"இந்தியன்-2' தனது கடைசிப் படமாக இருக்கும். அதன்பின் முழுக்க முழுக்க அரசியல்தான்... என சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்த கமல்... ஆனாலும் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தொடர்ந்து படத்தை தயாரிப்பேன் எனச் சொல்லியிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamal_60.jpg)
அதன்படி விக்ரம் நடிப்பில் "கடாரங்கொண்டான்' படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போது "இந்தியன்-2' படத்திலும் கமல் விருப்பமில்லாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது... ""எனக்குப் பிடித்தமான சினிமா துறையையே அரசியலுக்காக விட்டுவிட்டேன்'' என கமல் சொல்லியிருந்தார்.
"விடப்போகிறேன்' என்று சொல்லாமல் "விட்டுவிட்டேன்' என்று சொன்னதால் "இந்தியன்-2' படத்தையும் கமல் விட்டுவிட்டார்... என அரசல்புரசலாகப் பேசப்படுகிறது.
இந்தப் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமும் ரஜினியின் "தர்பார்' படத்தில் பிஸியாகிவிட்டது. அதுதவிர "இந்தியன்-2'வுக்கான நிதியை "தர்பார்' படத்தில் இறக்கியதாலும், ஏற்கனவே லைகாவுக்கு ஃபைனான்ஸ் நெருக்கடிகள் இருப்பதாலும் "இந்தியன்-2' மீது லைகாவுக்கும் பெரிதாக இன்ட்ரஸ்ட் இல்லையாம்.
இதையடுத்தே "இந்தியன்-2' புராஜெக்டை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பண்ண ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் கமலுக்கு ஆர்வம் இல்லாததால் ஷங்கரின் அந்த யோசனையும் கிடப்பில் இருக்கிறது.
கட்சி நடத்துவதற்கான ஃபைனான்ஸுக்காக கமல் மீண்டும் நடிக்கவேண்டிய தேவையை சில முக்கிய பிரமுகர்கள் ஏற்படுத்தவில்லை. கமலின் அரசியலுக்காக தாராளமாக பணஉதவி செய்கிறார்கள் அவர்கள்.
""தி.மு.க. -அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க விரும்பாத இளம் வாக்காளர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதை மேலும் வளர்த்தெடுக்கலாம். அதனால் அரசியலில் மட்டுமே கவனமாக இருப்போம். அடுத்த தேர்தலில் ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்துப் போட்டியிட்டால் "இரட்டை இலையா?, சூரியனா?' என்கிற போட்டிபோல... "கமலா? ரஜினியா?' என்கிற அரசியல் போட்டித் தோற்றம் ஏற்படும். இது நமது அரசியலுக்கு இன்னும் கூடுதல் வலுவை ஏற்படுத்தும்'' என கமலும், கட்சி முக்கியஸ்தர்களும், சில பிரபலங்களும் ஆலோசித்திருக்கிறார்கள்.
""கட்சி நடத்த ஃபைனான்ஸ் உதவிகள் தாராளமாக கிடைப்பதால்... கமல் மீண்டும் நடிக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும்'' என்கிறார்கள் "டார்ச்லைட்'டர்கள்!
நடிப்பில் அற்புதம் நிகழ்த்தும் கமலின் நடிப்புத் தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் கண்ணைக் கட்ற அளவுக்கு இருட்டா தெரியுது. கமலே அந்த ரகசியத்தின் மீது டார்ச்லைட் அடித்தால்தான் "இந்தியன்-2' உண்டா, இல்லையா?'னு ஊருக்குப் புரியும்.
-ஆர்.டி.எ(க்)ஸ்
______________
அரசியல்
ம.நீ.ம. கட்சியின் பொருளாளர் விலகியதால் புதிய பொருளாளராக ஏ.சந்திரசேகரனை நியமித்திருக்கிறார் கமல்.
சினிமா
கமலின் "இந்தியன்-2' சம்பந்தமாக ரிலையன்ஸிடம் ஷங்கர் பேசியதாகச் சொல்லப்பட்டபோதிலும் வேறு கதை, வேறு ஹீரோவுடன் ஷங்கர் உருவாக்கவிருக்கும் படத்தைத்தான் ரிலையன்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது ஏரியாவில்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-05-03/kamal-t.jpg)