ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் கண்காணிப்பில் நடிகர் சங்க தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும், பிரச்சாரங்களும் தீவிரமாக நடந்துவந்த நிலையில்... தேர்தல் நடக்கும் அடையாறு எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு தர சங்க செயலாளர் விஷால் கொடுத்த மனுவை காவல்துறை நிராகரித்துவிட்டது.
பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
"அந்தப் பகுதியில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு இருப்பதால் தேர்தலை அங்கே நடத்தக் கூடாது' என போலீஸ் தரப்பு விளக்கத்தை ஏற்று... "வேறு இடத்தில் தேர்தல் நடத்துங்கள்' என நீதிமன்றம் சொல்லிவிட்டது.
இன்னொருபுறம்... 61 உறுப்பினர்களை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது பற்றிய புகாரில் சங்கங்களின் பதிவாளர் கேட்டிருந்த விளக்கத்திற்கு விஷால் பதில் அனுப்பியிருந்தார். ஆனால் "அதில் திருப்தியில்லை...' என தேர்தலையே ரத்துசெய்ய பதிவாளர் உத்தரவிட்டார்.
இப்படியான அரசாங்க நெருக்கடிகள் காரண மாக தேர்தல் ரத்தாக... அதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் விஷால்.
தேர்தல் நிறுத்தப்பட்டதன் பின்னணியில் சங்கரதாஸ் அணியில் செயலாளருக்குப் போட்டி யிடும் ஐசரிகணேஷ் இருப்பதாகவும், அவர்தான் அரசு சப்போர்ட்டோடு, பதிவாளரை தவறாக நடத்துகிறார் என்றும் பாண்டவர் அணியில் துணைத்தலைவருக்கு போட்டியிடும் பூச்சி முருகன் சொல்கிறார். சங்கரதாஸ் அணித்தலைவர் பாக்ய ராஜோ... "தேர்தல் நிறுத்தப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது' எனச் சொல்லியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு இப்படியிருக்க... தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரப்போகிற தேர்த லுக்கு இப்போதே வெப்பம் ஜாஸ்தியாக இருக்கிறது.
""தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் மூலம் சங்கம் அழிவைத்தான் சந்தித்திருக் கிறது. விஷால் ஒரு கிரிமினல் அரசியல் வாதியாகத் தகுதியானவர். தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டும். பாரதி ராஜாவை தலைவ ராக்க வேண்டும்'' என் கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள டைரக்டர் சேரன் உள்ளிட்ட பிர பலங்கள்.
அதேசமயம்... ஒரே நபர் இரண்டு முக்கிய சங்க தலை வர் பதவியில் இருந்துகொண்டு... சிறப்பாக செயல் பட முடியாது. தயாரிப்பாளர் சங்கத்திற்குள் பாரதிராஜா தலைவராக வந்துவிடக் கூடாது என சதி செய்தே, டைரக்டர்கள் சங்கத்திற்கு தலைவராக பாரதிராஜாவை போட்டி யின்றித் தேர்ந்தெடுத்திருப்பதாக சேரன், எஸ்.வீ.சேகர் போன்ற விஷால் எதிர்ப் பாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க...
தயாரிப்பாளர் சங்க தலைவராக வருபவர்... தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்பவர்களாக இருக்கவேண்டும் என்கிற வேகம் தயாரிப்பாளர்களிடையே நிலவுகிறது.
""கடன் வாங்கி படத்தை தயாரிக் கிறோம். ஆனால் அந்தப் படத்தின் புரமோ ஷனுக்கு அந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களே வருவதில்லை. உதாரணத் திற்கு... நயன்தாரா நிறைய கண்டிஷன் போடுகிறார். "படத்தின் பூஜை மற்றும் இசை வெளியீடு உள்ளிட்ட புரமோஷனுக்கு வரமாட்டேன். படத்தின் புரமோஷனுக்கான பேட்டிகள் தரமாட்டேன்' என ஒப்பந்தத்தி லேயே கண்டிஷன் போடுகிறார். இதைவிடக் கொடுமை... ஹைதராபாத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அன்றைய தினம் ஷூட்டிங் முடிந்து ஸ்பாட் டிலிருந்து ஹோட்டலுக்கு நயன்தாராவை அழைத்துச் செல்ல கம்பெனி சார்பில் இன்னோவா கார் சென்றது. ஆனால் அந்தக் காரில் ஏற மறுத்து தகராறு செய்து... வேறு இன்னோவா காரை கம்பெனி அனுப்பியதும் அதில் ஏறிச் சென்றார்.
நயன்தாரா கேட்டது வெள்ளை நிற இன்னோவா. கம்பெனி முதலில் அனுப்பியது வேறு கலர் இன்னோவா. இதுதான் நயன் தாராவின் தகராறுக்கு காரணம். அதன்பிறகு நடந்த உச்சகட்ட அட்டகாசம் என்னவென் றால்... "வெள்ளை நிற இன்னோவா கார்தான் போய்வர அனுப்ப வேண்டும்' என புதுப்பட ஒப்பந்தத்தில் ஒரு விதியை நயன்தாரா சேர்த்ததுதான். இப்படியான கொடுமைகள் இனி தொடராதபடி... தயாரிப்பாளரின் கம்பீரத்தைக் காப்பாற்றும் தலைமைதான் வேண்டும்'' என நம்மிடம் தெரிவித்தார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.
-ஆர்.டி.எ(க்)ஸ்