Advertisment

நச்சு உணவுப் பொருட்கள்! அதிகாரிகள் அலட்சியம்!

ff

திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீரென பிளாஸ்டிக் கவர்களைப் பறிமுதல் செய்ய ரெய்டு நடத்தினர். திருவண்ணா மலையில், சிவன் பட வீதி தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். அங்கே பரந்து விரிந்த குடோனில், பயன்படுத்தக்கூடாத வகை யைச் சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

ff

அதன் உரிமையாளர் கலெக்டரிடம், "ஜி.எஸ்.டி. கட்டிட்டு தான் இந்தப் பொருளை வாங்கு றேன், அதெப்படி குற்றமாகும்? இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க?'' எனக் கேள்வி எழுப்பினார். "தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க வாங்கிய இடத்தின் முக வரியை சொல்லுங்க'' என கலெக்டர் கேட்டதும், ஏதேதோ சொல்லி மழுப்பி னார். அந்த ஒரு குடோனிலிருந்து மட்ட

திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீரென பிளாஸ்டிக் கவர்களைப் பறிமுதல் செய்ய ரெய்டு நடத்தினர். திருவண்ணா மலையில், சிவன் பட வீதி தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். அங்கே பரந்து விரிந்த குடோனில், பயன்படுத்தக்கூடாத வகை யைச் சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

ff

அதன் உரிமையாளர் கலெக்டரிடம், "ஜி.எஸ்.டி. கட்டிட்டு தான் இந்தப் பொருளை வாங்கு றேன், அதெப்படி குற்றமாகும்? இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க?'' எனக் கேள்வி எழுப்பினார். "தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க வாங்கிய இடத்தின் முக வரியை சொல்லுங்க'' என கலெக்டர் கேட்டதும், ஏதேதோ சொல்லி மழுப்பி னார். அந்த ஒரு குடோனிலிருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்துள்ளனர். பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்வதுபோல், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கோரிக்கை விடுக் கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் விமிதா, "ஸ்ரீவாரி ஹைபர் மார்க்கெட்டில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை நானும் என் கணவரும் மார்ச் 1ஆம் தேதி வாங்கும்போது, டாடா குளுக்கோ டிரிங்க் வாங்கிக் குடித்தேன். குடித்த இரண்டே நிமிடத்தில் தொண்டை எரிய ஆரம்பிச்சது. அதன் எக்ஸ்பயரி டேட் பார்த்தபோது, தேதி முடிந்து 14 நாட்களாகி யிருந்தது. ஏன் எக்ஸ்பயரி தேதி முடிந்ததை எனக்கு வித்திருக்கீங்கன்னு கேட்ட துக்கு, பிரச்சனை செய்யாமல் போங்கன்னு மிரட்டினாங்க ஊழியருங்க. தொண்டை வலி அதிகமானதால் அப்போதே மருத்துவரை பார்த்தேன். ஃபுட் பாய்ஸனாகி 4 நாள் லீவு போட்டுட்டு ட்ரீட்மெண்ட் எடுத்தேன். இதுவே குழந்தைகள் குடித்திருந்தால் என்ன வாகறது?'' என்றார்.

Advertisment

ff

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சுமன் நம்மிடம், "எனக்கு தகவல் தெரிந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலரிடம் முறையிட்டபோது, நாளை வாங்கன்னு சொன்னாருன்னு பாதிக்கப்பட்டவர்கள் மறுநாள் அவரைப்போய் சந்திச்சாங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா, போய் வேலையப் பாருங்கன்னு அலட்சியமாகப் பதில் சொல்லியுள்ளார். பிரச்சனை பெரிதானதும் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம் விதித்திருக்கார். அவங்க நடந்துக்கிட்ட முறைக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

வியாபாரிகள் சிலரிடம் பேசியபோது, "தமிழ்நாட்டின் பெருநகரங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வியாபாரத்தை மட்டுமே பார்க்கின் றன, மக்கள் உடல்நலன் மீது அக்கறையே இருப்பதில்லை. அவர்களைவிட மோசமாக இருக்கிறார்கள் வடமாநில வியாபாரிகள். தொடக்கத்தில் எலக்ட்ரானிக்ஸ், பெயின்ட் என வீட்டு உபயோகத்துக்கு தேவையான டூப்ளிக்கெட் பொருட்கள் விற்பனையில் கால் பதித்தவர்கள், இப்போது உணவுப் பொருட்கள் விற்பதிலும் ஈடுபடுகிறார்கள். மிக்சர், பால்கோவா, கேக்குகள், பாஸ்ட்புட் கடைகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் போன்றவற்றை வட மாநிலத்திலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரியும், புகார் வரட்டும், அதன்பின் நடவடிக்கை எடுக்கலா மென்று கண் டும் காணாமல் இருக்கிறார்கள்'' என்றார்கள்.

திருவண்ணா மலையை சேர்ந்த சமூக ஆர்வலர், வழக்கறிஞர் பாசறை.பாபு, "மூன்று நாட்களுக்கு மேல் எந்த உணவுப் பொருளும் கெட்டுவிடும். கெடாமல் இருப்பதற்காக அதில் பலவிதமான ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. அப்படி கலக்கப் படும் உணவுப் பொருட்களை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் வாங்கித் தருகிறோம். இந்த உணவுப் பொருட்களை உண்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாயால் கேன்சர் வருவது உறுதியாகி மாநில அரசு பஞ்சு மிட்டாயை தடை செய்தது. நீங்கள் எந்த மொத்த வியாபாரக் கடைக்கு போனாலும் பாக்கெட் பாக்கெட்டாக உணவுப் பொருட்கள் இருக்கும், அவை பெரும்பாலும் தரமற்றவை. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலில் தண்ணீர் கலந்தாலே ஒரு வழக்கு போட்டு அலையவிடும் உணவுப் பாதுகாப்புத்துறை. இப்போது உயிர்ப்பலியே நடந்தாலும் கண்டு கொள்வதில்லை'' என்றார் கோபத்தோடு. உயிருக்கு கேடு விளைவிக்கும் நச்சான, கெமிக்கல் உணவு வகைகளைத் தடைசெய்ய வேண்டும்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

ff

nkn200324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe