மேற்கு வங்கத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே தீர்வது என்ற அஜென்டாவுடன் தீவிரமாக மம்தாவுக்கு எதிராகக் களமாடிவந்த பா.ஜ.க.வுக்கு, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் படுகொலை விவகாரம் மிகப்பெரிய துருப் புச்சீட்டாக அமைந்துவிட் டது. இந்த அதிர்ச்சிகரமான கொலைச்சம்பவத்தில் ஒரு பக்கம் உச்ச, உயர் நீதிமன்றங் களும், மறுபக்கம் சி.பி.ஐ.யும் தீவிர விசாரணையில் இறங்கி யுள்ளன. மருத்துவர்களின் போராட்டமும் மாநில எல் லையைத் தாண்டி இந்தியா முழுக்க வலுவடைந்துவரு கிறது. இவ்வளவுக்குமிடையே, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல, பா.ஜ.க.வின் ஐ.டி. விங், இவ்விவகாரத்தில் மம்தா அரசுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பும் மோச மான செயலில் இறங்கியுள்ளது.
இதன் தொடக்கமாக, பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில், "ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத் துவர் வன் புணர்வு செய்யப் பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸின் மம்தாவுக்கு நெருக்கமான ஒருவர் சம்பந் தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ள
மேற்கு வங்கத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே தீர்வது என்ற அஜென்டாவுடன் தீவிரமாக மம்தாவுக்கு எதிராகக் களமாடிவந்த பா.ஜ.க.வுக்கு, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர் படுகொலை விவகாரம் மிகப்பெரிய துருப் புச்சீட்டாக அமைந்துவிட் டது. இந்த அதிர்ச்சிகரமான கொலைச்சம்பவத்தில் ஒரு பக்கம் உச்ச, உயர் நீதிமன்றங் களும், மறுபக்கம் சி.பி.ஐ.யும் தீவிர விசாரணையில் இறங்கி யுள்ளன. மருத்துவர்களின் போராட்டமும் மாநில எல் லையைத் தாண்டி இந்தியா முழுக்க வலுவடைந்துவரு கிறது. இவ்வளவுக்குமிடையே, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல, பா.ஜ.க.வின் ஐ.டி. விங், இவ்விவகாரத்தில் மம்தா அரசுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பும் மோச மான செயலில் இறங்கியுள்ளது.
இதன் தொடக்கமாக, பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில், "ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத் துவர் வன் புணர்வு செய்யப் பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸின் மம்தாவுக்கு நெருக்கமான ஒருவர் சம்பந் தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது' என்று கடந்த 14ஆம் தேதியே கொளுத்திப் போட்டார். அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சௌமென் மஹாபத்ராவின் மகன் தான் அந்த பயிற்சி மருத்துவரை கொலை செய்த தாகவும், தற்போது தலை மறைவாக இருப்பதாகவும் கூறி பா.ஜ.க. ஐ.டி. விங்கால் செய்தி பரப்பப்பட்டது. அந்த செய்தியில், சௌமென் மஹா பத்ராவின் மகன் எனக்கூறி ஒருவரின் போட்டோவையும் போட்டிருந்தார்கள். இங்கு தான் பா.ஜ.க.வின் குட்டு வெளிப்பட்டது. அவர்கள் வெளியிட்ட போட்டோ கார்டில் இடம்பெற்றுள்ள நபர், உண்மையில் எம்.எல். ஏ.வின் மகனே இல்லையென் றும், பன்குரா நகரைச் சேர்ந்த ப்ரபிர் சிங் மஹாபத்ரா என்ற பள்ளி ஆசிரியரின் மகனான சுபதிப் சிங் மஹாபத்ராவின் புகைப்படத்தை, திரிணாமுல் காங் கிரஸ் எம்.எல்.ஏ. வின் மகன் எனக் கூறி செய்தி பரப் பியதும் தெரியவந் தது. இதுதொடர் பாக, ப்ரபிர் சிங் மஹாபத்ரா காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில் திரிணாமுல் காங் கிரஸ் எம்.எல்.ஏ. சௌமென் மஹாபத்ரா, தனக்கெதிராக பா.ஜ.க.வினர் மட்டுமல்லாமல், தனக்கு ஆகாத சொந்தக் கட்சியினரும் கூட்டுச் சேர்ந்து தவறான தகவல்களைப் பரப்பிவருவதாகவும், தானும் தனது மகனும் இவ்விவகாரத்தில் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போமென்றும் கூறியுள்ளார். தன் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கடுத்ததாக, பா.ஜ.க. அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில், "ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களை இந்த வன்புணர்வுக் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்த மம்தா பானர்ஜி அரசு சதித்திட்டம் தீட்டுகிறது.
எனவே சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்' என்று அடுத்தொரு குண்டை தூக்கிப் போட்டார்.
இவ்விவகாரத்தில் தொடக்கம் முதலே பல்வேறு வதந்திச் செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. அந்த பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட தாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்ததாக செய்தி வெளிவந்தது. இச்செய்தியை மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மறுத்துள்ளார். தற்போது இக்கொலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகனுக்கு தொடர்பில்லை என்றும் தெரியவந்துள்ளது. பயிற்சி மருத்துவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தியும் தவறென்று அம்மருத்துவரின் கார் டிரைவரே வாக்குமூலம் அளித்துள்ளார். கொல்லப்பட்ட மருத்துவரின் தோள்ப்பட்டை எலும்பும், இடுப்பு எலும்பும் முறிந்திருப்பதாகப் பரப்பப்பட்ட செய்தியும் தவறென்று கண்டறி யப்பட்டது. கொல்லப்பட்டவரின் உடலில் 150 கிராம் அளவிலான விந்து இருந்ததாக வெளிவந்துள்ள செய்தியில், குறிப்பிட்டுள்ள 150 கிராம் என்றால் அது 100 பேர்வரை வன் புணர்வில் ஈடுபட்டால் மட்டுமே சாத்தியமாகு மென்று கூறப்பட்டதால், இதுகுறித்து மருத்துவர்களிடம் காவல்துறையால் விளக்கம் கேட்கப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பிவந்த 60 சமூகவலைத்தளப் பதிவர்களுக்கு கொல்கத்தா காவல்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், 3.3 லட்சம் பாலோயர்களைக் கொண் டுள்ள அரசு மருத்துவர் ஒருவர் தொடர்ச்சியாக வதந்திகளைப் பரப்புவதாகக்கூறி கொல்கத்தா போலீசார் விசாரணைக்கு அழைத்ததையடுத்து, தனது பதிவுகளையெல்லாம் அழித்துவிட்டு, எக்ஸ் தளத்திலிருந்தே தற்காலிகமாக விலகியிருக்கிறார்.
இவ்விவகாரத்தில் பா.ஜ.க. தொடர்ச்சி யாக தவறான செய்திகளைப் பரப்பிவருவதாக வும், இவ்விவகாரத்தில் விசாரிக்கும் சி.பி.ஐ. தரப்பில் எவ்விதத் தகவலும் வெளியிடப்படா மல் அமைதிகாப்பது குறித்தும் பிரபல வழக் கறிஞர் பிரசாந்த் பூஷன் கேள்வியெழுப்பி யுள்ளார். மேலும், "இவ்விவகாரத்தில் மேற்கு வங்க அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் பா.ஜ.க. எம்.பி. ப்ரிஜ்பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள், போராட்டங்களையடுத்தும் அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாமல் தற்போதுவரை எம்.பி.யாக அவரை தொடரவிடுகிறது பா.ஜ.க. அதேபோல் உன்னாவா வன்புணர்வு சம்பவத்தின் குற்றவாளி யான குல்தீப் செங்கர் இப்போதுவரை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாகத் தொடர்கிறார். பில்கிஸ் பானோ வன்புணர்வு வழக்கின் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இப்படி பாலியல் குற்றவாளிகளுக்கு துணை போகும் பா.ஜ.க. தற்போது பயிற்சி மருத்துவர் படுகொலை விவகாரத்தில் மட்டும் நீதிக்காகப் போராடுவதாகச் சொல்வது வெட்கக்கேடானது'' என்று கடுமையாகத் தாக்கியுள்ளார்.