Advertisment

டூரிங் டாக்கீஸ்! அதுதான் காரணமாம்!

ff

tஸ்.ஜே.சூர்யா-நயன்தாரா நடித்த... போஸ்டர் டிஸைனிலேயே பரபரப்பைக் கிளப்பிய "கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கிவரும் படம் "உயர்ந்த மனிதன்'.

Advertisment

இந்திய சினிமாவின் "உயர்ந்த மனிதன்' அமிதாப்பச்சனும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துவந்தனர். இந்த மாதம் வெளியாவதாக படம் தொடங்கிய சமயம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்... தயாரிப்பாளருக்கும் அமிதாப்பிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால்... படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக

tஸ்.ஜே.சூர்யா-நயன்தாரா நடித்த... போஸ்டர் டிஸைனிலேயே பரபரப்பைக் கிளப்பிய "கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கிவரும் படம் "உயர்ந்த மனிதன்'.

Advertisment

இந்திய சினிமாவின் "உயர்ந்த மனிதன்' அமிதாப்பச்சனும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துவந்தனர். இந்த மாதம் வெளியாவதாக படம் தொடங்கிய சமயம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்... தயாரிப்பாளருக்கும் அமிதாப்பிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால்... படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக கொடுத்திருந்த தேதிகளை வேறு படத்திற்கு அமிதாப் கொடுத்துவிட்டதுதான் பிரச்சினைக்கு காரணமாம்.

Advertisment

பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்காக அமிதாப்பை சந்தித்து பேசவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த "காஞ்சனா' படம் 2011-ல் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இதில் திருநங்கையாக சரத்குமார் நடித்திருந்தது... படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

இந்தப் படத்தை இந்தியில் எடுக்க... சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

"காஞ்சனா'வுக்கு பதில் "லட்சுமி பாம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு திருநங்கையாக அக்ஷய்குமார் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பும் நடந்துவந்த நிலையில்..

அக்ஷய்குமாரின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

படத்தின் இயக்குநரான ராகவா லாரன்ஸுக்கே... ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலில் தெரியவில்லை.

இதனால்...

"மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்கிற பழமொழியைச் சொல்லி... raபடத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கும் லாரன்ஸ்... "அக்ஷய்குமார் மீது மதிப்புள்ளதால் என் கதையை படமாக்கிக்கொள்ள சம்மதிக்கிறேன், யாரை வேண்டுமானாலும் வைத்து இயக்கிக்கொள்ளட்டும்' எனச் சொல்லியுள்ளார்.

சரத்குமாரின் "காஞ்சனா' லுக் மிரட்டலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்ஷய்குமாரின் "லட்சுமி' லுக்... பரதநாட்டியம் ஆட ஒப்பனை செய்துகொள்வது போல வெகுசாதாரணமாக இருந்தது ராகவாவுக்கு பிடிக்காததுதான்... இந்த விலகலுக்கு முக்கிய காரணம்.

விஷாலின் "அயோக்யா' படத்தின் நாயகி ராஷிகன்னாவுக்கு பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா குரல் கொடுத்திருந்தார். ஆனால் படத்தின் இறுதியில் வரும் ரோலிங் டைட்டிலில் ரவீணாவின் பெயர் இடம் பெறவில்லை. ரவீணாவின் வருத்தத்தை அறிந்து... "ஸாரி' கேட்டிருக்கிறார் ராஷி.

இது தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரின் கவனக்குறைவு என்றபோதும் பெருந்தன்மையை காட்டியிருக்கிறார் ராஷி.

ன்னைப் பற்றி அடிக்கடி கர்ப்ப வதந்தி கிளப்பிவிடுவதால்தான்... தனது லேட்டஸ்ட் கவர்ச்சிப் படங்களை அப்டேட் செய்கிறாராம் ராய்லட்சுமி.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn240519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe