டிகர் சங்க தேர்தலில் மீண்டும் "பாண்டவர் அணி' போட்டியிடுகிறது. தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவராக கருணாஸ் போட்டி யிடுகிறார்கள். ஏற்கனவே இவர்கள் வகித்துவந்த அதே பதவிக்கு போட்டி யிடுகிறார்கள்.

dadaf

24 செயற்குழு உறுப்பினர் களிலும் பாண்டவர் அணியின் பெரும்பாலானவர்கள் போட்டி யிடுகிறார்கள்.

இரு துணைத்தலைவர்களில் ஒருவராக இருந்த பொன்வண் ணன் போட்டியிடவில்லை. அவருக்குப் பதில் பாண்டவர் அணியில் பூச்சிமுருகன் போட்டி யிடுகிறார்.

Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் சுயேச்சையாக விஷால் வேட்புமனு தாக்கல் செய்ததை யடுத்து... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பொன்வண்ணன். ஆனால் அவரின் ராஜினாமாவை நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்க வில்லை. அவர்கள் சமாதானப் படுத்தியதையடுத்து வாபஸ் வாங்கிக் கொண்டார்.

இந்தமுறை பாண்டவர் அணியில் பொன்வண்ணன் போட்டி யிடவில்லை. சக நிர்வாகிகள் மீதான அதிருப்தியில் பொன்வண்ணன் விலகி நிற்பதாகச் சொல்லப்பட் டாலும்... வரலாற்று நூல் ஒன்றை அவர் எழுதும் வேலையில் இறங்கி யிருப்பதால் தேர்தலிலிருந்து விலகி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைத்திருப்பதால்... அவர்கள் போட்டியிட சாத்திய மில்லை என்றும்... அதனால் ராதிகா தலைமையில் டீம் ஃபார்ம்பண்ண தொடர் முயற்சிகள் நடக்கிறதாம்.

Advertisment

விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தேர்தல் நடைபெற விருக்கிறது.

விஷ்ணு விஷால் தன் மனைவியை பிரிந்ததற்குக் காரணம்... "ராட்சசன்' படத்தில் விஷ்ணுவுடன் சேர்ந்து நடித்த அமலாபால்தான் காரணம்... என மைனா தலையை உருட்டினார்கள்.

aff

""நான் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பது பிடிக்காத தால்தான் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது'' என விஷ்ணு சொன்ன காரணமும் அமலா மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அம்மா வழியில் சைனீஸ், அப்பா வழியில் தெலுங்குக் காரரான இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு நெருக்க மாயிருக்கிறார்..

ஜுவாலாவும் சக வீரரான சேத்தன் ஆனந்த்தை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர்.

""எனக்கும் ஜுவாலாவுக்கும் இடையேயான நட்பு... நட்பைத் தாண்டியதா என்பதைப் பொறுத்திருந்து தான் சொல்ல முடியும்'' என விஷ்ணு சொல்லியுள்ளார்.

என்றாலும்.... புதிய வாழ்க்கைத் துணையை விஷ்ணு செலக்ஷன் செய்து விட்டார்.

த்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து சூசகமாக தன் கருத்தைப் பதி விட்ட ஏ.ஆர்.ரஹ்மான், "இந்தி கட்டாய மில்லை' என கல்வி வரைவு அறிக்கை திருத்தப்பட்டதாக மத்திய அரசு சொன்னதும்... "அழகிய தீர்வு' என்று கருத்துச் சொன்னார்.

தொடர்ச்சியாக "அட்டானமஸ்' என்கிற வார்த்தையைப் பதிவு செய்து... அந்த வார்த்தைக்கான அகராதி லிங்க்கையும் போட்டார்.

இப்படி "தன்னாட்சி' என ரஹ்மான் டுவிட்டியது பரபரப்பான வரவேற்பைப் பெற்ற நிலையில்...

தனது டுவிட்டர் பக்கத்தில் "அட்மின்தான் டுவிட் செய்கிறார்' என்கிற விபரக் குறிப்பை போட்டார் ரஹ்மான்.

"என்ன நெருக்கடி யால் இந்த ரியாக்ஷன் காட்டுகிறார் ரஹ்மான்' என வலைப்பக்கத் தில் விவாதம் நடக் கவே...

"அட்மின்தான் டுவிட் செய்கி றார்' என்கிற குறிப்பை நீக்கியுள்ளார் ரஹ்மான்.

அட்மின் என்பது கூட யாரையோ குறி வைத்த நக்கல்தான் என்கின்றனர் நெட்டி சன்களும் சிட்டிசன்களும்.

-ஆர்.டி.எ(க்)ஸ்