மும்பையில் ஆடை வாங்கிக்கொண்டிருந்த நேரத் தில் சென்னையில் "ஆடை'யில் ஆடையில்லாமல் நடித்ததன் காரணமாக ஊட்டியிலிருந்து அமலாபாலை நீக்கிவிட்டதாக தகவல் போயிருக்கிறது. இத னால் அமலாபால் பரபரனு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார்.
விஜய்சேதுபதியின் 33-வது படத்தின் படப்பிடிப்பு நடை பெற்றுவருகிறது. இதில் நாயகி யாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில்... ""உங்களின் கண்டிஷன்கள் எங்களுக்கு சரிவராததால் படத்திலிருந்து உங்களை விலக்கிவிட்டோம்'' என தயா ரிப்பு நிறுவனம் ஊட்டி படப் பிடிப்பு லொகேஷனிலிருந்து அமலாவுக்கு மெஸேஜ் அனுப் பியது. இந்த தகவல் கிடைக்கப் பெற்றபோது... மும்பையில் தங்கியிருந்து "விஜய்சேது பதி-33' படத்தில், தான் அணிந்து நடிப்பதற்கான ஆடைகளை பர்சேஸ் செய்து கொண்டிருந்தார் அமலா பால்.
விஜய்சேதுபதிக்கு ஜோடி யாக இப்போது மேகாஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக் கிறார். அமலா இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்த போதும் அவரை நீக்கியதற்கு காரணம்... தயாரிப்பு நிறுவனத் தரப்பில் சொல்லப்படவில்லை.
ஆனால்... அமலா சொல்லியிருக்கிறார்.
"மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத் தில் "ஆடை' படத்தில் நடித் திருக்கிறார் அமலா. இதன் முன்னோட்டம் சமீபத்தில் வெளி யாகி இதுவரை சுமார் ஒருகோடி பார்வையாளர்கள் எண்ணிக் கையை நெருங்கியிருக்கிறது.
சென்னை சிறுசேரி பகுதியில் ஒரு ஃபேக்டரியில் மிகுந்த பாதுகாப் போடு எடுக்கப்பட்ட காட்சிகளில் அமலா ஆடையில்லாமல் நடித்த காட்சி கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக அமலா ஆடையில்லாமல் நடிக் கும் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை ஒரு டெமோ ஷூட் செய்து, அமலாவிடம் காட்டி சம்மதம் பெற்ற பிறகே இந்தக் காட்சிகளில் நடித்திருக்கிறார் அமலா. இது பெண்ணியம் பேசும் கதையமைப்பு கொண்ட படம்.
""என்னை "விஜய்சேதுபதி-33' படத்தில் ஒப்பந்தம் செய்தபிறகுதான் "ஆடை' டீஸர் வெளியானது. அதைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப் படத்தி லிருந்து என்னை நீக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான படங்களை வரவேற்க தமிழ் சினிமா ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால்... சிலர் ‘இப்படிப்பட்ட படங்கள்தான் ஓடும் என்கிற குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறார்கள். நான் எப்படி நடிக்கவேண்டும் என்பதை நான்தான் முடிவுசெய்வேன். ஆனால்... ஆணாதிக்க மனோபாவத்தில் என்னை இந்தப் படத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள்'' எனச் சொல்லியிருப்பதுடன் தான் எந்தளவுக்கு தயாரிப்பாளர்களின் கஷ்டம் உணர்ந்து அவர்களுக்கு சப்போர்டிவ்வாக இருப்பவள் என்பதையும்... "பாஸ்கர் ஒரு ராஸ்கல்', ‘"அதோ அந்தப் பறவைபோல'’மற்றும் "ஆடை' பட அனுபவங்களையும் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார் அமலா.
"பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்திற்கான பாதி சம்பளத்தை படம் வெளியானபிறகு தருவதாக தயாரிப்பாளர் சொல்ல... அதை ஏற்றுக்கொண்ட அமலா... அந்தப் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்பது தெரிந்ததால்... பாக்கிச் சம்பளத்தை கேட்காமலே விட்டுவிட்டார். ஆனால் சில பெரிய ஹீரோக்களே தங்களது பணத்தை செட்டில் மெண்ட் செய்யச் சொல்லி பட ரிலீஸ் நேரத்தில் நெருக்கடி கொடுப் பது வழக்கம்.
விஜய் சேதுபதியின் "96' பட வெளியீட்டின்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், தான் கடனாக வாங்கிக்கொடுத்த தொகையை திருப்பித் தந்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய பஞ்சாயத்து நடத்தினார் விஷால். இருப்பினும் விஜய்சேதுபதிக்காக மனம் மாறி... ரிலீஸுக்கு ஓகே சொன்னார்.
சில நாட்களுக்கு முன்புகூட விஜய்சேதுபதியின் "சிந்துபாத்' பட வெளியீட்டின்போது ஜெயம்ரவி ஒரு நெருக்கடி கொடுத்தார்.
அதாவது... ஜெயம்ரவி நடித்த "அடங்கமறு' படத்தின் விநியோக உரிமையை வாங்கிய வகையில் ‘கிளாப்போர்டு’ கிருஷ்ணமூர்த்தி ஒருகோடி ரூபாயை ஜெயம்ரவிக்கு தர வேண்டும். "சிந்துபாத்' படத்தை "கே ஸ்டுடியோ' ராஜராஜனுடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியும் விநியோக உரிமை பெற்றுள் ளார். இதனால் ""எனக்குத் தரவேண்டிய ஒருகோடியை கொடுக்காமல் "சிந்துபாத்'’ படத்தை கிருஷ்ணமூர்த்தி வெளியிடக்கூடாது'' என ஜெயம்ரவி பிரச்சினை செய்தார். பிறகு பாரதிராஜா உள் ளிட்ட சில பிரபலங்கள் ஜெயம்ரவி யிடம் பேசி... ஒருகோடியை முப்பதுலட்ச ரூபாயாக குறைத்துக்கொள்ளச் சொன்ன தோடு... "சிந்துபாத்' வெளியான பிறகு வாங்கிக் கொள்ளும்படி ஜெயம்ரவியை சமாதானப்படுத்தி னார்கள்.
(ஆனாலும் "பாகுபலி-2' படத்தை தமிழில் வெளியிடும் உரிமைபெற்று. அதில் நல்ல லாபமும் பார்த்துவிட்டு... "பாகுபலி' தயாரிப்பு நிறுவனமான ஆர்காவுக்கு சுமார் 17 கோடி ரூபாயை ராஜராஜன் தராததால் ஆர்கா தொடர்ந்த வழக்கில் "சிந்துபாத்' கடந்தவாரம் வெளியா கமல் போனது. இப்போது வெளி யாகிவிட்டது.) அதுமட்டுமில்லை...
"விஜய்சேதுபதி-33' படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறும் நிலையில் ஊட்டியிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கிக் கொள்ள ரூம் போடும்படி அமலா கேட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளர்கள் உடன்படவில்லை.
"வெள்ளை நிற இன்னோவா கார்தான் படப்பிடிப்புச் சமயத்தில் தனக்கு வேண்டும்' என ஒப்பந்தம்போடுகிறார் நயன்தாரா. அப்படிப்பட்ட கெடுபிடியெல்லாம் அமலாவிடம் இல்லை. "அதோ அந்த பறவை' படப்பிடிப்பிற்காக அருகில் ஒரு பெரிய நகரம் இருந்தும், தயாரிப்பாளர்களின் வசதி கருதி ஷூட்டிங் நடந்த வனப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு சிறு ஊரிலேயே தான் தங்கியதையும் குறிப்பிட் டுச் சொல்லியிருக்கிறார் அமலா.
விட்டுக்கொடுத்து போறவங்க கெட்டுப்போறதில்லைம்பாங்க. தயாரிப்பாளரின் கஷ்டம் உணர்ந்து விட்டுக் கொடுத்துப் போற மைனாவை கெட்டவரா சித்தரிச்சா எப்படி?
-ஆர்.டி.எ(க்)ஸ்