Advertisment

பூமிக்குள் புதையல் தடுப்பணைகள்! -ஆளுந்தரப்பு காண்ட்ராக்ட் லட்சணம்!

sadfa

15 ஆயிரம் அடி உயரத்தில் மலை முகடுகளுக்கிடையே கண்ணா டிப் பாலம், கட லுக்கடியில் கண்ணாடிப் பாலம், மணிக்கு 1,500 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் பாதை என கட்டுமான தொழில் நுட்பத்தில் அசாத் திய திறமை கொண்ட வல்லுனர்கள் சீனாவில் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், இந்த கொரோனாவின் போது சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து இட நெருக்கடி ஏற்பட்ட போது நாற்பத்தெட்டே மணி நேரத்தில் பிரம்மாண்ட மருத்துவமனையையே கட்டியெழுப்பினார்கள

15 ஆயிரம் அடி உயரத்தில் மலை முகடுகளுக்கிடையே கண்ணா டிப் பாலம், கட லுக்கடியில் கண்ணாடிப் பாலம், மணிக்கு 1,500 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் பாதை என கட்டுமான தொழில் நுட்பத்தில் அசாத் திய திறமை கொண்ட வல்லுனர்கள் சீனாவில் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன், இந்த கொரோனாவின் போது சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து இட நெருக்கடி ஏற்பட்ட போது நாற்பத்தெட்டே மணி நேரத்தில் பிரம்மாண்ட மருத்துவமனையையே கட்டியெழுப்பினார்கள் சீனர்கள்.

Advertisment

small-dams

சீனர்கள் கடலுக்கடியில் கண்ணாடிப் பாலம் கட்டுகிறார்கள் என்றால் நம்ம தமிழகத்தில் வெயில் காலத்தில் பூமிக்கு மேலேயும் மழைக் காலத்தில் தானாகவே பூமிக்கடியில் சென்றுவிடும் படியான தடுப்பணைகளைக் கட்டி திகைக்க வைத்திருக்கின்றனர் அ.தி.மு.க. காண்ட்ராக்டர்கள்.

Advertisment

மழை பெய்வதே அதிசயம் என்றாகிவிட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்த அதிசயம் நிகழ்ந்தது. அப்படி மிதமான மழை பெய்த ஏரியாக்களில் சாயல்குடி, திருப்புல்லாணி பகுதிகளும் ஒன்று.

smalldams

அந்த மிதமான மழைக்கே சாயல்குடி அருகே உள்ள ஒச்சத்தேவன் கோட்டை, கூராங்கோட்டை, திருப்புல்லாணி அருகே மோர்க்குளம், வண்ணாங் குண்டு ஆகிய கிராமங்களில் கட்டிய தடுப்பணைகளும் சிறிய பாலமும் கரைந்து பூமிக்கடியில் புதைந்துவிட்டன. இதில் வண்ணாங் குண்டு பாலம் மட்டும் 35 லட்சம் மதிப்பீடு. மற்ற தடுப்பணைகள் அனைத்தும் தலா 10 லட்சம் மதிப்பீடு.

""ஒச்சத்தேவன் கோட்டை, கூராங் கோட்டை தடுப்பணை கள் கட்ட காண்ட் ராக்ட் எடுத்து தனது மச்சினனுக்கு கொடுத்துவிட்டார் அ.தி.மு.க. ஒ.செ. முனியசாமி பாண்டியன். இவரின் மகள்தான் கடலாடி யூனியன் சேர்மனாக இருக்கிறார். மோர்க்குளம் தடுப்பணையின் காண்ட்ராக்டர் கீழக்கரை பாரதிநகரைச் சேர்ந்த அ.தி.மு.க. புள்ளி யான ரவி, வண்ணாங்குண்டு பாலத்தை 100 நாள் வேலைத்திட்ட ஆட்களை வைத்தே கட்டி முடித்துவிட்டனர்'' என்கின்றனர் அ.தி.மு.க.வினரே. இது குறித்து சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்களின் பதில் பெற முயன்றும் முடியவில்லை.

""பத்து லட்சத்துல ரெண்டு லட்சம் செலவழிச்சு கட்டி, பயன்பாட்டுக்குவர்றதுக்கு முன்னாலேயே பூமிக்குள்ள போயிருச்சு''’என வேதனைப்பட்டார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மா.து.செ.வான ரஹ்மான்.

sss

இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 11 யூனியன், தமிழகம் முழுக்க 385 யூனியன்கள் என்றால் நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்து மயக்கமடையாமல் இருப்பீர்களாக.

-பரமு

nkn051220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe