தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான "பாண்டவர் அணி'யும், பாக்யராஜ் தலைமையிலான "சங்கரதாஸ் அணி'யும் நடத்தும் குஸ்தி சூடு குறையாமல் இருக்கிறது.
"ரேஷன் அரிசி, பருப்பு' உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்திருக்கும் சங்கர தாஸ் அணி "கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமலேயே... மீதமுள்ள சங்க கட்டிடப் பணிகள் ஆறு மாதத்தில் முடிக்கப்படும்' எனவும் தெரிவித்துள்ளது. முழுக்க இதற்கான செலவை சங்கரதாஸ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரிகணேஷ் ஏற்பாராம்.
இதனால்... நடிகர் சங்க இடத்தை அபகரிக்க ஐசரி கணேஷ் முயற்சிப்பதாக சொல்லிவரும் பாண்டவர் அணி... "நடிகர் சங்கத்திற்கான ஃபைனான்ஸ் விஷயத்தில் ஐசரிகணேஷ் கடன் கொடுத்திருந்தாலும் வட்டிக்குத்தான் கொடுத்துள்ளார். அவர் ஒன்றும் சும்மா தரவில்லை' என்றும் சொல்கிறார்கள்.
"வட்டியுடன்தான் கடன் தருகிறார்' என்பதற்கான ஆதாரங்களையும் விரை வில் தெரிவிக்க திட்டமிட்டிருக்கிறதாம் பாண்டவர் அணி. நடிகர் சங்க கட்டி டத்தின் ஏதாவது ஒரு பிரிவுக்கு தனது தந்தை ஐசரிவேலன் பெயரைச் சூட்ட... விஷாலிடம் சொல்லிவந்தார் ஐசரிகணேஷ். ஆனால் விஷால் அதை ஏற்கவில்லை. இப் போது ஐசரிகணேஷ் போட்டியிடும் சங்கரதாஸ் அணியின் தேர்தல் அறிக்கை யில்... "நடிகர் சங்கத்திற்காக பாடுபட்டவர் களின் பெயர்களை கட்டிடங்களுக்கு வைக்க உறுப்பினர்களின் ஆதரவு பெறப் படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க கட்டிடப் பணியில் பிஸியாக இருந்ததால் ஆண்டுதோறும் நடத்தப்படும் அமெச்சூர் நாடகப் போட்டிகள், "கலைச்செல்வம்' விருது விழாக்களை நாசர்-விஷால் நிர்வாகம் நடத்தவில்லை. இதற்காக நாடக நடிகர் களிடம் வருத்தத்தைத் தெரிவித்துவரு கிறது பாண்டவர் அணி.
பிரச்சார வீடியோ ஒன்றை வெளி யிட்டிருக்கும் பாண்டவர் அணி... முந் தைய நிர்வாகிகளான சரத் மற்றும் ராதாரவி மீது கடு மையான விமர்சனங் களை வைத்துள்ளது.
போனமுறை தேர்தலின்போது பாண்டவர் அணி வைத்த குற்றச்சாட்டு களின் தொகுப்பாக இது இருக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த சரத்தின் மகள் வரலட்சுமி, "இப்போதைய தேர்தலில் சம்பந்தமில்லாத என் அப்பாவை விமர்சிப்பது ஏன்?' என்பதோடு... "இரட்டை வேடதாரி விஷால்' எனவும்... "என் ஓட்டை இழந்துவிட்டீர்கள்' எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
"பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல் உள்ளது' என இந்த வீடியோவுக்கு ராதிகாவும் காட்டம் காட்டியுள்ளார்.
தேர்தல் களம் இப்படி அனல் வீசிக் கொண்டிருந்தாலும்...
சரத்குமார், ராதாரவி உட்பட 64 பேர்களை நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருந்தது நாசர்-விஷால் தலைமையிலான நிர்வாகம்.
"முறையற்ற விதத்தில் உறுப்பினர்களை நீக்கிவிட்டு தேர்தல் நடத்துவதாக' நாசர்-விஷால் மீது சங்கங்களின் பதிவாளரிடம் புகார் செய்யப் பட்டுள்ளதால்... பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால்... திட்ட மிட்டபடி ஜூன் 23 அன்று நடிகர் சங்க தேர்தல் நடக்குமா? என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது.
சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ வில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரி வளாகத்தில் தான் தேர்தல் நடக்கிறது. தேர்தலின்போது உரிய பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் விஷால் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால்... "முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கள் குடியிருப்பு பகுதி அங்கே இருப்பதால்... வாக் குப்பதிவை வேறு இடத்தில் நடத்தலாம்...' என்கிற யோசனையைச் சொல்கிறதாம் போலீஸ் தரப்பு.
தேர்தல் நடப்பது குறித்து இப்படி சில சிக்கல் கள் இருப்பதாகச் சொல்லப் பட்டபோதும்... இரு அணி களும் தமிழகம் முழுக்க வாக்குச் சேகரிப்பில் தீவிர மாகவே இருக்கின்றன.
பாண்டவர் அணி யில் தலைவருக்கு போட்டியிடும் நாச ரின் வேட்புமனுவில் வழிமொழிந்திருக்கும் கமல்ஹாசனையும் சங்கரதாஸ் அணி சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது.
நடிகர் சங்கத் தின் தீராக்கடன் பிரச்சினையை, தான் தலைவ ராக இருந்த போது தீர்த்த வர் விஜயகாந்த். அவரையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளது சங்கரதாஸ் அணி. அடுத்து ரஜினியையும் சந்திக்கவிருக் கிறார்கள். இதேபோல் பாண்டவர் அணியும் இவர்களைச் சந்தித்து சங்கத்திற்காக செய்தவற்றை பட்டியலிடவிருக்கிறார்கள்.
இரு அணியுமே... தங்களின் எதிரணி பலமானது என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.
-ஆர்.டி.எ(க்)ஸ்
______________
விஷாலுக்கு நெருக்கடி!
"பாண்டவர் அணியை தோற்கடிப்பது' என்பதைத் தாண்டி "விஷாலை வீழ்த்துவது' என்பதே பிரபலங்களின் டார்கெட்டாக இருக்கிறது.
பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து போட்டியிடும் ஐசரிகணேஷுக்கு ஆதரவாக அவரின் வேல்ஸ் யுனிவர்ஸிடி பேராசிரியர்கள் கேன்வாஸ் செய்கிறார்கள். சங்க உறுப்பினர்களை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசும், வேல்ஸ் யுனிவர்ஸிடியின் காமர்ஸ் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. டாக்டர் சுப்பிரமணியன்... "பாக்யராஜ் அணியில் போட்டியிடும் டாக்டர் ஐசரிகணேஷுக்கு ஓட்டுப் போடுங்க. அவர் தன்னோட ட்ரஸ்ட் மூலம் நலிந்த கலைஞர்கள் 500 பேர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தர்றார். யுனிவர்ஸிடியில் அவங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு இலவசமா படிக்க ஸீட் தர்றார். அவர் ஜெயிச்சா... இன்னும் அதிகமா செய்வார்' என கேன்வாஸ் செய்துவருகிறார். பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் "விஷாலை தோற்கடிக்கணும்' என காய் நகர்த்துகிறார்கள். இதனால்தானோ என்னவோ... "போனமுறை மாதிரி நான் ஈஸியா ஜெயிச்சிட முடியாது' என்கிறார் விஷால்.