துச் செல்லவேண்டிய தேவை என்ன?'' என்கிறார்கள்.

dd

தவிரவும், நூபுர் சர்மாவின் விஷமப் பேச்சு சர்வதேச கண்டனங்களைச் சந்தித்த பின்பும் இதுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை. ஆனால், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக சமீபத்தில் எத்தனையோ கைதுகள் நடந்துவிட்டன. ஒரு நான்காண்டு பழைய ட்வீட்டைத் தோண்டியெடுத்து ஜுபைரும் கைதுசெய்யப்பட்டாகிவிட்டது. ஜனநாயகத்தில், இந்துத்துவர்களுக்கும் ஆளும் கட்சி சார்பானவர்களுக்கும் சிறப்பு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருக்கிறதா என்ன? என பா.ஜ.க. அரசின் பாரபட்சங்களைக் குறித்து கேள்வியெழுப்புகிறார்கள் நடுநிலை யாளர்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென் றால், ஜுபைரின் ட்வீட்டில் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஹோட்ட லின் படமானது 1983-ல் வந்த பாலிவுட் படமான "கிஸ்ஸி சே நா கேனா' என்ற திரைப்படத்தில் நகைச்சுவையாக இடம் பெற்றது. அதன்பிறகு தொலைக்காட்சிகளிலும் அதே காட்சி பலமுறை ஒளிபரப்பானது. பிரபல ஆங்கில பத்திரிகை களிலும்கூட கட்டுரையொன்றுக்காக அந்த ஹோட்டலின் படம் இடம்பெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. யாருடைய மத உணர்வும் புண் படவில்லை. இப்போது ஜுபைரின் விஷயத்தில் மட்டும் ட்வீட் பதிவிட்ட நான்காண்டுகளுக்குப் பின் யாரோ ஒருவர் மனம் புண்பட்டு வழக்குத் தந்திருப்பது வேடிக்கைதான்.

"உண்மையின் ஒரு குரலை கைதுசெய்து முடக்கும்போது, இன்னும் ஆயிரம் குரல்கள் எழத்தான் செய்யும். அடக்குமுறைக்கு எதிராக எப்போதும் உண்மையே வெல்லும்'’என ராகுல்காந்தி, ஜுபைருக்கு ஆதரவாக ட்வீட் செய்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர போராடிய தீஸ்தா செடல்வாட், ஆர்.பி.ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக சர்வேதச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், ஜுபைரின் கைதும் சர்ச்சையாகியுள்ள நிலையில் எதிர்த் தரப்பாளர்களை எதிரிகளாகக் கருதி பா.ஜ.க. அடக்குமுறையில் இறங்கியுள்ளதாக சூடான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

-சூர்யன்

n
இதையும் படியுங்கள்
Subscribe