மிழ்நாட்டில் 371 பஞ்சாயத்துகளை அருகிலுள்ள நகராட்சி, மாநராட்சியுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கு மாநிலம் முழுவதுமிருந்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களி லிருந்து எதிர்ப்புகள் கிளம்பிவருகிறது

தென்காசி நகராட்சியோடு மேலகரம், மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பேரூராட்சிகளை இணைப்பதற்கான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் வெளியான உடனேயே குற்றாலம் பேரூராட்சிக் கவுன்சில் தன்னுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் பேரூராட்சியின் தலைவர் கணேஷ் தாமோதரன் ஜன-03 அன்று கவுன்சிலின் அவசரக் கூட்டத் தைக் கூட்டியிருக்கிறார். அந்த அவசரக் கூட்டத்தில் பேரூராட்சியின் 8 கவுன்சிலர்களில் 6 கவுன்சிலர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

Advertisment

kk

தலைவர் கணேஷ் தாமோதரன், துணைத் தலைவர் தங்கபாண்டியன், செயல் அலுவலர் சுஷாமா உள்ளிட்டோருடன் ஜோகிலா, கிருஷ்ண ராஜா, மாரியம்மாள், ஜெயா உள்ளிட்ட கவுன் சிலர்களும் பங்கேற்றி ருக்கிறார்கள். கூட்டத் தில் குற்றாலம் பேரூ ராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக் கக்கூடாது என்று மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அவசரத் தீர்மானத் தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

குற்றாலம் ஆரம்பகாலங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது டவுண்ஷிப் என்ற சிறப்பு அந்தஸ்திலிருந்தது. பின்னர் 1955-ல் குற்றாலம் ஊராட்சியாகி, 1997-ல் சிறப்பு நிலை பேரூராட்சி அந்தஸ்திற்கு உயர்ந்தது என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்கீழ் நிர்வாகம் செயல்படுவதைப் போன்று 8 வார்டுகளைக் கொண்ட குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியின் தலைவர் அ.தி.மு.க.வின் கணேஷ் தாமோதரன் தவிர தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் இங்கே சமநிலையிலிருக்கிறார்கள்.

Advertisment

நிலையான தொழில் என்றில்லாமல், அருவிகளின் சீசனுக்காக வருகிற சுற்றுலாப் பயணிகளைச் சார்ந்தே இந்நகரவாசிகளின் பிழைப்பு. சீசன் முடிகிறபோது குறிப்பிட்ட சில மாதங்கள் வருமானத்திற்கு கேள்விக்குறிதான்.

தீர்மானம் நிறைவேறியபின்பு பேசிய பேரூராட்சியின் தலைவரான கணேஷ் தாமோதரன்,

"தென்காசி நகராட்சியோடு இணைப்பு என் றானால் குற்றாலத்தின் தனித்தன்மை மங்கி விடும். நிதிப் பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டால் குற்றாலத்திற்கான பணிகள் செய்ய இய லாமல்போகும். 8 வார்டுகளைக் கொண்ட குற்றாலம் ஒரு வார்டாக வரையறுக்கப்பட்டு, மக்களின் பிரதிநிதித்துவமான கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் குறைவதால் மக்கள் பணி சீர்குலைந்துவிடும்.

அன்றாடம் வந்துசெல்கிற லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள், நகரவாசிகளின் சுகாதாரம், குடிநீர் விநியோகப் பணிகள் நிதியின்றி சீர்கெட்டுப் போகும். அதனால் தென்காசி நகராட்சியுடன் இணைக்கப்படக்கூடாது என்று இந்த மன்றம் எதிர்க்கிறது''’என்றார் அழுத்தமாக.

Advertisment

அருவிகளின் நகர மேம்பாடுகள், செயல் பாடுகளை உள்ளங்கையில் வைத் திருக்கும் கவுன்சிலரும் வழக்கறிஞரு மான குமார் பாண்டியன், "அருவி களுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கார் பார்க்கிங், குத்தகை, ஆயில் மசாஜ், லாட்ஜ் மற்றும் சொத்து வரி என்று வருடத்திற்கு மூன்றரைக் கோடிகள் வருகிற இனங்கள், மற்றும் நகரியத்திற்கென்று வழங்கப்படுகிற சுற்றுலாத்தல மைய சிறப்பு நிதி என்று வரப்பெறுகிற மொத்த நிதியைக் கொண்டுதான் நகர மக்களின் அடிப்படை வசதிகள், சுகாதாரக் கட்டமைப்புகளை மேற்கொள்வதோடு, அன்றாடம் வந்துசெல்கிற சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளையும் செம்மையாகச் செய்துவருகிறோம். இதற்காகவே 67 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குற்றாலம் க்ளீன் சிட்டியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குற்றாலம், தென்காசி நகராட்சியோடு இணைப்பு என்று வந்தால் வருகின்ற நிதிகளனைத்தும் அங்கே சென்றுவிட, பராமரிப்பு நிதிக்காக குற்றாலம் ஏங்கித் தவிக்க வேண்டியதாகிவிடும். குற்றாலத்தின் தற்சார்பு, சுயசார்புகள் அறவே அற்றுப் போய்விடும்.

தற்போதைய 8 வார்டுகள் சுருக்கப்பட்டு ஒரு வார்டாகிறபோது ஒரு கவுன்சிலரால் 8 கி.மீ. சுற்றளவு பரந்து விரிந்துகிடக்கிற ஏரியாவின் மக்கள் நலன்களைப் பராமரிக்க இயலுமா? தென்காசியின் ஒரு கி.மீ.க்கும் குறைவான தொலைவைக் கொண்ட அருகிலுள்ள ஹவுசிங் போர்ட் காலனி, குத்துக்கல்வலசை ஊராட்சிகளை இணைக்காமல் 6 கி.மீ. தள்ளியுள்ள குற்றாலத்தை இணைக்க முற்படுவது ஏன்?''’என்றார் புருவங்களை உயர்த்தியபடி.

குற்றால நகர வியாபாரிகளின் சங்க தலைவ ரான அம்பலவாணன், “"அருவிக்கரை மற்றும் பிற பகுதிகளின் சிறுகடைகள் என்று 400-க்கும் மேற் பட்ட எங்களின் கடைகளின் வியாபாரமே சீசன் சுற்றுலாப் பயணிகளை நம்பித்தானிருக்கு. மூன்று மாத சீசன் மற்றும் 2 மாதம் ஐயப்ப பக்தர்களின் வருகை என்று வருடத்தில் 5 மாதம் மட்டுமே எங்களுக்கான வருமான ஆதாரம். மிஞ்சிய ஏழு மாதங்களில் எதுவுமே கிடைக்காத எங்களின் நிலையறிந்து தான் குற்றாலம் பேரூராட்சி கடை களுக்கான வரியை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த வரி யையே செலுத்த நாங்கள் திணறு கிறபோது குற்றாலத்தை தென் காசியோடு இணைத்தால் கடை களின் வரி இரண்டு மடங்காகிவிடும். அப்ப எங்க நிலைமை என்னாகுமோ யோசிச்சுப் பாருங்க''’என்றார் குரலை உயர்த்தி.

"எங்க வூட்டுக்காரரு பென்சன வைச்சுத்தான் எங்க பொழப்பு ஓடுது. பேரூராட்சியோட ஆயிரத்து இருநூறு ரூவா தீர்வையையே கட்ட முடியாமத் தெணறுறோம். நகராட்சியானா, அந்தவரி, இந்தவரின்னு வருவாகளே. அதக் கட்ட எங்க கிட்ட என்ன இருக்கு''’என்றார் வள்ளியம்மாள் பரிதாபமாய்.

குற்றாலவாசிகளின் மனக்குறையை அரசு பரிசீலிக்குமா?

-ப.இராம்குமார்