மிழகத்தில் சமீபகாலமாக குட்கா, பான்பராக், சிகரெட் என்று போதை வஸ்துகளின் விற்பனை வெகுவாக குறைந்து, அதற்கு மாற்றாக கஞ்சா விற்பனை அதிகரித் துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. 

Advertisment

அதிலும் குறிப்பாக, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடங்கி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை கஞ்சாவின் ஆதிக் கம் அதிகரித்துள்ளது. அதேபோல், உதட்டிற் குள் மறைத்து வைத்து பயன்படுத்தும் "கூல் லிப்' போன்ற வடிவங்களில் கஞ்சா உருமாற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. சில ஆசிரியர்களே பள்ளிக்குள் போதை வஸ்துகளைக் கொண்டு வந்து அதிக விலைக்கு மாணவர்களுக்கு விற்கும் அளவிற்கு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அது வெளியே தெரியாத அளவிற்கு பார்த்துக்கொள்கின்றனர்.

இவ்விவகாரத்தில் திருச்சி மாவட்டம் எப்போதும் முன்னிலையில் இருக்கும் மாவட்டம் என்றே சொல்லாம். திருச்சி ராம்ஜி நகர் என்ற பெயரை கேட்டவுடன் நினைவிற்கு வருவது திருட்டுக்கும்பல்தான். ஆனால் இன்று அதை மிஞ்சும் அளவிற்கு கஞ்சா புழக்கம் அதிகமிருக்கும் பகுதியாக மாறிவிட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து, போதை வஸ்துகள் கடத்தி வரப்பட்டு, இங்கு அவற்றை பதுக்கி வைத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து சப்ளை செய்யும் அளவிற்கு ஒரு பெரிய இணைப்புச் சங்கிலியே செயல்பட்டு வருகிறது.

trichy1

Advertisment

இந்த ராம்ஜி நகர் பகுதிக்கென்று தனியாக காவல் நிலையம் இருந்தாலும், இந்த காவல் நிலையங்களுக்கு வரும் எந்த அதிகாரியும், கஞ்சா மொத்த வியாபாரிகளையோ, சில்லரை வியாபாரிகளையோ கைது செய்ததே இல்லை. அதற்கு பதிலாக நாள்தோறும் சிறுசிறு பொட்டலங்களாக மாற்றி 100க்கும், 50க்கும் விற்பனை செய்யும், அடிமட்டத்திலிருக்கும் கூலி ஆட்களைத்தான் காவல்துறை கைது செய் கிறது. நாள்தோறும் காவல்துறை வெளியிடும் குற்றப்பட்டியலில், குறைந்தபட்சம் கஞ்சா சில்லறை விற்பனை செய்ததாக 5 வழக்குகளா வது பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பெரிய அளவிலான கஞ்சா வியாபாரி கள் கைது செய்யப்படாததற்கு காரணம், மாதந் தவறாமல் வைட்டமின் "ப' சரியாக எல்லோ ருக்கும் பிரித்துக் கொடுக்கப்படுவதேயாகும்.

சமீபத்தில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் நல்லையன் என்ற காவலர், நடுரோட்டில் ஒரு கஞ்சா வியாபாரியின் மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் குறித்து நமக்கு விவகாரமான தகவல்கள் கிடைத்தன. கடந்த 18 வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் நல்லையனுக்கு கஞ்சா மொத்த வியாபாரிகள் குறித்த ஒட்டுமொத்த தகவலும் தெரிந்திருந்தாலும், அவர் இதுவரை எந்த பெரிய வியாபாரியையும் கைது செய்ததில்லை. அதற்கு பதிலாக கூலிக்கு வேலை செய்யும் பெண்களை மட்டுமே குறி வைத்து கைது செய்யும் இவர், அந்த பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அவர்களை தன்வசப்படுத்துவது, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் மூலம் அவர்களை தொந்தரவு செய்வது என்று ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

trichy2

Advertisment

திருச்சி டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய வருண்குமார், திருச்சியை சேர்ந்த இரண்டு பெரிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்த தோடு, அவர்கள் மீது குண்டாஸ் வழக்கும் பதிவு செய்தார். ஆனால் அதன்பிறகு திருச்சி எஸ்.பி. யாக வந்த செல்வநாகரத்தினம் கஞ்சா விற்பனை குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, பெரிய அளவிலான கைது நடவடிக்கையிலும் இறங்கவில்லை. அதேபோல் ராம்ஜி நகர் காவல் நிலையம், ஜீயபுரம் டி.எஸ்.பி. கண்ட் ரோலில் வருவதால், டி.எஸ்.பி.க்கும் மாதந் தவறாமல் சரியாக பணம் கொடுக்கப்படுவதால், அவரும் இதை கண்டுகொள்வதில்லை. 

அதேபோல் இந்த காவல் நிலையத்திற்கு தற்போது புதிய ஆய்வாளர் வந்துள்ளார். அவருக்கு இந்த ஊரைப் பற்றி எதுவும் தெரியாததால், நல்லையன் சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. இச் சூழலில், நல்லையன் ஒரு பெண்ணை நடு ரோட்டில் கட்டிபிடித்த விவகாரம் பரபரப்பான தால் அதுகுறித்து திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்தை தொடர்புகொண்டு கேட்டறிய முயற்சித் தோம். பலமுறை அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை. அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு இது தொடர்பாக குறுந்தகவலும் அனுப்பியுள் ளோம். இந்த சம்பவம் நடந்து ஒருவார காலத் திற்கு மேலாகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

கஞ்சா வியாபாரிகளால் மட்டுமே அரசாங்கம் இயங்குவதாக ஒரு பிம்பம் உருவாகியுள்ள நிலையில், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக முதல்வர் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். பள்ளிக் கூடங்கள் வரை கஞ்சா புழக்கம் ஆக்ரமித் திருப்பது தமிழ்நாட்டுச் சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே இவ்விவகாரத்தில் அதிகாரிகளும் கடுமையாகக் கடமையாற்றி, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

-ஸ்ரீவர்மா