"நீங்கள் ‘"பிக்பாஸ்'’ வீட்டில் போட்டி யாளராக கலந்துகொண்டால் பங்கேற்கும் நூறு நாட்களும் உங்களால் செக்ஸ் இல்லாமல் இருக்கமுடியுமா?' என ராம்கோபால் வர்மா பட நடிகை காயத்ரி குப்தாவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க... எரிச்சலாகியிருக்கிறார் காயத்ரி. இதனால் அவரை‘"பிக்பாஸ்' ’ஆட்டத்தில் சேர்க்கவில்லை தெலுங்கு "பிக் பாஸ் 3'’நிகழ்ச்சி யின் அமைப்பாளர்கள். இதையடுத்து காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மூன்றுபேர்கள் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக் கிறார்கள்.

bbஇதேபோல்... போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வான தொலைக்காட்சி பிரபலம் ஸ்வேதா ரெட்டிக்கு போன்செய்து... "உங்களைப் போட்டியாளராக தேர்வு செய்தால் எனக்கு என்ன லாபம் கிடைக்கும்?' என நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் கேட்டதாக ஸ்வேதா தெரிவித்த குற்றச்சாட்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

"அதெல்லாம் ஒரு கான்செப்ட்டா? அதைப்பத்தி கேட்காதீங்க... வாய்ல நல்லா வந்திடப்போகுது' என ‘"பிக் பாஸ்'’ குறித்து கடுமையாக கருத்துத் தெரிவித்த நாகார்ஜுனாதான் தெலுங்கு ‘"பிக்பாஸ் 3'’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன்புதான் இந்த நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது.

இப்படி பாலியல் பஞ்சாயத்துகளுக்கு ஆளாகி யிருக்கும் "பிக்பாஸ்' நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர்... நாகார் ஜுனா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியிருக் கிறார்கள். ஹைதராபாத் உயர்நீதிமன்றத்திலும் நிகழ்ச்சிக்கு தடைகேட்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

ஆஸ்துமா மருந்தான சிகரெட்?

ff

“"தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீங்க. பட்டாசு புகையால சுவாசநோய்கள் வருது. நானும் ஆஸ்துமா நோயால பாதிக்கப்பட்டிருக்கேன். அதனால் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கணும்' என குரல் கொடுத்து வருபவர் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் தனது பிறந்தநாளை தன் கணவர் மற்றும் தனது வீட்டாருடன் அமெரிக்க மியாமி கடற்கரையில் கொண்டாடினார் பிரியங்கா. இந்த கொண்டாட்டத்தில் பிரியங்காவின் அம்மா மதுவும், பிரியங்காவின் கணவர் நிக் ஜோன்ஸும் சுருட்டு புகைக்க... பிரியங்கா சிகரெட் புகைத்திருக்கிறார்.

வலைப்பக்கங்களில் வெளியான இந்த கொண்டாட்ட படங்களைப் பார்த்தவர்கள்... “"சிகரெட் புகையை ஆஸ்துமாவுக்கு மருந்தா சாப்பிடுறீங்களா?' என கேள்வி கேட்டுள்ளனர்.

செல்வ(ô க்கு) மணி!

எதிர்பார்த்தபடியே தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வாகியுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிடவிருந்த "அமீர் மற்றும் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால்தான் செல்வமணி ஜெயித்தார்' என்றும் சொல்வதற்கில்லை. காரணம்... பதிவான சுமார் 1500 வாக்குகளில் சுமார் 1400 வாக்குகளை செல்வமணி பெற்றுள்ளார். மற்ற பதவிகளுக்கு நடந்த தேர்தலிலும் செல்வமணி டீம்தான் ஜெயித்துள்ளது. ஆக... செல்வமணி தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார் என்பதுதான் உண்மை.

அமலாவின் பேருதவி!

Advertisment

aa

பெரும்பாலான ஹீரோக்களே தங்களது படம் வெளியாவதில் உண்டாகும் கடைசிநேர பணச் சிக்கலை கண்டுகொள்வதில்லை. ஆனால், தான் நடித்த ‘"ஆடை'’ படத்திற்கு கடைசிநேர சிக்கல் ஏற்படவே களத்தில் இறங்கி கை கொடுத்ததோடு... காசும் கொடுத்திருக்கிறார் அமலா பால்.

"ஆடை'’ படத்திற்கு பேசிய சம்பளத்தில் அட்வான்ஸ் மட்டுமே வாங்கியிருந்தார் அமலா. தயாரிப்பாளரின் சிரமம் புரிந்து... ‘படம் வெளியான பிறகு லாபத்தில் பங்கு’ என்பதை ஏற்றுக்கொண்டார் அமலா. ஆனாலும் படப் பணியாளர்களுக்கான கடைசிநேர சம்பள செட்டில்மெண்ட்டில் இழுபறி ஏற்பட்டதால்... பஞ்சாயத்து ஸ்பாட்டிற்கு வந்து கண்கலங்கிய அமலா... படம் வெளிவருவதற்கு தேவையான 25 லட்ச ரூபாயை கொடுத்து பிரச்சினையை தீர்த்திருக்கிறார்.

அமலாவின் இந்தச் செயலை தயாரிப் பாளர்கள் தரப்பில் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்