Advertisment

டூரிங் டாக்கீஸ்! நயன்தாராவின் திருமண முன்னோட்டம்!

g

அன்பின் மிகுதி!

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளாக... சில நடிகைகளின் அழகு... சில நடிகைகளுக்குத் தெரிகிறது.

Advertisment

t

சில வருடங்களுக்கு முன், வித்யா பாலனின் அழகில் மயங்கிய ஷெர்லின் சோப்ரா...

""வித்யாவைப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது'' எனக் குறிப்பிட்டதோடு... ""நீங்கள் சித்தார்த்தை (காதலரை) திருமணம் செய்வதை விட என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். நான் உங்களை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன். என் உள்ளங்கையில் வைத்து உங்களைத் தாங்

அன்பின் மிகுதி!

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளாக... சில நடிகைகளின் அழகு... சில நடிகைகளுக்குத் தெரிகிறது.

Advertisment

t

சில வருடங்களுக்கு முன், வித்யா பாலனின் அழகில் மயங்கிய ஷெர்லின் சோப்ரா...

""வித்யாவைப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது'' எனக் குறிப்பிட்டதோடு... ""நீங்கள் சித்தார்த்தை (காதலரை) திருமணம் செய்வதை விட என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். நான் உங்களை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன். என் உள்ளங்கையில் வைத்து உங்களைத் தாங்குவேன்'' என பகிரங்கமாகச் சொன்னார்.

Advertisment

""தமன்னா ஆணாக இருந்தால்... தமன்னாவை நான் கல்யாணம் செய்துகொள்வேன்'' என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார் ஸ்ருதிஹாசன்.

இதைப் பார்த்துவிட்டு ஸ்ருதியை கிண்டலடித்தார் ஸ்ருதியின் காதலர் மைக்கேல். இப்போது ஸ்ருதி-மைக்கேல் காதல் பிரேக்-அப் ஆகிவிட்டது.

""நானும் ஸ்ருதியும் நீண்டநாள் தோழிகள். என்மீது ஸ்ருதி கொண்டிருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தத்தான் அப்படிச் சொன்னார் ஸ்ருதி'' என தமன்னா தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன் த்ரிஷா பிறந்தநாள் கொண்டாடினார். இதையொட்டி சார்மி வித்தியாசமாக வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே த்ரிஷாவை தனது காதலியாக உருவகப்படுத்தி பரிசுமழை பொழிந்த சார்மி, இந்தமுறை திருமணம் வரை போய்விட்டார்.

""பேபி... எப்போதுமே உன்னை நான் விரும்புகிறேன். என் காதலை ஏற்றுக்கொள்வாய் என்று முழங்காலிட்டு... காதலனாக காத்திருக்கிறேன். திருமணம் செய்துகொள்ளலாம்.

இப்போது அது சட்டபூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனச் சொல்லியிருக்கும் சார்மி... இந்தக் குறும்புக் கோரிக்கைக்குப் பொருத்தமாக சார்மியை த்ரிஷா இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கிற புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

சார்மியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருக்கும் த்ரிஷா... கூடவே குறும்பான கோரிக்கைக்கும் பதிலாக, "நான் ஏற்கனவே சம்மதம் சொல்லிவிட்டேனே' எனவும் பதில் தந்திருக்கிறார்.

அன்பின் மிகுதியில் சொல்றத வச்சுக்கிட்டு வம்பு பண்ணிக்கிட்டிருக்கக் கூடாது.

t

நிச்சயதார்த்தம்!

கர்ப்பமடைந்திருக்கும் எமிக்கும், அவரின் காதலர் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

குழந்தை பிறந்த பிறகு... இவர்களது திருமணம் நடக்கவுள்ளது.

நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக வசித்துவந்த போதிலும் சினிமாவில் தொடர்ந்து பிஸியாகவே இருப்பதால் கல்யாணப் பேச்சு பேசப்படாமலே இருந்தது.

விக்னேஷின் குடும்பத்துடன் சமீபத்தில் சித்திரை திருநாள் கொண்டாடினார் நயன்.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதியில் நயன்-சிவன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க விருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான முன்னோட்டம்தான் சித்திரை திருநாள்.

nkn100519
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe