ந்தியாவில் உள்ள சுற்றுலாத்தளங்களில், தமிழகத்தி லுள்ள மாமல்லபுரம் மிகவும் தனித்துவமானதாகத் திகழ்கிறது. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர் பாக வருகைபுரிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் பல இடங்கள் இருந்தும் தமிழகத் திலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தார். மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டுப் பயணிகளும், வெளிமாநிலப் பயணிகளும் தினமும் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.

bar

இத்தகைய சிறப்புவாய்ந்த மாமல்ல புரத்தில் சுற்றுலா அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சக்திவேல். இவர் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகத்திற்கே வராமல், தொலைபேசி மூல மாகவே அலுவலகத்தை நடத்தி வருகிறாராம். வேளச்சேரியில் இவருக்கு சொந்தமாக "டிப் 42' என்ற பெயரில் மதுபான பார் உள்ளது. அதுபோல கீழ்க்கட்டளை மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் மதுபான பார்களை இவர் நடத்திவருவதால், முழு நேரமும் தனது சொந்த பிசினஸே கண்ணாக இருக்கிறாராம். மதுபான பார் பிசினஸே கதியென்று இருப்பதால் சுற்றுலா அலுவலகத்துக்கு வருவதில்லையாம்.

அவர் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணும்கூட அவரது "டிப் 42' மதுபான பாரின் பெயரிலேயே உள்ளது. தனது சொந்த ஊரான கரூர் அருகாமையிலுள்ள நாமக்கல்லில் பணிபுரிந்து வந்த இவர், சென்னையிலுள்ள பார்களை தனது நேரடிப் பார்வையில் பார்த்துக்கொள்வதற்காகவே மாமல்லபுரத்திற்கு பணிமாறுதல் பெற்று வந் துள்ளாராம். இதனால் சுற்றுலா மேம்பாட்டுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமல் தனது மதுபான பாரை கவனித்துக்கொள்வதோடு, பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளோடு இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்து வருகிறாராம். இவர் இவ்வளவு செய்தும் தனது தவறுகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்கு செய்யும் தில்லாலங்கடி தனி ரகம்.

இவர் குறித்த விவகாரம் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரியின் பார்வைக்கு வராத படி, அங்குள்ள அலுவலர்களிடம், சுற்றுலாத் துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவரென்று சொல்லி, பில்டப் கொடுத்து மறைக்கிறாராம். இதனால் எதுக்கு வம்பு என்று மற்ற அலுவலர்கள் இந்த சக்திவேல் குறித்து எதுவும் முணுமுணுப்ப தில்லையாம். இதில், சுற்றுலாத்துறை அமைச்ச ருக்கு இந்த சக்திவேல் யாரென்றே தெரியாது என்பதுதான் ஹைலைட்டே என்கிறார்கள் உடன் பணிபுரியும் சுற்றுலாத்துறை அதிகாரிகள். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை வெளிப்படுத்துவதிலும், அதனை பெருமைப் படுத்துவதிலும் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இதை இன்னும் முன்னேற்றுவதற்காக, '2023 -சுற்றுலா கொள் கை'யை வெளியிட்டு, தமிழ்நாட்டின் பெருமை யை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவதற்காக முதல்வரும், துறை அமைச்சரும் பாடுபடும் வேளையில், இவர் போன்ற மோசமான அதிகாரி களால் இத்துறை பின்தங்கி தமிழ்நாட்டின் பெருமையே பின்னடைவைச் சந்திக்குமென்று கொந்தளிக்கிறார்கள் சுற்றுலாத்துறை சார்ந்தவர் கள்.

Advertisment