Advertisment

டூரிங் டாக்கீஸ்! - என்னமோ நடக்குது!

vishal

மீண்டும்!

vishal

சில பல வருட இடைவெளிக்குப் பின்... மீண்டும் புதுமுக நாயகன், நாயகியை வைத்து ஒரு படத்தை எழுதி, இசைத்து, பாடி, தயாரித்து, நடித்து, இயக்கவிருக்கிறார் டி.ஆர்.

Advertisment

மல... மல... மல...!

நயன்தாரா, அமலாபால், நமீதாவைத் தொடர்ந்து அனுஷ்காவும் இமயமலை போய்விட்டு வந்திருக்கிறார்.

Advertisment

கைமாறு!

விஷாலுக்கு பெருமளவில் கடன் கொடுத்திருந்தார் ஃபைனான்ஸியர் மதுரை அன்பு. இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில்... விஷாலின் "இரும்புத்திரை' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. லைகா நிறுவனம் விஷாலுக

மீண்டும்!

vishal

சில பல வருட இடைவெளிக்குப் பின்... மீண்டும் புதுமுக நாயகன், நாயகியை வைத்து ஒரு படத்தை எழுதி, இசைத்து, பாடி, தயாரித்து, நடித்து, இயக்கவிருக்கிறார் டி.ஆர்.

Advertisment

மல... மல... மல...!

நயன்தாரா, அமலாபால், நமீதாவைத் தொடர்ந்து அனுஷ்காவும் இமயமலை போய்விட்டு வந்திருக்கிறார்.

Advertisment

கைமாறு!

விஷாலுக்கு பெருமளவில் கடன் கொடுத்திருந்தார் ஃபைனான்ஸியர் மதுரை அன்பு. இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில்... விஷாலின் "இரும்புத்திரை' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. லைகா நிறுவனம் விஷாலுக்கு கை கொடுத்து "இரும்புத்திரை'யை தன் வசப்படுத்தியதோடு... மூன்று தவணைகளில் மதுரை அன்புவிற்கு விஷால் தரவேண்டிய கடனைத் தர பேசி முடிவெடுத்துள்ளது. இதற்கு கைமாறாக... சம்பளம் இல்லாமல் லைகாவிற்கு மூன்று படங்கள் நடித்துத் தர விஷால் ஒப்புக்கொண்டுள்ளார்.

முரட்டுக் கருத்து!

"இருட்டு அறையில் முரட்டுக் குத்து'’ நடிகை யாஷிகாஆனந்த் "கல்யாணத்துக்கு முன்னாடி பெண்கள் கன்னித்தன்மையை இழக்கிறது அப்படி ஒண்ணும் பெரிய குத்தமில்ல'’எனச் சொல்லியிருக்கிறார்.

பயோ-பிக்!

krithi=suresh

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கினால் "ஜெயலலிதாவாக நடிக்க எனக்கு விருப்பம்' என த்ரிஷா தெரிவித்திருந்த நிலையில், "நடிகையர்திலகம்' படத்தில் நடிகை சாவித்ரியாக நடித்து பாராட்டு வாங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்து "ஜெயலலிதாவாக நடிக்கப்போகிறார்...' என தகவல்கள் வந்தது. இதை மறுத்திருக்கும் கீர்த்தி "இனிமே பயோ-பிக் படங்களில் நடிக்கப்போவதில்லை' என்றும் சொல்லியிருக்கிறார். தமன்னாவோ... "ஸ்ரீதேவியாக நான் நடிக்க விரும்புகிறேன்' என சொல்லிவருகிறார்.

நெருக்கடி!

anukshaநடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள்... சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒருபுறம் விஷாலுக்கு நெருக்கடி தர... ‘நடிகர் சங்கத்தில் பணம் கையாடல் நடந்திருப்பது போன்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது. மலேசியாவிலும் கலைநிகழ்ச்சி நடந்த வகையில் விஷால் பெரிய அளவில் பணபேரம் பேசினதாகவும்... இதற்கு சாட்சியாக மலேசியாவிலிருந்து ஒரு முக்கிய நபரை அழைத்துவரப் போவதாகவும் பரபரக்கிறது படவுலகம். டிஜிட்டல் சேவை நிறுவனம் ஒன்றுடன் போட்டுக்கொண்ட புதிய ஒப்பந்தத்தை தற்காலிகமாக விஷால் நிறுத்திவைத்த விஷயமும் பிரச்சினையை வலுவாக்கியிருக்கிறது. "தமிழன்தான் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கவேண்டும்' என பாரதிராஜா குரல் எழுப்ப... இதற்கு டி.ஆர்., ராதாரவி போன்ற பலரும் ஆதரவாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்க, நடிகர்சங்க பொதுக்குழு கூடும்போது... அனல் அடிக்கும் எனத் தெரிகிறது.

டைட்டில் இப்படி...!

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த "டெம்பர்' படம் தமிழில் விஷால் நடிக்க ரீ-மேக் ஆகிறது. இந்தப் படத்திற்கு "அயோக்யா' என பெயர் சூட்டியிருக்கிறார்கள். "நான் போலீஸ் இல்ல... பொறுக்கி' மாதிரி... "நான் ஆபீஸர் இல்ல... அயோக்யா' என்று சொல்லும் போலீஸ் ஸ்டோரிதான்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe