"பாரம்பரியமா இவங்க குடும்பமே நம்ம கட்சிதாங்க.. கொண்ட கொள்கையில் ரொம்ப உறுதியானவங்க. கட்சி மேல ரொம்ப விசுவாசம் உள்ளவங்க..’ என்ற அடையாளமெல்லாம், உள்ளாட்சி தேர்தலில் ‘சீட்’ பெறுவதற்கான தகுதிகள் ஆகிவிடாது. ‘நீங்க யாரா இருந்தாலும் சரி! கோடிகளில் செலவழிக்க முடியுமா? சீட் கேளுங்க...''’ என்பதுதான், தி.மு.க. போன்ற கட்சிகளில் தேர்தல் நேர நடைமுறையாக இருக்கிறது.

விருதுநகர் மாவட்ட செய லாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் கூட, ‘"நான் இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சிருக்கேன். நான் பரம்பரை கட்சிக்காரன்னு சொல்லிட்டு யாரும் சீட் கேட்டு வந்துடாதீங்க. மூணு கோடியாச்சும் செலவழிக்க முடியுமா? சீட் கேளுங்க...''’என்று ஊழியர்கள் கூட்டங்களில் நிலைமையைத் தெளிவு படுத்திவிட்டனர்.

hh

விருதுநகர் மாவட்ட தலைநகரான விருதுநகரில் நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கான ஒதுக்கீட்டில் வருகிறது. ஆளும்கட்சியான தி.மு.க. சார்பில் விருதுநகரில் யாருக்கு வாய்ப்பு தரலாம் என்பது குறித்து அக்கட்சி பரிசீலித்து வருகிறது. தங்களது மனைவியை முன்னிறுத்தி களமிறங்கத் துடிக்கிறார்கள், இருவர்.

Advertisment

எஸ்.ஆர்.எஸ்.ஆர். மாதவன். அமரராகிவிட்ட இவருடைய அப்பா ராஜாக் கனி, இறக்கும் வரையிலும் 36 வருடங்களாக தி.மு.க. நகரச் செயலாளராக இருந்தார். தற்போது இவர் நகரச் செயலாளராக இருக்கிறார். ராஜாக்கனியின் தம்பி தன பாலன், இதுவரையிலும் அரசியலில் பெரிய பங்களிப்பு இல்லா விட்டாலும், கட்சி யில் பொறுப்பு எதுவும் இல்லை யென்றாலும், தி.மு.க. குடும்பத் தைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் இருக்கிறது. பிரதான தகுதியான பணபலம் உள்ளவரா? தொழில் பின்னணி எதுவும் இல்லையென்றாலும், கையிருப்பு கணிசமாக உள்ளது. அதுவும்கூட, ஒன்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட வேன் விபத்தில் மாமனார், மாமியார், மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் 10 பேர் பலியாகி, அவர்களது இறப்பின் மூலம் கிடைத்த இன்சூரன்ஸ் பணமும், மாதவனிடம் போய்ச் சேர்ந்த இறந்தவர்களது சொத்துகளும்தான்.

இன்னொருவர், கோகுலம் தங்கராஜ். ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே விருதுநகர் மக்களிடம் "கொடைவள்ளல்'’என பெயர் எடுத்தவர். கடந்த தேர்தலின்போது, அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்காமல் அ.ம.மு.க. வேட்பாளரானார். தனது சுய செல்வாக்கால் 7 சதவீத வாக்குகளைப் பெற்றார். விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு மூலம் தி.மு.க.வில் இவர் சேர முடிந்ததற்குக் காரணம், அந்த தாராள மனதுதான். கொரோனா காலகட்டத்தில், பட்டி தொட்டிகளிலும்கூட நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்களிடம் பரிச்சயமானவர் என்பது, இவருக்கு கூடுதல் தகுதியாக உள்ளது.

இருவருமே நகரில் கணிசமாக உள்ள நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கோகுலம் தங்கராஜ் கிறிஸ்தவ நாடார் என்றாலும், இந்து கோவில், மசூதி என மதப்பாகுபாடற்று நிதியுதவி வழங்கி வருபவர். தங்கராஜ் மனைவி மாலா, மாதவன் மனைவி அனிதா, இவர்களில் யார் சேர்மன் வேட்பாளர் என்ற கேள்வியை எழவைத்திருக்கிறது, உள்ளாட்சி தேர்தல் களம்.

Advertisment

ff

எந்தச் சூழ்நிலையிலும் தன்னை அனுசரித்துச் செல்பவர்களை மட்டுமே, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கைதூக்கி விடுவது வழக்கம். கட்சிக்கும் தொண்டர்களுக்கும் நன்றாக செலவழிக்கக்கூடிய செல்வாக்கானவர்களை வளர்த்துவிடுவார், தங்கம் தென்னரசு. ஆக, மாவட்ட செயலாளர்கள் இருவருக்கும், விருதுநகர் சேர்மன் வேட்பாளர் தேர்வில் ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பாசத்துக்குரிய விருதுநகர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கோ, "மாலா சேர்மன் ஆகிவிட்டால் அடுத்து எம்.எல்.ஏ. சீட்டும் கேட்பாரே கோகுலம் தங்கராஜ்? விருதுநகர் கையைவிட்டுப் போய்விடுமே?'’என்ற சந்தேகம் ஆட்டிப்படைக்கிறது.

விருதுநகர் நகராட்சியைக் கைப்பற்றுவோம் என்ற கனவு அ.தி.மு.க.வுக்கு இல்லாமல் இல்லை. ஆனாலும், தி.மு.க. வேட்பாளர்களே பேசப்படுபவர்களாக உள்ளனர். யார் சேர்மனானால் ஊருக்கு நல்லது? என்பதை மக்கள் அறிந்திருந்தாலும், அரசியல் ஆட்டமும் இருக்கிறதே!