சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி உட்பட பலரின் நடிப்பில் சுதந்திரப் போராட்டக் கால கதை "சைரா நரசிம்ம ரெட்டி' என்ற பெயரில் தமிழ்-தெலுங்கில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்திற்காக சிரஞ்சீவியின் பண்ணை வீட்டுக்குட்பட்ட காலி இடத்தில் இரண்டு கோடி ரூபாயில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துவந்தது.

கடந்தவாரம்... படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் செட் தீயில் எரிந்துவிட்டது.

"இன்சூரன்ஸ் பணத்துக்காகத்தான் செட் எரிக்கப்பட்டது' என ஒரு தகவல் ஹைதராபாத்தை பரபரக்க வைக்க... படத்தை தயாரித்துவரும் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம்சரண் ரொம்ப டென்ஷனாகிவிட்டார்.

Advertisment

""சில நூறு கோடிகள்ல இந்தப் படத்தை தயாரிக்கிறோம். ரெண்டுகோடி ரூபாய் இன்சூரன்ஸுக்காகவா இப்படிச் செய்வோம்?'' என கடுப்போடு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

dd

dd

Advertisment

சிகர்களை தங்களின் ஃபாலோயர்களாக தக்கவைத்துக் கொள்வதற்காகவே தங்கள் வலைப்பக்கங்களில் சுய கிளுகிளுப்பு படங்களை வெளியிடுகிறார்கள்.

"பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் ட்ரவுஸர் அணிந்த தனது படு கவர்ச்சிப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

"பொண்ணுன்னா... ஒரு அடக்கம் வேணாமா?' என கமெண்ட் கிளம்ப...

கடுப்பான மாளவி... அந்தப் புகைப்படத்தின் அடுத்த வெர்ஷனான தலைகுனிந்த (கவர்ச்சி குறையாத) படத்தைப் பதிவிட்டு... "இந்த அடக்கம் போதுமா?' என தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலைப் பற்றி விவாதிக்க நடந்த கூட்டத்தில்,

"செயலாளர் பதவிக்கு விஷால் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது... மற்றபடி மற்ற பதவிகளுக்கு இப்போது இருப்பவர்களே மீண்டும் போட்டியிட்டால் ஆதரிப்போம்' என சில நடிகர்கள் கடுப்போடு தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் பலரும் தயாரிப்பாளர் சங்க விஷயத்தில் விஷாலோடு கருத்து வேறுபாடு கொண்ட தயாரிப்பாளராகவும் இருக்கிற நடிகர்கள்தான்.

ஆனால் விஷால் மீண்டும் செயலாளர் ஆகவேண்டும்... என்கிற விருப்பம் கமலுக்கு. அதனால் கமலின் கருத்தையே நடிகர் சங்க தலைவர் நாசரும் பிரதிபலிக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடித்த "வேலைக்காரன்' படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனதால் உண்டான கடுப்பை "மிஸ்டர் லோக்கல்' படத்திற்காக கால்ஷீட் கேட்டு தன்னிடம் பேசிய சிவகார்த்தியிடம் பதிவு செய்தாராம் நயன்தாரா.

அதனால்தான், "லோக்க'லில் நயனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாக சொல்லியுள்ளார் சிவகார்த்தி.

-ஆர்.டி.எ(க்)ஸ்