னது நடிப்பு வேட்கைக்கு தீனியாக அமைந்த படம் "ஆடை'’என்பதால்... இந்த பட வெளியீட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அமலா பால். படத்திற்கான சம்பளத்தில் அட்வான்ஸ் தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு நடித்த அமலாபால்... படத்தின் ரிலீஸ் நேரத்தில் சிக்கல் வந்தபோது... தனது சொந்தப் பணத்தில் பெரும் தொகையையும் கொடுத்து உதவினார்.

இந்தப் படத்தை வெளியிட தமிழகம் முழுக்க கமிட் ஆகியிருந்த தியேட்டர் உரிமையாளர்கள்... ரிலீஸ் நேர சிக்கலைப் பார்த்து ‘படம் வருமா? வராதா?’ என பதட்டப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அமலாவின் அதிரடியான உதவியால் படம் சொன்ன தேதியில் வெளியானது.

tt

Advertisment

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர்... ""கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க நடந்த பஞ்சாயத்தில் கூடவே இருந்து... தன் சொந்தப்பணம் 21 லட்சத்தையும் கொடுத்து உதவி... படத்தை திட்டமிட்டபடி வெளிக்கொண்டுவர முயற்சி மேற்கொண்டார் அமலாபால். எங்கள் தியேட்டர் சங்கம் சார்பில் நான் அமலாபாலை மனதார பாராட்டுகிறேன். விஜய்சேதுபதி தனது படங்களின் ரிலீஸ் நேர சிக்கலின்போது... உடனிருந்து உதவுவார். அதேபோன்ற நல்ல மனம் அமலாபாலுக்கும். அதனால் அமலாவை "பொம்பள விஜய்சேதுபதி' என்றுகூட சொல்வேன்'' என நெகிழ்ந்து பாராட்டினார்.

இதுபோல் தயாரிப்பாளர்கள், சினிமா வர்த்தகர்கள் அமலாவை பாராட்டியுள்ளார்கள். கூடவே அமலாவின் "ஆடை'’பட நடிப்புத் திறமையும் பாராட்டப்பட்டு வருகிறது.

இது... அமலா பாலுக்கு மகிழ்ச்சி!

Advertisment

விமர்சகர்களால் மிகவும் பாராட்டப் பட்டபோதும்... மக்களிடம் "ஆடை'’படத்திற்கு பெரிய அள வில் வரவேற் பில்லாமல் போனது ஏமாற்றமாகவே அமைந்திருக் கிறது. இது பெண்களின் பிரச்சினைகளை பேசும் படமாக இருந்தபோதும்... "நிர்வாணமாக நடித்திருக்கிறார்'’ என கடந்த ஒருமாதமாகவே செய்யப்பட்ட புரோமோ... தியேட்டருக்கு பெண் பார்வை யாளர்களின் வருகையை தடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் இண்டஸ்ட்ரியில்.

""வித்தியாசமான படமாக இருந்தபோதும், அமலா பால் மிகச் சிறப்பாக நடித்திருந்த போதும்..படத்தின் கருத்து மக்களால் ஏற்கப்படவில்லையோ என்னவோ? அதனால் வசூல் எதிர்பார்த்தபடி இல்லை. விக்ரமோட "கடாரம்கொண்டான்'’படம் முதல்வாரத்துல தமிழ்நாடு தியேட்டர்கள் மூலமா 19 கோடி ரூபாய் வசூல் செஞ்சிருக்கு. ‘"லயன் கிங்'’ ஹாலிவுட் படமும் நல்ல வசூலைத் தருது. இந்தப் படங்களைப் பார்த்திட்டு வெளியே வரும்போது ஒண்ணுமே இல்ல. ஆனா... தியேட்டருக்குள்ள உட்கார்ந்திருக் கும்போது ரசிகன் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கான். இப்ப அதுதானே ட்ரெண்ட்டா இருக்கு...'' என்கிறார் திருச்சி ஸ்ரீதர்.

இது... அமலாபாலுக்கு அதிர்ச்சி!

a

மிதாப்பச்சன் சிறப்புத் தோற்றத்தில் வக்கீலா நடிச்ச "பிங்க்'’இந்திப் படம் பெரிய வெற்றி. அதோட தமிழ் ரீ-மேக்தான் "நேர்கொண்ட பார்வை'. அமிதாப்பச்சன் ஏற்ற வேஷத்துலதான் அஜித் நடிச்சிருக்கார். ஆனால்... அஜித் ரசிகர்களுக்காக இதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்த்திருக்கார் டைரக்டர் ஹெச்.வினோத். இந்திப் படத்தை விட கிட்டத் தட்ட 25 நிமிஷ காட்சிகள் கூடுதலா சேர்க்கப் பட்டிருக்கு. அஜித், வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே... என வித்தியாசமான காம்பினேஷனில் படத்தை தயாரிச்சிருக்கார் ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர். படத்திற்கு இதனால் எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கு.

இது... போனிகபூருக்கு மகிழ்ச்சி!

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் ஹெச்.வினோத் போனிகபூர் கூட்டணியில் இன்னொரு படம் தயாராகவிருக்கிறது. இதனாலும், ஏற்கனவே அஜித்தின் ‘"விஸ்வாசம்'’ வசூலை அள்ளியதாலும்... "நேர்கொண்ட பார்வை'யின் வர்த்தகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்தார் போனிகபூர். ஆனால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதாம்.

“அஜித்தின் "விஸ்வாசம்'’ படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ் சுமார் 46 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார். 70 கோடிவரை வசூல் செய்தது. அந்த முன்னுதாரண அடிப்படையில் நானும், பிரபல தயாரிப்பாளரான ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ கே.முரளிதரனும் ‘"நேர்கொண்ட பார்வை'’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை 40 கோடி ரூபாய்க்கு விலை பேசி, 10 கோடி ரூபாய் முன்பணம் தரவும் தயாராக.. போனிகபூரிடம் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால்... போனிகபூர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையே புரிந்துகொள்ள முடியாதபடி பூடகமாக பேசினார். அதனால் படத்தை வாங்கும் திட்டத்திலிருந்து விலகி நிற்கிறோம்'' என்கிறார் திருச்சி ஸ்ரீதர்.

இப்போது இந்த உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் கூடுதலாக சில கோடிகளைக் கொடுத்து பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண் டிருக்கிறது. ஆனால்... விஜய் நடித்த "நண்பன்' உட்பட சில படங்களை தயாரித்த வகையில் ஃபைனான்ஸியர்கள், தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் செட்டில்மெண்ட் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இந்த நிறுவனம் படத்தை வெளியிடும் உரிமை பெற்றால் ரிலீஸ் நேர சிக்கல் வரும். அதுவுமில்லாமல் சில ஃபைனான்ஸியர்களே ஜெமினி சர்க்யூட்டிடம் "அந்தப் பட உரிமையை வாங்குங்க. நீங்க தரவேண்டிய பணத்துக்காக... ரிலீஸ் நேரத்தில் நாங்கள் நெருக்கடி கொடுத்தால்... போனிகபூர் செட்டில் செய்துவிடுவார்'' என திட்டமிட்டிருப்பதாகவும் இண்டஸ்ட்ரியில் பரவலாக பேசப்படுகிறது.

இது... போனிகபூருக்கு அதிர்ச்சி!

-ஆர்.டி.எ(க்)ஸ்