மிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும் அவர்களை கௌரவப்படுத்துவதிலும் அக்கறையாக இருக்கிறது தி.மு.க. அரசு. அந்த வகையில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகள் 21 பேர்களுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம், ஆதிதிராவிடர்- பழங்குடியினரின் இலக்கிய மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.50 லட்சம் வைப்புத் தொகையுடன் தனி நிதியம் உருவாக்கி யிருக்கிறது தமிழக அரசு. இந்த வைப்புத்தொகை யிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தின் சிறந்த படைப்பாளிகள் 10 பேருக்கும், இந்த சமூகத்தைச் சாராத ஒருவருக்கும் ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

cc

Advertisment

அந்தவகையில், கடந்த இரண்டாண்டுகளுக்கான சிறந்த படைப்பாளிகளைத் தேர்வுசெய்வது குறித்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசென்றது ஆதிதிராவிடர் நலத்துறை. இலக்கியத்தின் மீது பற்றுக்கொண்ட முதல்வர், சிறந்த படைப்பாளிகளை உடனடியாக தேர்வுசெய்யுங்கள் என துறையின் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, படைப்பாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பினை ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்திடம் ஒப்படைத்தார் துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன் ஐ.ஏ.எஸ்!

Advertisment

அதன்படி, 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காக முருகேசன், கடலூர் கு.வாஞ்சிநாதன், ஆர்.இலங்கேஸ்வரன், திருமதி பிரியா வெல்சி, கே.சுப்பிரமணி, முனைவர் பி.சிவலிங்கம், திருமதி பானு ஏழுமலை, பொன்.மணிதாசன், யாக்கன், ஆர்.காளியப்பன், முனைவர் ந.வெண்ணிலா ஆகிய 11 எழுத்தாளர்களின் நூல்களையும், 2021-2022ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காக எஸ்.கே.அந்தோணிபால், த.மனோ கரன், இரா.நாகராஜ், கருவூர் கன்னல், அன்புதீன், தங்க செங்கதிர், அ.ப.காரல் மார்க்ஸ், த.கருப்பசாமி, முனைவர் தமிழ்ச்செல்வி, முனைவர் மதிவேந்தன் ஆகிய 10 எழுத்தாளர்களின் நூல்களையும் தேர்வு செய்திருந்தது கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம்.

வெற்றிபெற்ற எழுத்தாளர்கள் 21 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுத் தொகையில் முதல்கட்டமாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி கௌரவித்த முதல்வர் ஸ்டாலின், “"இதுபோன்ற சிறந்த நூல்களைத் தொடர்ந்து எழுதவேண்டும்''’என்று பாராட்டினார்.

"களம் கண்ட தமிழ்' என்ற நூலுக்காக சிறந்த எழுத்தாளராகத் தேர்வுசெய்யப்பட்ட கடலூர் கு.வாஞ்சிநாதனிடம் பேசியபோது, “"இலக்கியத்தில் சிறந்த படைப்பாளிகளை ஊக்குவிப்பதிலும் கௌரவப்படுத்து வதிலும் தி.மு.க. அரசுக்கு நிகராக எந்த அரசும் இருந்ததில்லை. கலைஞரைப்போல நமது முதல்வரும் இலக்கியத்தின் மீது பாரம்பரியமாக தீராத காதல் கொண்டவர். அவரது கையால் பாராட்டுச் சான்றிதழ் பெறுவது பெருமையாக இருக்கிறது''’என்றார்.