Skip to main content

டூரிங் டாக்கீஸ்! சங்கச் சேதியும்... அங்கச் சேதியும்!

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிரணியினர் சொன்னதன் அடிப்படையில் சங்கங்களின் பதிவாளர் உத்தரவின்பேரில், சங்கத்தை சர்க்கார் கைப்பற்றி யுள்ளது தற்காலிகமாக.

சங்கத்திற்கென்று தனி அலுவலகம் இருக்கையில் மாதம் இரண்டு லட்ச ரூபாய் செலவில் சங்கத்திற்கு தனி ஆபீஸ் போட் டது...
v
கடந்த நவம்பர் மாதம் முதல் உறுப்பினர்களுக்கு பென் ஷன் தராதது...

இஷ்டத்துக்கு இளைய ராஜா-75 நிகழ்ச்சிக்கு செலவு செய்தது...

வைப்புநிதியில் செலவு செய்தது...

ஆகிய எதிர்தரப்பு குற்றச் சாட்டின் பேரிலேயே சங்கத்திற்கு அரசு, தனி அதிகாரி சேகரை நியமித்தது. சங்க அலுவலக நடவடிக்கைகளை மேற் கொள்ள தனக்கு உதவியாக கமிட்டி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் தனி அதிகாரி.

பாரதிராஜா, "சத்யஜோதி' தியாகராஜன், "அம்மா கிரியேஷன்ஸ்' சிவா, எஸ்.வீ.சேகர், "சிவசக்தி' பாண்டியன் உள்ளிட்ட ஒன்பது தயாரிப்பாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் விஷாலின் எதிரணியைச் சேர்ந்தவர்கள்.

விஷால் பதவியேற்றதிலிருந்தே விஷாலை எதிர்த்துவரும் "பாலைவனச்சோலை' ராதாகிருஷ்ணன் இந்தக் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார். ஆனாலும்... இந்த கமிட்டியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.

காரணம்...

"ஏப்ரல் 2-ந் தேதியுடன் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மே மாதத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால்... தனி அதிகாரி மூலம் சங்கத்தை தொடர்ந்து பல மாதங்களுக்கு வைத்திருக்க அரசு திட்டமிடுவதால்தான் தேர்தலுக்கு வழிவகுத்துத் தராமல் கமிட்டி போட்டிருக் காங்க' என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கு முக்கியஸ்தர்கள் சிலருக்கு.

d

"கபாலி' ராதிகா ஆப்தே, லண்டன் இசைக் கலைஞர் பெனடிக்கை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

புருஷன் மேல ராதிகா எம்புட்டு அன்பு வச்சிருக்காருங்கிற விஷயம் லேட்டஸ்ட்டா "வெளிய' "தெரிய' வந்திருக்கு.

ஒரு நிகழ்ச்சியில்... தைக்காமல் விட்டது போன்ற ஒரு ஆடையை அணிந்து வந்து போஸ் கொடுத்தார் ராதிகா. அதுல லெஃப்ட் ஸைடு காலும் தொடைப்பகுதியும் தெரியவந்தது.

அதில் தெரியவந்தது ஒரு டாட்டூ.

அதுல தெரியவந்தது... புருஷன் பெயரோட முதல் ஆங்கில எழுத்து.

இப்படி "பச்சை' குத்தீருக்காரே!d"கல்யாணமான பின்னாடியும் இப்படியா கவர்ச்சியா உடம்பு தெரிய ட்ரெஸ் போட்டு அதை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போடுறது?' என சமந்தாவை நோக்கி விமர்சனம் வந்துகொண்டுதான் இருக்கிறது.

""நான் அழகா இருக்கிறதுக்காக எப்படியெல்லாம் பயிற்சி செய்றேன். அப்படிப்பட்ட அழகை ஓரளவாவது வெளிக்காட்ட வேணாமா? என் உடல், என் உடை, என் உரிமை'' என பதிலடி தந்த சமந்தா இப்போது ஸம்மரை ஜாலியாக்க கணவர் சைதன்யாவுடன் ஸ்பெயினில் இருக்கிறார்.

பீச்சுல காத்து வாங்குறத ஜிவுஜிவுக்க போட்டா புடிச்சு இன்ஸ்டாவில் போட்டிருக்கார் சமந்தா.

-ஆர்.டி.எ(க்)ஸ்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...
 
×