Advertisment

சிக்கிய சி.டி! ஆபாச இ-மெயில்! உயிர் பயத்தில் உண்மையைக் கக்கிய சிவசங்கர் பாபா!

sivasankar

சிவசங்கர் பாபாவை மூன்றுநாள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், இரண்டு நாட்களில் விசாரணையை முடித்து சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு அந்த அளவு சிவசங்கர் ஒத்துழைப்பு கொடுத்தது தான் சீக்கிரமே ஜெயில் திரும்பக் காரணம் என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.

Advertisment

sivasankar baba

இருதயத்தில் ஏற்பட்ட கோளாறுகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்துகொண்ட நிலையில்... டெல்லியில் ரகசியமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிவசங்கரை பொறிவைத்து போலீசார் பிடித்ததும் அவர் அதிர்ந்துபோனார். சிறையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, மூளை நரம்பில் ஏற்பட்ட நரம்புக் கோளாறு, ரத்தத்தில் ஏற்பட்ட அதிகமான சர்க்கரை மற்றும் வயோதிகத்தால் ஏற்பட்ட வியாதிகளிலிருந்து அற்புதமாக சிகிச்சையளித்து சென்னை அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் மீட்டனர். ஆனாலும் இவையெல்லாம் மரணத்தின் வாசலை சிவசங்கரனுக்கு காட்டிவிட்டது. தொடர்ந்து ஆதாரபூர்வமாக அவருக்கு எதிராக எழும் புகார்களும், எழுநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்களை கைப்பற்ற அவருக்கு நெருக்கமானவர்களே மேற்கொள் ளும் சதிகளும் சிவசங்கரனை கடுமையான அழுத்தத்திற்குள்ளாக் கியது. சிறையிலும் போலீஸ் காவலிலும் கொடுத்த உணவுகளை அவர் சரியாக சாப்பிடவில்லை. சரியாகத் தூங்குவதும் இல்லை.

போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போ

போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவரை அவரது லீலைகள் அரங்கேறிய சுஷில் ஹரி சர்வதேச பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பள்ளியில் நடக்கும் விழாக்களில் கம்பீரமாக நடனமாடி மகிழ்ந்த சிவசங்கர், தற்போது போலீசார் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ள தளர்வாகவே நடந்தார். விழா நடந்த இடம், அவரது கம்பீரமான மாளிகை, அங்கிருந்த பெருமாள் சிலையைக் கண்டதும் கண் கலங்கினார். அவர் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலை நடத்திய தனிப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றபோது, உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவர் தனிப்பட்ட முறையில் உபயோகித்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப் ஆகியவற்றைக் காண்பித்தார். அவரிடம் சி.சி.டி.வி. எங்கே என கேட்டார்கள். அதனுடைய ஹார்டு டிஸ்க் எங்கே என கேட்க, அதையெல்லாம் காண்பிக்க... போலீசார் எடுத்துக்கொண்டனர்.

Advertisment

sivasankar baba

"இந்த சி.டி.டி.வி.யில் குழந்தைகள், உங்களது ரகசிய அறைக்கு வருவது பதிவாகியிருக்குமா?' என போலீசார் கேட்க... "ஆம்' என விரக்தியுடன் பதிலளித்தார் சிவசங்கர். அடுத்தநாளும் அதே அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கைப்பற்றிய சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கில் குழந்தைகள் அறைக்கு வரும்போது நடந்த சம்பவங்களை மறுபடியும் உயிர்ப்பித்தனர் போலீஸார்.

சிவசங்கர், குழந்தைகளுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். நான் தாத்தா என்ற முறையில் கட்டிப்பிடித்தேன் என்ற சிவசங்கரிடம், உங்கள் பள்ளியில் ஆண் குழந்தைகள் படிக்கிறார்கள். தாத்தா என்ற முறையில் உங்கள் பேத்தி வயதுள்ள குழந்தைகளை கட்டிப் பிடித்து விளையாடுவீர்கள்... ஏன் தாத்தாவாகிய நீங்கள், பேரன்களை தொடவில்லை என கேள்வி எழுப்பினார்கள். சிவசங்கர், குழந்தைகளை மோசமாகத் தொடுவதை ஷாட் பை ஷாட்டாக சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய போது, பதில் சொல்லாமல் மௌனமானார். நீண்ட மௌனத் திற்குப் பிறகு, "நான் தெரியாமல் தொட்டு விட்டேன்... என் கை தெரியாமல் பட்டுவிட்டது' என பதில் சொன்னார் சிவசங்கர்.

sivssankarbaba

அவரது வக்கிரம் நிறைந்த அசைவுகளைக் காட்டி கேள்வி கேட்டபோது, "நான் செய்தது தப்புதான்' என ஒத்துக்கொண்டார். உடனே அவர் சொல்வதை வீடியோ பதிவுகளாகவும் எடுத்து பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், சிவசங்கர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கு கேளம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர்களை சாட்சியமாக்கி அதை ஆவணப்படுத்தினர்.

சிவசங்கரின் அறையில் அவர் முன்னிலையில் சோதனை செய்தபோது ஏராளமான சி.டி.க்கள் சிக்கின. அதில் பக்தி sivasankar babaசி.டி.க்களுடன் ஆபாச சி.டி.களும், சிவசங்கர் செய்த லீலைகளும் சி.டி.களாகவே ரகசியமாக தனது அறையில் பாதுகாத்து வைத்திருந்தார் சிவசங்கர். அவரது இ-மெயில் அக்கவுண்ட்ஸ்களை ஆராய்ந்தபோது, யாஹு என்கிற பழைய மெயிலைத்தான் அவர் உபயோகித்திருந்தார். அந்த மெயிலையும் ஆராய்ந்தனர்.

அதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபாச மெஸேஜ்களை அனுப்பி யிருந்தார். அது எப்படி, யாருக்கு அனுப்பப்பட்டது என சிவசங்க ரிடம் பதில் வாங்கி அனைத்தை யும் ஆவணப்படுத்தினார்கள் போலீசார். சிவசங்கரைப் பற்றி புகார் தெரிவித்த குழந்தைகள், நீதிமன்றத்தில் பதிவு செய்த வாக்குமூலங்களைப் படித்துக் காட்டி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு சிவசங்கர் சொன்ன பதில்களை வீடியோக் களாகவும், ஆடியோக்க ளாகவும் பதிவு செய்தார் கள் போலீசார் என்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம்.

சி.பி.சி.ஐ.டி. தலைவர் டி.ஜி.பி. ஷகில் அக்தர் நேரடிப் பார்வையில் எஸ்.பி. விஜயகுமாரின் தலைமையில் நடக்கும் இந்த விசாரûணையில் சிவசங்கருக்கு எதிராக எல்லா தகவல்களையும் சிந்தாமல் சிதறாமல் சி.பி.சி.ஐ.டி. டீம் சேகரித்து வருகிறது. ஆனால் சிவசங்கர், குழந்தைகளை வெளியூர்களுக்கும் வெளிநாட்டுக்கும் அழைத்துச் சென்று நாசப்படுத்தியிருக்கிறான். அதைப்பற்றி விசாரிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட வேண்டும். அதற்குரிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேவை. ஒரு சின்ன டீம்தான் இதுபோன்ற சென்சிடிவ்வான வழக்குகளை விசாரிக்கிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கான டீமை வலுப்படுத்த வேண்டும் என்கிற குரல் சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து ஒலிக்கிறது.

படங்கள்: அசோக் & குமரேஷ்

__________

நீதிபதியிடம் வாக்குமூலம் தந்த குழந்தைகள்!

சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ளே உள்ள கட்டிலில் படுத்து தூக்கம் வராமல் சிலமணி நேரம் விழித்தபடியே இருந்தார் பாபா. அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு விசாரணைக்காக கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரிடம் சொந்தமாக செல்போன் கூட கிடையாதாம். விசாரணை முடிந்தநிலையில் மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்... சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் செங்கல்பட்டு போக்சோ நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-அரவிந்த்

_______________

காப்பாற்றவில்லை!

2021 ஜூன் 30-ஜூலை 02, நக்கீரன் இதழில் வெளியான "பெண்களைக் குறிவைத்த மனித மிருகம்' கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் பிக்ரம் மிஸ்ரா மற்றும் விசாகா கமிட்டி தலைவி லட்சுமி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆனந்த் சர்மா மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன், விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்துவிட்டோம். அவரைக் காப்பாற்ற நிர்வாகம் முயலவில்லை' என மறுப்பு தெரிவிக்கிறார்கள் ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தினர்.

(ஆர்.)

nkn030721
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe