தொழில்நுட்பம், படை பலம் என பலவற்றிலும் அமெரிக்காவுக்குப் போட்டியாக உருவெடுத்திருக்கும் சீனா, சர்வதேச கரன்சியாகப் பார்க்கப்படும் டாலரை ஓரம்கட்டி தங்களது யுவானை அந்த இடத்தில் அமர்த்த நெடுநாட்களாகவே காத்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகமெங்கும் காலனி நாடுகளை வைத்திருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஓரம்கட்டிவிட்டு, அமெரிக்காவும் ரஷ்யாவும் பலம்வாய்ந்த நாடுகளாக உருவெடுத்தன. தங்களது கரன்சியான டாலரை மெல்ல மெல்ல சர்வதேச நாடுகளின் கரன்சியாக ஏற்றுக் கொள்ளச் செய்தது அமெரிக்கா. இன்றைக்கு உலகில் ஏற்றுமதி- இறக்குமதியில் இருக்கும் எந்தவொரு நாடும் டாலரின் மூலமே பணப்பரிமாற்றம் செய்துகொள்கின்றது.

u

இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் நாடாகப் பார்க்கப்பட்ட சீனா, 90-களுக்குப் பின்பு மெல்ல மெல்ல வணிகம், தொழில்நுட்பம், உற்பத்தி போன்றவற்றில் அசுரப் பாய்ச்சல் காட்டத்தொடங்கியது. ஜி ஜின்பிங் 2012-ல் சீனாவின் அதிபர் பதவிக்கு வந்தபின் சீனாவின் வளர்ச்சி வேகம் ஆண்டுக்காண்டு அதிகரித்துவருகிறது.

Advertisment

2024-ல் சீனாவின் ஜி.டி.பி. 18.80 டிரில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் இரண் டாவது பெரிய பொருளா தாரமாக மாறிய சீனா வெகுவேகமாக முதலிடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் விரைவில் டாலரைப் பின்னுக்குத் தள்ளி சீனாவின் யுவான் சர்வசதேச நாணயமாக முடிசூடும் என சில பொருளாதார அறிஞர்கள் கருதுகிறார்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங் கள், உலகின் அடிப்படை மருத்துவ மூலக் கூறு உற்பத்தியில் சீனாவே முன்னணியில் இருக்கிறது. உலகின் மிகப்பெரும் ஸ்டீல் உற்பத்தியாளர் சீனா. உலகின் மொத்த ஸ்டீல் உற்பத்தியில் 54% சீனாவில்தான் தயாராகிறது. இதுதவிர்த்து ரோபோட்டிக்ஸ், கனிம உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் துறை, எலெக்ட்ரிக் கார், ஆட்டோமொபைல் போன்ற பல உற்பத்தித் துறையிலெல்லாம் சீனாதான் கோலோச்சுகிறது. அதாவது பொருளாதாரத்திலும் படைபலத்திலும் பெரிய நாடே, பெரியண்ணன் கதாபாத்திரம் வகிக்கமுடியுமென்றால், அதிலும் சீனா முன்னணியிலே இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாகவே ஏ.ஐ. உரு வாக்கத்தில் அமெரிக்கா பாய்ச்சல் காட்டி வந்தது. கூகுளின் ஜெமினி, எலான் மஸ்கின் க்ரோக், மைக்ரோசாஃப்டின் காபிலாட் என உலகின் விழி களை விரியவைத்து வந்தது. இந்த ஏ.ஐ. செயலிகளை உருவாக்க அமெரிக்க நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவிட்டது. அந்த சமயத்தில் சீனா வெறும் 5.6 மில்லியன் டாலர் செலவில், அமெரிக்காவின் ஏ.ஐ. செயலிகளுக்கு மாற்றாக டீப்சீக் என்ற செயலியை உருவாக்கிக் காட்ட, அன்றைக்கு அமெரிக்க பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவைக் கண்டது.

Advertisment

us

சமீபத்தில் ஐந்து நிமிடத்தில் சார்ஜ் செய்து 470 கிலோமீட்டர் பயணிக்கும் வசதியை தனது காரில் கொண்டுவந்து விட்ட தாக பி.ஒய்.டி. கார் தயாரிப்பு நிறுவனம் தெரி வித்துள்ளது. இது ஒரு சீன நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தரப்பிலிருந்து பார்த்தால், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபின் தங்கள் நாடு களுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளுக் கெல்லாம் வரிவிதித்தார். கச்சா எண்ணெய் வணிகத்திலிருக்கும், அமெரிக்காவுக்கு ஆகாத வெனிசுலா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளின் கச்சா எண்ணெய் வணிகத்தில் இடைஞ்சலை உருவாக்கினார்.

இந்தியாகூட, ட்ரம்பின் நடவடிக்கை யால் வெனிசுலா, ரஷ்ய நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக்கொண்டு அமெரிக்க கச்சா எண்ணெயை வாங்குவதை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விற்பனையிலிருக்கும் ரஷ்யா, ஈரான், வெனிசுலா நாடுகள் அமெரிக் காவின் மீது கோபத்தில் உள் ளன. உக்ரைன் விவ காரத்தில் ட்ரம்ப் பின்வாங்கியதில் ஐரோப்பிய நாடு களுக்கு, அமெரிக்கா மீது வருத்தமே.

கூடுதலாக, நுகர்வுக் கலாச் சார நாடாகிய அமெரிக்கா பெருமளவு கடனை வாங்கிக் குவித்துவைத்திருக்கிறது. அதா வது நாட்டை நிர்வகிக்க கடன் வாங்கியதுபோய், வாங்கிய கடனுக்கான வட்டிகட்டவே கடன் வாங்கும் நிலை. கிட்டத்தட்ட ஒரு அமெரிக்கன் தலை யில் 90 லட்சம் டாலர் கடன் உள்ளது. இது பொருளாதாரத்தில் அபாயகரமான அறிகுறி. ஒரு நாடு திவாலாகும் நிலையைக் குறிப்பது.

ஆசியாவின் 10 நாடுகள், மத்திய கிழக்கின் 6 நாடுகளுடன் எம்பிரிட்ஜ் நாணயப் பாலம் எனும் நடைமுறை மூலம் புதிய பரிவர்த்த னையை ஏற்படுத்த முயன்றுவருகிறது. ஹாங் காங்- அபுதாபியிடையே இந்த பரிவர்த்தனை முறை பயன்படுத்தப்பட்டதில், அமெரிக்காவின் சர்வதேச நிதிப் பரிவர்த்தனை முறையான ஸ்விப்டைவிட விரைவாகவும், சிக்கனமாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது நிதிப் பரிவர்த்தனையில் அமெரிக்காவின் நடைமுறைக்கு மாற்றாக, ஒரு தொழில்நுட்ப மாதிரியை சீனா கட்டி யெழுப்பப் பார்க்கிறது. ஆனாலும், ஒரே நாளிலோ, ஒரே மாதத்திலோ அமெரிக்காவின் டாலருக்குப் போட்டியாக யுவான் எழுந்து வந்துவிடப் போவதில்லை.

பெரியண்ணன் என்றாலும் அமெரிக்கா ஜனநாயக நாடு. அதிபர் வழிமாறிப்போனால் நீதிமன்றம் எதிர்க்கட்சிகள் இழுத்துப் பிடிக்கும். சீனா போன்ற நாட்டில், ஜின்பிங்கை யார் தட்டிக் கேட்கமுடியும்? ஜின்பிங் வழிதவறி னால் சீனாவில் அவரைக் கட்டுப் படுத்த யார் இருக்கிறார் என் பது போன்ற ஐயங்கள் யுவானை சர்வதேச நாணய மாக ஏற்பதில் தயக் கத்தை ஏற்படுத்து கிறது. டாலரின் கிரீடத்தை யுவான் தட்டிப்பறிக்குமா?