Advertisment

பா.ஜ.க.வுக்கு எதிராக பழங்குடியின மக்கள்!

bjp


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு சார்பில் மாநாடு என அறிவிக்கப்பட்டது, இந்த மாநாட்டுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜீவல் ஓரம், மீன்வளத்துறை அமைச்சர் சிங் பாகேல், பாரதி பவார் உட்பட மாநில நிர்வாகிகள் வருகிறார்கள் என நோட்டீஸில் குறிப்பிட் டிருந்தனர். "பழங்குடியினருக்கான மாநாடு' என பா.ஜ.க. விளம்பரம் செய்துகொண்டிருந்தது. 

Advertisment

ஜனவரி 30-ஆம் தேதி புதூர்நாடு, நெல்லி வாசல்நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட 32 கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், புதூர்நாடு மலையில் சாலையின் குறுக்கே மரத்தை வெட்டிப்போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடந்த போராட்டத்தை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்த கிராமங்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் நாயக்கனேரிமலை, ஏலகிரி மலை பழங்குடியின மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழங்க


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ஜ.க. எஸ்.சி. பிரிவு சார்பில் மாநாடு என அறிவிக்கப்பட்டது, இந்த மாநாட்டுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜீவல் ஓரம், மீன்வளத்துறை அமைச்சர் சிங் பாகேல், பாரதி பவார் உட்பட மாநில நிர்வாகிகள் வருகிறார்கள் என நோட்டீஸில் குறிப்பிட் டிருந்தனர். "பழங்குடியினருக்கான மாநாடு' என பா.ஜ.க. விளம்பரம் செய்துகொண்டிருந்தது. 

Advertisment

ஜனவரி 30-ஆம் தேதி புதூர்நாடு, நெல்லி வாசல்நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட 32 கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், புதூர்நாடு மலையில் சாலையின் குறுக்கே மரத்தை வெட்டிப்போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடந்த போராட்டத்தை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்த கிராமங்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் நாயக்கனேரிமலை, ஏலகிரி மலை பழங்குடியின மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழங்குடியின மக்களின் எதிர்ப்பைமீறி நடந்த மாநாட்டில் தேசிய மகளிரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உட்பட சிலர் மட்டும் கலந்துகொண்டனர். 

Advertisment

இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி. சான்றிதழ்களை ரத்து செய்யாவிட்டால் 

வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போகிறோம் என திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மலையாளி பேரவையின் நெல்லிவாசல் நாடு பகுதியின் செயலாளர் உதயகுமார் பேசும்போது, “"பா.ஜ.க. மாநாடு நடத்தக்கூடாது எனச்சொல்லி பழங்குடியின மக்களை அரசியல் கட்சி தூண்டிவிட்டு சாலைமறியல் நடந்ததாக அரசியல் சாயம் பூசி மேடையில் பேசினார் வானதி சீனிவாசன். அவருக்கு தெளிவாக கடிதம் எழுதியுள்ளோம், நாங்கள் அவர்கள் மாநாடு நடத்தியதை எதிர்க்கவில்லை. பழங்குடியின மக்கள் மாநாடு எனச்சொல்லி போலியான பழங் குடியின மக்களை வைத்து மாநாடு நடத்துகிறீர்கள். அதனால் எங்கள் பழங்குடியின, மலையாளிகள் பெயரைப் பயன்படுத்தகூடாது என்றே மறியல் போராட்டம் நடத்தினோம். எங்கள் பழங்குடியின மக்கள் எல்லா கட்சிகளிலும் உள்ளார்கள். நாங்கள் அனைவரும் இணைந்துதான் மறியல் போராட்டம் நடத்தினோம். 

bjp2

காரணம், இது எங்கள் உரிமைப் பிரச்சனை. தமிழ்நாட்டில் எஸ்.டி பிரிவில் 36 சாதிகள் உள்ளன. இதில், குறும்பர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளார்கள். இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் குருமன் என எஸ்.டி. பட்டியலில் உள்ள சாதியைக்காட்டி சான்றிதழ் வாங்குகிறார்கள். இது பல ஆண்டுகால பிரச்சனை. இதை எங்கள் சமூக மக்கள் எதிர்க்கத் தொடங்கியபோது, 15 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பத்தூர் மாவட்டத்தில் குருமன்ஸ் இங்க இல்லன்னு மாவட்ட நிர்வாகம் சொல்லிவிட்டது. ஆனால் அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு குறும்பர் இனத்தவருக்கு குருமன் என போலியாக எஸ்.டி சான்றிதழ் தருகின்றனர். இதன்மூலம் உண்மையான பழங்குடியின சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய கல்விவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு போன்றவை பறிபோகின்றன. இதற்காக நீண்டகாலமாக போராடிவருகிறோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது, 

bjp1

ஒரே நபர் எம்.பி.சி., பி.சி., எஸ்.டி. என மூன்று சான்றிதழ் வைத்துள்ளார். இப்படி இப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு சாதிச் சான்றிதழ்களை வைத்திருக்கிறார்கள், இதனை நாங்கள் வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. மாவட்ட நிர்வாகமே பட்டியல் தந்துள்ளது. இது நீதி மன்றத்திலும் தரப்பட்டுள்ளது, போலிச் சான்றிதழ் வழங்கியதை கண்டித்த நீதிமன்றம், இனி இப்படி சான்றிதழ் வழங்கக்கூடாது, தரப்பட்டதை ஆய்வு செய்து ரத்து செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொண்டாரெட்டி சமூகம் எஸ்.டி. பட்டியலில் உள்ளது ஆனால் அங்கு ரெட்டி பட்டம் கொண்டவர்கள் கொண்டாரெட்டி என எஸ்.டி சான்றிதழை போலியாக வாங்கினார்கள். அது பிரச்சனையானதும் போலி எஸ்.டி.

bjp3

சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சிய ரிடம் போலிச் சான்றிதழ்களை ரத்துசெய்யச் சொல்லி மனு தந்துள்ளோம், அதைச் செய்ய மறுக்கிறார்கள். சில சமூக மக்கள் தங்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்கச்சொல்லி ஒன்றிய, மாநில அரசுகளிடம் கேட்கிறார்கள். அரசுகள் அதனை ஏற்கவில்லை. அதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள். அரசாங்கங்கள் ஆய்வுசெய்து ஏற்றுக்கொளட்டும், அதன்பின்னர் அவர்கள் எஸ்.டி. சான்றிதழ் வாங்கட்டும். ஆனால் பட்டியலிலேயே இல்லாதவர்களுக்கு அதிகாரிகள் சான்றிதழ் தருவதையும், அவர்கள் பழங்குடியினர் எனச்சொல்லி மாநாடு நடத்துவதையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்''’என்றார். 

திருப்பத்தூரில் வசிக்கும் பா.ஜ.க. எஸ்.டி பிரிவின் மாநில பொதுச்செயலாளர் பண்பு என்பவர் போலி ஆவணங்களை வைத்து எம்.பி.சி.களுக்கு எஸ்.டி. சான்றிதழ்களை வாங்கித் தருகிறார். பழங்குடியினம் அல்லாதவர்களை பழங்குடியினர் என்கிறார், மாநாடு நடத்துகிறார் என பா.ஜ.க.வில் உள்ளவர்களே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், பா.ஜ.க. தலைமைக்கும் புகாரனுப்பியுள்ளனர். இக்குற்றச்சாட்டு குறித்து கருத்தறிய நாம் பண்புவின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்ட போது, நமது லைனை எடுக்கவில்லை. 

nkn180226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe