ஃபைட்டுக்குப் பின்... பாட்டு!

tt

ளையராஜா இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பிருந்தே... அவரும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஆத்மார்த்தமான நண்பர்கள்.

கடந்த ஆண்டு... ""எனது இசையில் உருவான பாடல்களை ராயல்டி தராமல் சினிமாவில் பயன்படுத்தக்கூடாது. மேடைக் கச்சேரிகளிலும் பாடக்கூடாது''’என சட்டப்பூர்வமாக அறிவித்தார் இளையராஜா. அவர் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பி. இதனால் வருத்தம் அடைந்தார். ஆனாலும் "நான் பாடிய பாடல்களை மேடையில் பாடுவேன்' என எஸ்.பி.பி. அறிவிக்க... "சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா தரப்பில் சொல்லப்பட்டது.

Advertisment

இதனால் பல்வேறு தரப்பிலும் இளையராஜா விமர்சிக்கப்பட்டார். ஆனால்... ராயல்டி விஷயத்தில் உறுதியாக இருந்த இளையராஜா... ""இந்த ராயல்டி தொகையே தென்னிந்திய இசைக் கலைஞர்கள் நலத்திற்காகத்தான்'' எனச் சொன்னார். இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை தன் சொந்தச் செலவில் கட்டித் தருவதாகவும் தற்போது அறிவித்துள்ளார்.

ராஜாவின் ராயல்டி கெடுபிடி... நல்ல நோக்கத்திற்கானது என்பது புரிந்துகொள்ளப்பட்ட நிலையில்... எஸ்.பி.பி.யும் சமாதானமானார்.

இவர்களின் நட்பில் உண்டாக்கியிருந்த ஃபைட் ஸீன் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது... பாட்டு ஸீன்.

Advertisment

ரொம்ப நாளைக்கப்புறம்... ராஜா இசையில் எஸ்.பி.பி. ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் "தமிழரசன்' படத்திற்காக... பழநிபாரதி எழுதிய தாலாட்டுப் பாடலை பாடியிருக்கிறார்.

rad

இந்தப் பாட்டுப் பதிவின்போது... ராஜாவும், எஸ்.பி.பி.யும் வெகுநேரம் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.

சண்டைக்குப்பின்... சமாதானம்!

தான் இயக்கி நடித்த "காஞ்சனா'’படத்தை இந்தியில் "லட்சுமி பாம்' என்ற பெயரில் இயக்கிவந்தார் ராகவா லாரன்ஸ். தமிழில் சரத்குமார் நடித்திருந்த திருநங்கை பாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துவந்தார். இந்தப் படத்திற்காக அக்ஷய்குமார் திருநங்கையாக தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லாரன்ஸின் அனுமதியில்லாமலே வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இதனால்... "சுயமரியாதை முக்கியம்..' எனச் சொல்லி, படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததுடன்... ""அக்ஷய்குமார் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அதனால்... இந்தக் கதையை படமாக்கும் உரிமையைத் தருகிறேன்'' என்றும் சொன்னார்.

லாரன்ஸ் விலகியதற்கு இன்னொரு முக்கிய காரணம் என ஒரு கிசுகிசுவும் கிளம்பியது. அதாவது... "காஞ்சனா'வில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ராய் லட்சுமி. இப்போது இந்தியிலும் சில படங்கள் நடித்து அங்கேயும் ஓரளவு பிரபலமாக இருக்கிறார். அதனால் ராய் லட்சுமியை, லாரன்ஸ் கதாநாயகியாக ரெகமண்ட் செய்ததாகவும் ஆனால்... "கியாரா அத்வானிதான் கதாநாயகி' என தயாரிப்பு நிறுவனம் கியாராவை ஒப்பந்தம் செய்ததாகவும், அதிலிருந்தே தயாரிப்பு நிறுவனத்திற்கும், லாரன்ஸுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

எது எப்படியோ....?

சண்டை ஸீன் முடிஞ்சு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது.

அக்ஷயின் அறிவுறுத்தலின் பேரில் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் சென்னை வந்து லாரன்ஸை சந்தித்து சமாதானப்படுத்தியதால்... "லட்சுமி பாம்' படத்தை தொடர்ந்து இயக்க லாரன்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

சிக்கலுக்குப்பின்... பிடுங்கல்!

சூர்யாவின் "தானா சேர்ந்த கூட்டம்' உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார் மீரா மிதுன். மாடலிங் உலகிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். 2016-ஆம் ஆண்டு "மிஸ் சௌத் இந்தியா' அழகிப் போட்டியின் வின்னர் மீரா மிதுன். சமீபத்தில் அழகிப்போட்டி ஒன்றை, தானே நடத்த முயற்சி மேற்கொண்டார். இதனால் சௌத் இந்திய அழகிப் போட்டியை நடத்திவரும் நிர்வாகிகளுக்குக், மீராவுக்கும் இடையே சிக்கல். இது கொலை மிரட்டல்... போலீஸ் புகார்...’ என சிக்கல் தீராமல் போய்க்கொண்டிருந்த நிலையில்... மீராவுக்கு தரப்பட்ட பட்டத்தை பிடுங்கிவிட்டு 2016 போட்டியில் ரன்னராக தேர்வான "அம்புலி 3டி' பட கதாநாயகி சனம் ஷெட்டியை அந்த ஆண்டுக்கான அழகியாக அறிவித்துள்ளனர்.

-ஆர்.டி.எ(க்)ஸ்