Advertisment

சிக்கிய போதை பொருள்கள்! தமிழக அரசுக்கு செக்! -பா.ஜ.க ப்ளன்!

ss

மிழக கிழக்கு கடற்கரைப் பகுதி கள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட் கள் கடத்தல் நடப்பதும், அதே போல இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

Advertisment

ஆந்திராவிலிருந்து காய்கறி லாரிகளிலும், சரக்கு லாரிகளுக்குள் ரகசிய அறைகள் அமைத் தும் கஞ்சா பண்டல்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் கும்பல், கோடியக்கரை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடற்கரை கிராமங் களைக் குறிவைத்து, அந்தந்த பகுதிகளில் பண் டல்களை இறக்கி வைத்துவிட்டு இலங்கையிலிருந்து சிக்னல் கிடைக்கும்போது நள்ளிரவில் மீனவப் படகுகள் மூலம் மீனவர்களைப் போல கடலுக்குள் சென்று நடுக்கடலில் கஞ்சா பண்டல்களை மாற்றிவிட்டு அங்கிருந்து வரும் தங்கம் போன்ற பொருட் களை இந்திய கடற் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கின்றனர்.

drug

அதேபோல குஜராத் போன்ற வட மாநிலங்களி லிருந்து போதைப் பவுடர்களை பார்சல்களாக கன்டெய்னர்கள் மூலமும், சரக்கு லாரிகளில் ரகசிய அறைகள் மூலமாகவும், ரயில் பயணி களைப் போலவும், பண்டல் பண்டலாக தமிழகம் கொண்டு வந்து, அந்த பண்டல்களை கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக் கிறார்கள்.

Advertisment

இந்த தகவல்களை அடிக்கடி கண் காணித்து ஆங்காங்கே போதைப் பொருட் களை தமிழக போலீசார் பிடித்து வர

மிழக கிழக்கு கடற்கரைப் பகுதி கள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட் கள் கடத்தல் நடப்பதும், அதே போல இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

Advertisment

ஆந்திராவிலிருந்து காய்கறி லாரிகளிலும், சரக்கு லாரிகளுக்குள் ரகசிய அறைகள் அமைத் தும் கஞ்சா பண்டல்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் கும்பல், கோடியக்கரை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடற்கரை கிராமங் களைக் குறிவைத்து, அந்தந்த பகுதிகளில் பண் டல்களை இறக்கி வைத்துவிட்டு இலங்கையிலிருந்து சிக்னல் கிடைக்கும்போது நள்ளிரவில் மீனவப் படகுகள் மூலம் மீனவர்களைப் போல கடலுக்குள் சென்று நடுக்கடலில் கஞ்சா பண்டல்களை மாற்றிவிட்டு அங்கிருந்து வரும் தங்கம் போன்ற பொருட் களை இந்திய கடற் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கின்றனர்.

drug

அதேபோல குஜராத் போன்ற வட மாநிலங்களி லிருந்து போதைப் பவுடர்களை பார்சல்களாக கன்டெய்னர்கள் மூலமும், சரக்கு லாரிகளில் ரகசிய அறைகள் மூலமாகவும், ரயில் பயணி களைப் போலவும், பண்டல் பண்டலாக தமிழகம் கொண்டு வந்து, அந்த பண்டல்களை கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக் கிறார்கள்.

Advertisment

இந்த தகவல்களை அடிக்கடி கண் காணித்து ஆங்காங்கே போதைப் பொருட் களை தமிழக போலீசார் பிடித்து வருவதால், கடத்தல்காரர்கள் ஆங்காங்கே பதுக்கி வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த தகவல் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்க, கடந்த ஒரு வருடமாக ரகசியமாகவே பதுக்கல் கிடங்குகளைப் பற்றிய தகவல்களை திரட்டி வைத்திருந்தனர்.

திரட்டப்பட்ட தகவல்களை தமிழ்நாடு பா.ஜ.க. தலைமையின் நண்பரான மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி, பா.ஜ.க. மாநிலத் தலைமைக்கு சொல்ல, அந்த தகவல்களை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்ற மாநில தலை மையிடம், "தேர்தல் நெருங்கும்வரை பதுக்கல் குடோன்களை கண்காணித்துக்கொண்டே இருக்கட்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்க போதைப் பொருள் பதுக்கல் கிடங்குகளைப் பிடித்து மக்களிடம் தி.மு.க வுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்' என்ற உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனால் கடந்த ஒரு வருடமாக பெரிய அளவிலான கஞ்சா மற்றும் போதைப்பவுடர் பதுக்கல் கிடங்குகளைப் பாதுகாப்பாகக் கவனித்த மத்திய நுண்ணறிவுப் பிரிவு, தற்போது டெல்லியின் சிக்னல் கிடைத்ததும் ஆங்காங்கே பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தி.மு.க. ஆட்சியில் இவ்வளவு போதைப்பொருட்களா? என்று மக்களும் வாய்பிளக்கத் தொடங்கி யுள்ளனர். இதே ஆயுதத்தை அ.தி.மு.க.வும் கையிலெடுத்து, தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருளை தடை செய் என்று ஆர்ப்பாட் டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

drr

இந்நிலையில்தான்... புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில், இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் (ஈ.ஒ.ம.) சோதனையில் ஈடுபட்டபோது, மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண் ணையிலிருந்து ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்) மற்றும் ரூ.2 கோடி மதிப் புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டை உட்பட, மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவல கத்திற்கு கொண்டு சென்றனர். அதே இறால் பண்ணையில் சாராய ஊறல் போட்டிருந்த ஒரு பேரலையும் கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த இருவரையும், மீமிசல் அரசனகரி பட்டினம் பகுதியை சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில் இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப் படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக, யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும், வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் தெரியவரும் என்கின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள போதைப்பொருளின் உரிமையாளரை தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து சில அதிகாரிகள் கூறும் போது, "இந்தியா - இலங்கை கடல் வழியாகத் தான் போதைப்பொருள் மற்றும் தங்கக் கடத்தல்கள் நடந்துவருகின்றன. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை, நடுக்கடலில் அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காலம் வரை, எந்த கடத்தல் பொருட்களையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் கடல் வழிக் கடத்தல்கள் பெருமளவு இல்லை. அந்த காலகட்டத்தில் வறுமையிலுள்ள பெண்களுக்கு ஆசை காட்டி, அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து இங்கிருந்து பீடி, கைலி, நறுமணப் பொருட்கள் என ஏராளமான பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பும் கடத்தல் முகவர்கள், அங்கிருந்து திரும்பிவரும் பெண்களிடம் தங்க பிஸ்கட்டுகளை கார்பன் பேப்பரில் சுற்றி மறைவான இடங்களில் வைத்து அனுப்பி வைப்பார்கள்.

dd

அந்த பெண்கள் விமான நிலையம் வரும்போது எந்த வழியாக வரவேண்டும் என்ற சொல்கிறார்களோ, அந்த வழியாகச் செல்லும்போது பரிசோதனை அதிகாரிகள் இவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அந்தப் பெண்கள் வெளியே வந்ததும் தயாராக நிற்கும் ஆட்டோக்களில் ரூம்களுக்கு சென்று தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்க பிஸ்கட்டுகளை எடுத்து குறிப்பிட்ட நபர்களிடம் கொடுத்துவிட்டு, அவர் களுக்கான சம்பளம் ரூ.5 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஊருக்கு போய் விடுவார்கள். இதேபோல மாதம் 2 முறையாவது இலங்கை செல்வார் கள்.

ஆனால் போரில் விடுதலைப் புலிகள் கடல் பாதுகாப்பை கைவிட்ட பிறகு முழுமையாக கடல் வழியாகவே கடத்தல்கள் நடக் கிறது. ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.ஆயிரம் கோடிக்கு கடத்தல்கள் நடக்கிறது. இந்த கடத்தல்களைக் கண்காணித்து நடுக்கடலில் பிடிக்க வேண்டியது இந்திய கடற்படை தான். அவர்கள் கண்டும் காணாமல் இருப்ப தால் தான் இன்று இவ்வளவு கடத்தல்கள் அதிகரிக்கக் காரணமாகிவிட்டது.

ஒன்றிய அரசின் அசைன்மெண்ட்படி நாடாளுமன்றத் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 இடங் களில் போதைப்பொருள் பதுக்கல் குடோன் களைப் பிடிக்க உத்தரவு உள்ளது. அந்த உத்தரவுப்படி தான் மதுரை, மீமிசல் கடத்தலைப் பிடித்தது. இன்னும் இது வேகமெடுக்கும்'' என்றனர்.

இதனை எப்படி தமிழ்நாடு அரசு எதிர்கொள்ளப் போகிறதோ? என்ற கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "குஜராத்தில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. விரைந்து அவற்றை பிடித்து வருகிறோம்'' என்றார். ஒரே இடத்தில் சுமார் 112 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை ஒன்றிய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

dd

nkn160324
இதையும் படியுங்கள்
Subscribe