Advertisment

தடம் மாறும் போலீஸ்! தடுமாறும் வழக்கு! டி.என்.பி.எஸ்.சி. ஊழல்!

dd

2019, மார்ச் 1-ந் தேதி நடந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவைதான் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், குரூப் 1 தேர்வில் விடைத்தாள் மோசடி நடந்திருப்பது உண்மைதான் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை கொடுத்திருப்பது குறித்து நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்.…

Advertisment

tnpsc

""தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலிருந்தும் தலைநகர் சென்னையை நோக்கிவரும் ஏழை-எளிய மாணவர்கள்… அண்ணாநகர் போன்ற ஏரியாக்களில் அறை எடுத்தும் விடுதிகளில் தங்கியும் அரசுப்பணிக்காக இரவு பகல் பாராமல் பசி பட்டினியோடு கஷ்டப்பட்டு படித்துக்கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில்...…பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மோசடியாக தேர்ச்சிபெற்று உயர்பதவிகளை பிடித்தவர்களையும் அதற்கு துணையாக இருந்தவர்களையும் கண்டுபிடித்த tnpscபிறகும்கூட…மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அதிகாரிகள் இடமாற்றத்தால் விசாரணை தடம் மாறி, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 வினாத்தாள் லீக் மற்றும் வ

2019, மார்ச் 1-ந் தேதி நடந்த குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவைதான் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், குரூப் 1 தேர்வில் விடைத்தாள் மோசடி நடந்திருப்பது உண்மைதான் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை கொடுத்திருப்பது குறித்து நாம் விசாரிக்க ஆரம்பித்தோம்.…

Advertisment

tnpsc

""தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலிருந்தும் தலைநகர் சென்னையை நோக்கிவரும் ஏழை-எளிய மாணவர்கள்… அண்ணாநகர் போன்ற ஏரியாக்களில் அறை எடுத்தும் விடுதிகளில் தங்கியும் அரசுப்பணிக்காக இரவு பகல் பாராமல் பசி பட்டினியோடு கஷ்டப்பட்டு படித்துக்கொண்டிருக்கிறார்கள். இச்சூழலில்...…பணம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மோசடியாக தேர்ச்சிபெற்று உயர்பதவிகளை பிடித்தவர்களையும் அதற்கு துணையாக இருந்தவர்களையும் கண்டுபிடித்த tnpscபிறகும்கூட…மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அதிகாரிகள் இடமாற்றத்தால் விசாரணை தடம் மாறி, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 வினாத்தாள் லீக் மற்றும் விடைத்தாள் மோசடி வழக்கு தடுமாறிக்கொண்டிருக்கிறது'' என்று ஷாக் கொடுக்கிறார்கள் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடப்பதற்கு முன்பே சென்னை தி.நகரிலுள்ள அப்பல்லோ தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வினாக்கள் முன்கூட்டியே லீக்’ ஆகியிருப்பதையும், 2016 குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் அப்பல்லோ ஸ்டடி சென்டரைச் சேர்ந்த 62 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பûதையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம் ராஜேஸ்வரன் உள்ளிட்டவர்கள் முன்ஜாமீன் வாங்கிவிட்டதால், அதனை ரத்துசெய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், திடீரென்று அரசு தரப்பு வழக்கறிஞரோ, "சாம் ராஜேஸ்வரனின் பெயிலை கேன்சல் செய்யவேண்டாம். நேரில் ஆஜராகும்படி மட்டும் உத்தரவிட்டால் போதும்' என்று அந்தர்பல்டி அடித்ததால்தான் குரூப்-1 தேர்வு முறைகேடு விசாரணையில் பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசும் நேர்மையான மத்திய குற்றப்பிரிவு காக்கி ஒருவரோ, “""ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்தியஅரசுப் பணிகளுக்கு அடுத்ததாக மாநில அரசுப் பணிகளிலேயே மிகஉயர்ந்த பதவிகளான மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி., வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் tnpscஉள்ளிட்ட பதவிகளுக்காக 2016-ஆம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் 22 விடைத்தாள்களில் பதிவு எண்கள் அழிக்கப்பட்டு புதிதாக எழுதப்பட்டுள்ளது என்றும், மூன்றுபேரின் விடைத்தாள்களில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறுசில பக்கங்கள் இணைக்கப்பட்டதோடு, அந்த மூன்று விடைத்தாள்களிலும் ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பதும் தடயவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜெய்சிங் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஜூன் 1-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மாபெரும் மோசடிகளுக்கு காரணமானவர்கள் யார், யார் என்பதையெல்லாம் விசாரணையில் முன்கூட்டியே கண்டுபிடித்த மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளான டி.சி. ஷ்யாமளாதேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்டவர்களை இடமாற்றம் செய்துவிட்டு, உண்மைக்குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் தடம்மாறிக் கொண்டிருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்'' என்றார்.

lawyer PT Perumal

இதுபற்றி அவரிடம் மேலும் கேட்டபோது, ""சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குரூப்-1 தேர்வு முறைகேடுகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் திருநங்கை ஸ்வப்னா கார்த்திக். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், ‘இது குறித்து அறிக்கை தருமாறு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கும் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும் கடந்த 2017 ஆகஸ்டு 21-ந் தேதி உத்தரவிட்டார்.

அதற்குப் பிறகுதான் 2017 நவம்பர் 11-ந் தேதி அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்கள் டி.என்.பி.எஸ்.சி. செக்ஷன் ஆபீசர்கள் சிவசங்கரன் மற்றும் புகழேந்தி, தேர்வில் பாஸ் பண்ண வைக்க லஞ்சம் கொடுத்த ராம்குமார், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் பெருமாள் உள்ளிட்டவர்கள். செக்ஷன் ஆபீசர் காசிராம்குமார் 2018 ஏப்ரல் 26-ந் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டபோதுதான் அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுடன் சேர்ந்து குரூப்-1 தேர்வில் முன்கூட்டியே கேள்விகளை லீக் செய்ததும் விடைத்தாள்களை வெளியில் எடுத்து சரியான விடைகளை நிரப்பி வைத்து மோசடிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆனால், சாம் ராஜேஸ்வரன் கைது செய்யப்படாதது, தேர்தல் பணியைக் காட்டி இடமாற்றம் செய்யப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு திட்டமிட்டே பழைய பணி தராதது ஆகியவற்றால் விசாரணை தடைப்பட்டுள்ளது'' என்கிறார்.

சத்யம் தொலைக்காட்சிக்காக ஆஜரான பிரபல வழக்கறிஞர் பி.டி. பெருமாளோ, ""ஏழை எளிய மற்றும் உண்மையாக படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு உயர் பதவிகளில் அமரவேண்டும் என்றால் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மோசடியாக பதவியை பெற்றவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது விசாரணை செய்யும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளோ உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்'' என்கிறார் குற்றச்சாட்டாக.

குரூப்-1 தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கக்கோரி தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அகாடமிகளின் கூட்டமைப்பு சார்பாக மாணவர்கள் கடந்த 4-ந் தேதி வியாழக்கிழமை காலை அதிரடிப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

-மனோசௌந்தர்

படம்: அசோக்

nkn090719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe