வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக தமிழகத்துக்குள் நுழையும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஒரே விமானத்தில் வந்த 113 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம், மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளை அதிர வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 20 பேர் உட னடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அரபு நாடுகளிலிருந்து போதைப்பொருட்கள், தங்கம், எலெக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவைகள் கடத்தி வரப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடத்தலில் ஈடுபடும் பயணிகளுக்கு "குருவிகள்' என்று பெயர். இந்த கடத்தல் விவகாரங்களில் அவ்வப்போது சின்னச் சின்ன மீன்கள் பிடிபடுகிறதே தவிர பெரிய திமிங்கலங்கள் பிடிபடுவதில்லை. சுங்கத்துறை அதிகாரிகள் துணையுடன் பெரிய திமிங்கலங்கள் தப்பித்தே வருகின்றன. இந்த நிலையில்தான், அரபு நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் ஓமன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் 100-க்கும் அதிகமான பயணிகள், கடத்தல் குருவிகளாக இருக்கிறார்கள். இவர்கள் கடத்தி வரும் பொருட்களின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அந்த அதிகாரி எடுத்த சீக்ரெட் ஆபரேசனில் தான் 113 கடத்தல் குருவிகள் சிக்கின. சென்னை விமான நிலைய வரலாற்றில் ஒரே விமானத்தில் வந்த கடத்தல்காரர் கள் 113 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்கிறது சுங்கத் துறை வட்டாரம். மத்திய அரசின் புலனாய்வுத்துறை வட்டாரங்களில் இந்த சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விசாரித்தபோது, ‘’"ஒரே விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களா?' என கேட்டமாத்திரத்திலேயே கடவுள் முருகன் பெயரை கொண்ட அந்த நேர்மையான சுங்கத்துறை அதிகாரி அதிர்ந்துபோனார்.
சுங்கத்துறையில் தனக்குக் கீழுள்ள அதிகாரிகளின் துணையில்லாமல் இவ்வளவு பெரிய கடத்தல் நடக்க வாய்ப்பில்லை என உணர்ந்த அவர், கடத்தல்காரர்கள் தப்பித்து விடாமல் இருக்க, விசயத்தை லீக் செய்யாமல் வைத்திருந்தார். அத னால் கடத்தல்காரர்களை பிடிக்கும் ஆபரேசனில், மத்திய வருவாய் புலனாய் வுத்துறையின் உதவியை கேட்டிருந்தார். அவர்கள் ஒப்புக்கொண்டனர். உடனடியாக வரு வாய் புலனாய்வுத்துறையினர் 15 பேர் சென்னை விமானநிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களு டன் இணைந்து தனது நம்பிக் கைக்குரிய சுங்கத்துறையினர் சிலருடன் காத்திருந்தார் அந்த நேர்மையான அதிகாரி. ஏர் போர்டில் ஏதோ அதிரடி ஆக் ஷன் நடக்கப்போகிறது என்கிற பரபரப்பு இருந்தது. சரியாக காலை 8 மணிக்கு ஓமன் ஏர் லைன்ஸ் சென்னையில் தரை யிறங்கியது. விமானத்தில் மொத் தம் 186 பயணிகள் இருந்தனர்.
மத்திய புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் பயணிகளிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. அதில் கடத்தலுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நபர்கள் என 73 பேர் தெரியவர, ஏர்போர்ட்டிலிருந்து வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கப் பட்டனர். மீதம் உள்ள 113 பயணிகளிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டார்கள். அவர்களின் பதில்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தன.
காலை 8 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 3 மணி வரை நீடிக்க, 113 பேரும் ஒத்துழைக்க மறுத்த நிலையில், உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பயணிகள் சாப்பிட்டு முடித்ததும், அவர்களி டம் சாத்வீகமாக அதிகாரிகள் விசாரிக்காமல் விசாரணையை சற்று கடுமையாக்க, அவர்களின் உடமைகளை பரிசோதிக்க அனுமதித்தனர். அப் போது தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ தங்கம், 120 ஐ-போன்கள், விலை உயர்ந்த மற்ற ப்ராண்ட் மொபைல்கள் 204, மடிக்கணினிகள் 60, வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ என விலை உயர்ந்த பல்வேறு கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 14 கோடி ரூபாய். அதைக்கண்டு மிரண்டு போனார்கள் அதிகாரிகள்.
113 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்ட னர். ஆனால், ஒரு நபரிடமிருந்து 1 கிலோ தங்கம் பிடிக்கப்பட்டால்தான் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளமுடியும். அதனால் இந்த கடத்தல்காரர்கள், 1 கிலோவுக்கு குறைவாகவே பிரித்துப் பிரித்து எடுத்து வருவதால் அவர்களுக்கு 37 சதவீத அபராதம் மட்டுமே விதித்து கடத்தி வரப்பட்ட தங்கம் அவர் களிடமே ஒப்படைக்கப் பட்டுவிடும். கடத்தல் காரர்களும் அபராதம் செலுத்திவிடுவதால் அவர்களை விட்டுவிடு கின்றனர். அப்படித்தான் இந்த சம்பவத்திலும் நடந்து கடத்தல்காரர்கள் 113 பேரும் தப்பித்து விட்டனர்''’என்று தெரிவிக்கின்றனர் சுங்கத் துறையினர்.
மேலும் நாம் விசாரித்தபோது, "வெளி நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதற்காக சென்னையில் சில முக்கிய ஏஜெண்டு கள் இருக்கிறார்கள். இவர்கள் சின்டிகேட் அமைத்துக்கொண்டு இந்த கடத்தலை செய்கின்ற னர். இதற்காக, பலரையும் குருவிகளாக மாற்றி, பயணிகள் போர்வையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் நிறைய விமானங்களில் இந்த குருவிகள் பறப்பார் கள். சமீபகாலமாக, தனி ப்ளைட்டை வாடகைக்கு எடுத்து அதில் கடத்தல் குருவிகளை அழைத்து வருகின்றனர் ஏஜெண்டுகள். அப்படித்தான் ஓமன் ஏர்லைன்சிலும் நடந்திருக்கிறது. கடத்தி வரப்படும் பொருளின் மதிப்பில் 10 சதவீதம் கமிஷனாக குருவிகளுக்குத் தரப்படுவதால், இத்தகைய கடத்த லில் விருப்பத்துடன் பலரும் ஈடுபடுகிறார்கள். இந்த கடத்தல் பிசினஸில் மட்டும் மாதம் 1000 கோடிக்கும் அதிகமாக புழங்குகிறது. சுங்கத் துறையினரின் சப்போர்ட் இல்லாமல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில், ஒரே விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் பிடிபட்ட சம்பவத்தில் அதிர்ந்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் அதிகாரி கள் எடுத்த நடவடிக்கையின் பேரில், சுங்கத்துறை யை சேர்ந்த 4 எஸ்.பி.க்கள், 16 இன்ஸ்பெக்டர்கள் என 20 அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்திருக்கிறது சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையரகம்''’என்கிறார்கள்.
-இளையர்