டூரிங் டாக்கீஸ்! விசாலை எதிர்த்து ராதிகா?

f

கூட்டு... வேட்டு!

விஷால் மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இல்லை.

ff

நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணியில் விஷால் பொதுச்செயலாளராக வென்றார். "நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டியே தீருவோம்' என விஷால் கொடுத்த வாக்குறுதிப்படி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே... நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கட்டிடப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்கிற காரணத்தால் நடிகர் சங்க பொதுக்குழு கூடி... நிர்வாகிகளின் பதவிக் க

கூட்டு... வேட்டு!

விஷால் மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இல்லை.

ff

நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணியில் விஷால் பொதுச்செயலாளராக வென்றார். "நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டியே தீருவோம்' என விஷால் கொடுத்த வாக்குறுதிப்படி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே... நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கட்டிடப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்கிற காரணத்தால் நடிகர் சங்க பொதுக்குழு கூடி... நிர்வாகிகளின் பதவிக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்தது.

அந்த ஆறுமாதமும் முடிந்துவிட்டதால் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.

இதில் தலைவராக நாசர், பொருளாளராக கார்த்தி, செயலாளராக விஷால் மற்றும் பல பதவிகளுக்கு விஷால் டீம் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஆனால்... கடந்த முறை விஷாலை ஆதரித்த சில நடிகர்கள் இந்த முறை விஷாலுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். இப்படி திரும்பியதற்குக் காரணம்... தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் எடுத்த சில நடவடிக்கைகள்தான்.

பட வெளியீட்டை ஒழுங்குபடுத்த ஒரு கமிட்டி உருவாக்கி... "இந்தந்த தேதிகளில் இன்னின்ன படங்கள் வெளியிடப்படவேண்டும்' என கட்டுப்பாடுகளை வகுத்தார் விஷால்.

இதில் ஏற்பட்ட சில கசப்புணர்வால் தனுஷ், உதயா உள்ளிட்ட நடிகர்கள், விஷால் மீது கடுமையாக குற்றம் சுமத்தினார்கள். விஷாலுக்கு எதிராகவும் உள்ளனர்.

நடிகர் சங்கத்தில் விஷால் அணியில் போட்டியிட்டு செயற்குழு உறுப்பினராக வெற்றிபெற்ற உதயா, இப்போது... "நடிகர் சங்க தேர்தலில் விஷால் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்' என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சிம்பு உட்பட சில ஹீரோக்கள் விஷாலுக்கு எதிராக உள்ளனர்.

தனது "96' பட ரிலீஸின்போது "விஷாலால்தான் சிக்கல் வந்தது' என விஷால் மீது விஜய்சேதுபதியும் வருத்தத்தில் உள்ளார். இந்த எதிர்ப்புகளை ஒன்றுதிரட்டி... விஷாலுக்கு எதிராக ராதிகா சரத்குமாரின் தலைமையில் ஒரு அணியை உருவாக்கும் வேலைகள் தீவிரமடைந்து வருகின்றன.

d

குடிச்சேன்!

மும்பையில், தான் நடித்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பார்ட்டியில் ஃபுல்லாக குடித்துவிட்டு... ஹோட்டலின் புல்வெளியில் படுத்துக்கொண்டு... அறைக்கு வர மறுத்தாராம் டாப்ஸி.

இதை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்ட டாப்ஸி, ""அன்னிக்கு ஓவரா குடிச்சிட்டேன். மறுநாள் போதையில் நான் நடந்துகொண்ட விதத்தை நினைச்சு சங்கடப்பட்டேன்'' எனச் சொல்லியுள்ளார்.

குடிக்கல!

மிஷ்கினின் "முகமூடி' படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, மகேஷ்பாபுவுடன் "மகரிஷி' தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.

படக்குழு, ஹைதராபாத்தில் அளித்த பார்ட்டியில்... ஃபுல்லாக குடித்துவிட்டு... காரை ஓட்டிச் சென்று... போக்குவரத்து போலீஸிடம் மாட்டியதாக டோலிவுட்டில் பரபரப்பு.

தன் மேனேஜர் மூலமாக "குடிக்கல' என மறுத்துள்ளார் பூஜா.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn170519
இதையும் படியுங்கள்
Subscribe