திருச்சியில் ஒரு பக்கம் தங்க கடத்தல் என்றால் தற்போது, கஞ்சா கடத்தலும் அதிகமாகி உள்ளது. கடந்த மே மாதத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அரசு மதுபான கடைகள் முழுமையாக மூடப்பட்டதால், ஒருபக்கம் கள்ளச்சாராயமும், மற்றொரு பக்கம் கஞ்சா புழக் கமும் அதிகமானது. கஞ்சா பயன்பாடு அதிகரித்த தால், தற்போது அதற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

Advertisment

drugs

கடந்த மே முதல் ஜீலை வரை தினமும் குறைந்தபட்சம் 2 கிலோ கஞ்சாவாவது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் 21 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட் டார். ஜூலை 8-ஆம் தேதி திருச்சியிலிருந்து ஒட் டன்சத்திரத்துக்கு 17 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது. அந்த கடத்தல் வழக்கில் 3 பேரை கைது செய்தனர். ஜூலை 24-ஆம் தேதி மணப்பாறை பகுதியில் இருந்து கொண்டுவந்து துரைசாமிபுரம் பகுதியில் 3.5கிலோ கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூலை 26-ஆம் தேதி திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற காரை மடக்கி பிடித்து பறிமுதல் செய்ததில் 22 கிலோ கஞ்சா கைப்பற்றபட்டது.

Advertisment

இப்படி கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து சுமார் 50 கிலோவிற்கும் மேலாக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் சமீபத்தில் 22 கிலோ கஞ்சா கைப் பற்றப்பட்டதில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு காவல்துறையினரின் செயல்பாடுகள் இருந்துள்ளது.

திருச்சியில் பொறுப்பேற்று இருக்கும் மாநகர காவல்துறை ஆணையர் அருண் மற்றும் மத்திய மண்டலத்தில் ஐ.ஜி.யாக பொறுப்பேற்றிருக்கும் பாலகிருஷ்ணன், எஸ்.பி.யாக பொறுப்பேற்றிருக்கும் பா.மூர்த்தி மூவரும் தங்களுடைய பங்கிற்கு தனிப்படை களை அமைத்து தற்போது சுத்தம் செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.

Advertisment

அதிலும் மாநகர பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள காவல்நிலையங்கள் மூலம் இதுபோன்ற குற்றங்கள் தடுக்கப்படாமல், ஏதோ ஒரு காவலர்கள் மூலம் கடத்தல்காரர் களுக்கு தகவல் கொடுக்கப்படுவதால், அவர்கள் தொடர்ந்து தப்பித்து வந்தனர். எனவே இரண்டு அதிகாரிகளுமே ஒரு தனிப்படையை அமைத்து தற்போது அதிரடி காட்டி வருகின்றனர்.

ddrகடந்த ஜூலை 26-ஆம் தேதி, திருச்சி மாநகர காவல் ஆணையரின் தனிப்படை டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகா காரை தனிப்படையினர் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காரை ஓட்டிவந்த முகமது ஹனிபா காரை நிறுத்தாமல் பெரம்பலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரை திருப்பியுள்ளார். தனிப்படையைச் சேர்ந்த சரவணன் என்ற காவலர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் காரை பின்தொடர... இருசக்கர வாகனத்தின் மீது கார் மோத முயற்சி செய்தபோது, காவலர் காரின் முன்பக்க பேனட்டை பற்றிக்கொண்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தொங்கிக்கொண்டே சென்றுள்ளார்.

சஞ்சீவி நகர் பகுதியில் வந்தபோது, ஓட்டுநர் ஹனீபா சென்டர் மீடியனில் மோதி உள்ளார். இதில் கார் நிலை தடுமாறி நின்றதோடு, கார் மோதியதில் சரவணன் தூக்கி எறியப்பட்டதில் அவருடைய கால் முறிந்தது. இந்நிலையில் காரினை பின்தொடர்ந்த தனிப்படை யினர் காரை மடக்கி பிடித்ததோடு, காரில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரை ஓட்டிவந்த ஹனீபாவை தனிப்படையினர் கைது செய்தனர். கால் முறிந்த காவலர் சரவணன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 30-க்கும் மேற்பட்ட கஞ்சா பறிமுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 40க்கும் மேற்பட்டவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கடத்தல்காரர்கள் ஒருபக்கம் அதிகமானாலும், அதை பயன்படுத்து வோர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். நாடு முழுவதும் 4 கோடி பேர் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர்.

தமிழகத்தில் கஞ்சாவிற்கு அடிமையாகிறவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதில் 15 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களால் அதிகளவில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா பயன்படுத்தும் 23 வயதிற்கு உட்பட்ட பெரும்பாலான இளைஞர்கள், வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் தற்போதைய புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது.

இந்த கஞ்சா கடத்தலை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்க வேண்டும். இதற்கு மாதம் தவறாமல் கப்பம் பெற்றுக்கொண்டு கண்டுகொள் ளாமல் இருக்கும் காவல்நிலையங் களை சேர்ந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தெருக்களிலும், சாலையோரங்களிலும் நின்று கொண்டு விற்பனை செய்வதை காவலர்கள் ஒருபக்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் தமிழகத்திற்குள் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் கஞ்சாவை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற் போது அதிகாரிகள் பிடித்திருக்கும் கஞ்சா மூட்டை கள் அனைத்தும் பெரு வெள்ளத்தில் சிறு துளிதான்.

ஆனால் தமிழகத்திற்குள் உள்ள மொத்த கஞ்சா வியாபாரிகளை இனம்கண்டு அவர் களுடைய செயல்பாடுகளை முடக்கி கஞ்சா வரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.