Advertisment

வேளாண் பல்கலையில் மரங்கள் கடத்தல்! துணைவேந்தர் மீது பகீர் புகார்!

dd

பொன்விழாவை இந்தாண்டு கொண்டாடி வருகிறது கோவை வேளாண் பல்கலைக்கழகம். பெருமைமிக்க இந்த பல்கலைக்கழகம், கடந்த 3 ஆண்டுகளாக துணைவேந்தர் டாக்டர் நீ.குமாரின் நிர்வாக சீர்கேடுகளில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

Advertisment

agri

இதுகுறித்த புகார்கள் கவர்னர் மாளிகைக்கும் தமிழக அரசின் வேளாண்மைத் துறைக்கும் பறந்துள்ள நிலையில், கோட்டையிலுள்ள வேளாண்மைத்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது,’"வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் நீ.குமார். கடந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது துணைவேந்தர்கள் நியமனம் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சிபாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்தது கவர்னர் மாளிகை.

அந்த வகையில், பா.ஜ.க. தலைவர்களின் நட்பை பெற்றிருந்த குமாருக்கு அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் சிபாரிசு செய்தார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அவர்களின் சிபாரிசில் கடந்த 2018-ல் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரானார் நீ.குமார். இவர் உறுப்பினராகயிருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பணபலம், துணைவேந்தராவதற் கான செலவுகளை கவனித்துக் கொண்டது.

Advertisment

குமாரின் நியமனத்தை யறிந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் அவர் மீதான குற்றச் சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக பன்வாரிலாலுக்கு அனுப்பிவைத்தார் கள். அதாவது, பழத்தோட்டத் துறையின் தலைவ ராக

பொன்விழாவை இந்தாண்டு கொண்டாடி வருகிறது கோவை வேளாண் பல்கலைக்கழகம். பெருமைமிக்க இந்த பல்கலைக்கழகம், கடந்த 3 ஆண்டுகளாக துணைவேந்தர் டாக்டர் நீ.குமாரின் நிர்வாக சீர்கேடுகளில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

Advertisment

agri

இதுகுறித்த புகார்கள் கவர்னர் மாளிகைக்கும் தமிழக அரசின் வேளாண்மைத் துறைக்கும் பறந்துள்ள நிலையில், கோட்டையிலுள்ள வேளாண்மைத்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது,’"வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் நீ.குமார். கடந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது துணைவேந்தர்கள் நியமனம் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் சிபாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்தது கவர்னர் மாளிகை.

அந்த வகையில், பா.ஜ.க. தலைவர்களின் நட்பை பெற்றிருந்த குமாருக்கு அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் சிபாரிசு செய்தார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அவர்களின் சிபாரிசில் கடந்த 2018-ல் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரானார் நீ.குமார். இவர் உறுப்பினராகயிருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பணபலம், துணைவேந்தராவதற் கான செலவுகளை கவனித்துக் கொண்டது.

Advertisment

குமாரின் நியமனத்தை யறிந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் அவர் மீதான குற்றச் சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக பன்வாரிலாலுக்கு அனுப்பிவைத்தார் கள். அதாவது, பழத்தோட்டத் துறையின் தலைவ ராகவும் பேராசிரிய ராகவும் இருந்த குமார், பல்கலைக் கழக வளாகத்திலுள்ள மரங்களை முறைகேடாக வெட்டி வெளியே கடத்த முயற்சிக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டார். பதிவாளர் தலைமையில் ஒழுங்குநடவடிக்கை விசாரணை கமிட்டியும் போடப்பட்டது.

dd

கமிட்டியின் விசாரணையில், பழத்தோட்டத்தின் 50 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ததின் இடுபொருள் மற்றும் கூலியாட்கள் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளில் குமாரும் உதவிப்பேராசிரியர் விஜயக்குமாரும் பல முறைகேடுகள் செய்திருப்பது கண்டறியப் பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் குமாருக்கான இன்கிரிமெண்ட்டை கட் செய்து ( ப்ரொசீடிங் ரெக்கார்ட் நெ. ஆர் 3 / 2536 டாக்டர் என்.கே./2003 ) உத்தரவிட்டார் பதிவாளர்.

இதனை பன்வாரிலாலுக்கு பேராசிரியர்கள் அனுப்பி வைத்தனர். அதனை கவனித்த பன்வாரிலால், இத்தகைய குற்றச்சாட்டுகளை மறைத்து என்னிடம் ஒப்புதலைப் பெற்றுள்ளனர் என அப்போது வருத்தப்பட்டிருக்கிறார். ஆக, பா.ஜ.க.வின் சிபாரிசில் துணைவேந்தரான குமாரின் கடந்த 3 ஆண்டு கால நிர்வாகத்தில் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் முன்னேற்றமடையவில்லை''’என்று விவரிக்கிறார்கள் அதிகாரிகள்.

aagag

வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது,’"துணைவேந்தருக்கும் மரங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தனி உறவு இருக்கிறது. கொடைக்கானலிலுள்ள பல்கலைக்கழக தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்தபோதும் மரங்களை வெட்டி விற்றார். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோதும் அதே தவறை செய்து மாட்டிக் கொண்டார். இப்போது துணைவேந்தராக இருக்கும்போதும் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மதிப்புமிக்க மரங்களின் கிளைகள் வெட்டப்படுகின்றன. சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்திலுள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் வனம் உருவாக்குகிறோம் என்ற போர்வையில் 20,000 டன் டிப்பர் மண்ணை கடத்தி வெளிச் சந்தையில் விற்றுள்ளார் குமார். மலையிலிருந்து மழையின் நீரோட்டத்தால் அடித்து வரப்படும் அதிக வளமிக்க வண்டல் மண் இது. தங்கத்தின் மதிப்புக்கு நிகரானது. இதன் மதிப்பு ரூ.20 கோடி. இந்த மண்ணை கடத்துவதற்கு பவானிசாகர் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வனக்கல்லூரியின் லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 11 கல்லூரி வளா கங்களில் புல்வெளி அமைக்க ரூ.5 கோடி செலவிட்டிருக்கிறார் குமார். புல்வெளியை அமைப்பதற்கான நிபுணர்கள் பலர், பல்கலைக்கழகத்தின் பூக்கள் உற்பத்தி-நிலம் அழகுபடுத்தும் துறையில் இருக்கும் நிலையில், அவர்களை பயன்படுத்திக் கொள்ளாமல் புல்வெளி போர்வைத் திட்டத்தை தனியார் கம்பெனிக்கு தந்துள்ளார் குமார். தனது பங்களாவின் முன்புறம் களைகள் வளராமல் தடுக்க களைப்பாய் போட்டுள்ளார். அந்த களைப்பாய்கள் கோவையிலேயே குறைந்த விலைக்கு கிடைக்கும் நிலையில் பெங்களூரில் ஒரு கம்பெனியிடம் வாங்கவேண்டிய மர்மம் என்ன? பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 70 மையங்களிலும் நடக்கும் கட்டுமானப் பணிகளின் திட்ட மதிப்பில் 4-ல் 1 பங்கு தொகையை காண்ட்ராக்டர்கள் முன்கூட்டியே கொடுத்துவிட வேண்டும். இதை வசூலிப்பதற்காக தலைமைப் பொறியியல் அலுவலர் ஒருவரை வைத்திருக்கிறார் குமார்.

பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பதிவாளர் சுப்பையனும் குமாரும் நெருங்கிய நண்பர்கள். பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக வலம் வருகிறார் சுப்பையன். பல்கலைக்கழகத்தில் 4,000 பணியாளர்களும், 1,500 விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். இவர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் உள்ளிட்டவைகளில் சுப்பையனின் ஆதிக்கமே அதிகம். கமிஷன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை.

பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் இயந்திர கம்பெனிகளின் சார்பில் வனக்கல்லூரி விருந்தினர் மாளிகையிலும், நட்சத்திர ஹோட் டல்களிலும் அடிக்கடி துணை வேந்தருக்கு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பல்கலைக் கழக பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் ஒருவரும், பொது தொடர்பு அலுவலர் ஒருவரும் இதனை கவனித்துக் கொள்கின்றனர். இதில், பொது தொடர்பு அலுவலர், "வேளாண் அமைச்சரும் நானும் ஒரே சமூகம்தான். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் சார்' என குமாரை குஷிப்படுத்தி வருகிறார். ஆனால், இதெல் லாம் அமைச்சர் எம்.ஆர்.கே.பி.க்கு தெரியாது. அவ ரது பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், தலைமைச் செயலகத்தில் தனக்கான லாபியை உருவாக்க ஓய்வுபெற்ற பேராசிரியர் சதாசக்தி என்பவரை, சுமார் 1,20,000 ரூபாய் சம்பளத்தில் வைத்திருக்கிறார் துணைவேந்தர் குமார். மதிப்புமிக்க பல்கலைக்கழகம் குமாரின் நிர்வாகத்தில் சீர்குலைந்து வருகிறது'' என்று குமுறுகிறார்கள் பேராசிரியர்கள்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து துணைவேந்தர் குமாரை தொடர்புகொண்டு கேட்டபோது,”"பல்கலைக்கழகத்தில் 1 லட்சம் மரங்களை நடும் புரோகிராம் நடத்தியிருக்கும் நான், மரங்களை வெட்டுவேனா? சமீபத்தில், பழைய மாணவர்களின் ஒருங்கிணைப்புடன் 1 ஏக்கர் நிலத்தில் 6,000 மரக்கன்றுகள் நட்டிருக் கிறோம். மின்சார கம்பிகளுக்கு இடையூறாக இருக்கும் கிளைகள்தான் கமிட்டியின் ஒப்புத லுடன் வெட்டப்பட்டன. அவை முறையாக ஏலம் விடப்பட்டன. விதிகளுக்குப் புறம்பாக எதுவும் நடக்கவில்லை. அகில இந்திய அளவில் க்ளீன் அண்ட் க்ரீன் இரண்டாவது பெஸ்ட் யுனிவர்சிடி என்ற கேம்பஸ் அவார்டை நாங்கள் வாங்கியிருக் கிறோம். என் மீதான ஒழுங்கு நடவடிக்கையெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டது. நான் மெரிட்டில் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது வளர்ச்சியையும், மீண்டும் துணைவேந்தராக வருவதையும் தடுக்கவே பொய்யான புகார்களை தருகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மை இல்லை''‘என்கிறார் மிக அழுத்தமாக.

பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அதன் துணைவேந்தர்களுடன் ஆலோ சனை நடத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் அடிப்படையில் துணைவேந்தர்களுக்கு சில அசைன்மெண்டுகளும் கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

nkn031121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe