லக ஜேம்ஸ் பாண்ட் பட வரலாற்றி லேயே முதன்முதலாக... இப்படி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் ‘பாண்ட்-25’ படக்குழுவினர்.

அந்த அளவுக்கு கதிகலங்க வைத்திருக்கிறது "மீ டூ'’இயக்கம்.

பொதுவாக சினிமாவில் வாய்ப்புத்தருவதற்காக பாலியல் ரீதியாக நடிகைகள் வற்புறுத்தப்படுவது வழக்கம். சிலசமயம்... நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது... நடிகைகளிடம் சில்மிஷங்களை பிறர் அறியாமல் வெளிப்படுத்துவார்கள்.

உடன்படாத நடிகைகள் இந்தக் கோபங்களை உள்ளூர வைத்து பொருமிக்கொண்டிருந்தார்கள். அதற்கு தீர்வாகத்தான் "நானும் பாதிக்கப்பட்டேன்'’என்கிற பொருளில் ‘மீ டூ’ இயக்கம் உருவெடுத்தது.

Advertisment

tt

ஹாலிவுட்டில் தொடங்கிய இந்த ‘மீ டூ’ இயக்கம் கோலிவுட் வரை பரபரப்பைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இறுதியில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டன் மீது பிரபல நடிகைகள், மாடலிங் நடிகைகள், சினிமா தொழில்நுட்ப கலைஞிகள் என சுமார் 80 பேர்கள் ‘மீ டூ’ மூலம் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். இதனால் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் அமைப்பு, ஹார்வி மீது தடைவிதித்தது. ஹார்வி மீது வழக்கும் நடந்துவருகிறது.

Advertisment

இந்நிலையில் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25-வது படம் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ர லில் வெளியிடும் நோக் கோடு... படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பொதுவாக ‘பாண்ட் படங்களின் ஹீரோவான ‘ஏஜெண்ட்- 007’ பாத் திரத்தை உயர் பெண் அதிகாரிகள் கட்டளைப் படி நடப்பவர்களாக சித்தரித்திருப்பார்கள்.

ஆனாலும் 007 பெண்களை போகப் பொருளாகவே கருதும் தன்மை கொண்டவ ராக இருப்பார். இதற்கும் சில ஆண்டு களாக கண்டனங்கள் நிலவிவருகிறது பெண்ணியவாதிகளிடமிருந்து. இதுதவிர... பாண்ட் மற்றும் பாண்ட் கேர்ள் இடையே படுநெருக்கமான படுக்கையறை காட்சிகளும் இருக்கும்.

இப்போது தயாராகிவரும் இன்னும் பெயரிடப்படாத ‘பாண்ட்-25’ படத்தின் ஸ்கிரிப்ட்படி பாண்ட்-007 கேரக்டரில் நடிக்கும்... ஏற்கனவே பாண்ட் ஆக நடித்திருக்கும்... டேனியல் கிரெய்க்கிற்கும், முதன்முதலாக பாண்ட் கேர்ள் கேரக்டரில் நடிக்கும் அனா டே அர்மாஸ்க்கும் நெருக்கக் காட்சிகள் இருக்கின்றன. இதனால் ‘மீ டூ’ மாதிரியான சர்ச்சைகளுக்கு இடம் தரக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன்... பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் படத்தை தயாரிக்கும் பெண்மணியான பார்பரா பிராக்கோலி.

அதாவது...

’இண்டிமேஸி கோ-ஆர்டினேட்டர்’ பொறுப்பில் அலிஸியா ரோடிஸ் என்கிற பெண்மணி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த கோ-ஆர்டினேட்டரின் பணி... ஸ்கிரிப்ட்டை முதலில் படித்து எப்படிப்பட்ட நெருக்கக் காட்சிகள் வருகிறது என்பதை தெரிந்துகொண்டு... அந்த காட்சியில் சுமுக மாக நடிக்க ஆலோ சனைகள் தருவார். இந்த காட்சிகள் எடுக்கப் படும் படப்பிடிப்பின் போதும் டைரக்டர் மற்றும் கேமராமேன், தயாரிப்பாளர் ஆகிய யூனிட்டின் முக்கியஸ் தர்களுடன் கோ-ஆர்டி னேட்டர் மேற்பார்வை செய்வார். ஹீரோ- ஹீரோயின் நெருக்கக் காட்சி எடுக்கப் பட்டபோது... நடித்தவர்களுக்கு எந்தவிதமான சங்கடமோ, பிரச்சினையோ ஏற்படவில்லை... என்பதும் கோ-ஆர்டினேட்டரால் உறுதி செய்யப்படும்.

அப்படித்தான் "பாண்ட்-25'’படத்தின் நெருக்கக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஜேம்ஸ்பாண்ட் படம் மூலம் ஹாலிவுட்டில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நடைமுறை எல்லா "வுட்'டுக்கும் வந்தால் எல்லாருக்குமே நல்லதுதான்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

___________

சாட்சி எங்கே?

இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பிய "மீ டூ'’குற்றச்சாட்டை பாலிவுட்டின் பிரபல நடிகர் நானாபடேகர் மீது வைத்த நடிகை தனுஸ்ரீ தத்தா... நானா மீது சட்ட பூர்வ நடவடிக்கை யும் மேற்கொண்டு வருகிறார். நீதிமன் றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில்... இரண்டு பேர்கள் மட்டும்தான் இதுவரை சாட்சி சொல்ல வந்திருக்கிறார்களாம். சம்பவம் நடந்தபோது ஸ்டுடியோவில் இருந்த பலரும் சாட்சி சொல்ல பயப்படுவதாக தெரிவித்திருக் கிறார் தனுஸ்ரீ தத்தா.