இருவீட்டு பெரியோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால்... காதலர்களான ஸ்ருதிஹாசனும், இத்தாலியை பூர்விகமாகக் கொண்ட லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் கார்ஸலும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... காதல் பிரேக்-அப் ஆகிவிட்டது.
காதலில் விழுந்ததால் இரண்டு வருடங்களாக திரைப்படங்களில் கூட நடிக்காமல் இருந்தார் ஸ்ருதி.
இந்நிலையில்... இருவரும் பிரிவதாக டுவிட்டர் மூலம் அறிவித்த மைக்கேல்... "ஆயினும் அவர் எனது நல்ல தோழி'’எனவும் குறிப்பிட்டார்.
காதலித்தபோது... "பெர்ஸனல் விஷயங்களை பொதுவெளியில் பேசுவதில்லை'’எனக் குறிப்பிட்டிருந்த ஸ்ருதி... பிரிவைப் பற்றியும் க
இருவீட்டு பெரியோர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால்... காதலர்களான ஸ்ருதிஹாசனும், இத்தாலியை பூர்விகமாகக் கொண்ட லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் கார்ஸலும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... காதல் பிரேக்-அப் ஆகிவிட்டது.
காதலில் விழுந்ததால் இரண்டு வருடங்களாக திரைப்படங்களில் கூட நடிக்காமல் இருந்தார் ஸ்ருதி.
இந்நிலையில்... இருவரும் பிரிவதாக டுவிட்டர் மூலம் அறிவித்த மைக்கேல்... "ஆயினும் அவர் எனது நல்ல தோழி'’எனவும் குறிப்பிட்டார்.
காதலித்தபோது... "பெர்ஸனல் விஷயங்களை பொதுவெளியில் பேசுவதில்லை'’எனக் குறிப்பிட்டிருந்த ஸ்ருதி... பிரிவைப் பற்றியும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால்... மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக "லாபம்'’படத்தில் நடித்துவருகிறார். பாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
"பிக்பாஸ்'’மூலம்தான் ‘பிக்-அப்’ ஆகியிருந்தார்கள் ஓவியாவும், ஆரவ்வும்.
திடீரென ஓவியாவின் காதலை ஆரவ் கைவிட்டதால்... மனரீதியாக பாதிக்கப்பட்டார் ஓவியா. பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொண்டு... "இனிமே நான் சிங்கிள்தான்'’என்றார். இப்படி பிரேக்-அப் ஆன இவர்கள் மீண்டும் கோவாவுக்கு இன்பச்சுற்றுலா சென்று... மீண்டும் புதுப்பித்துக்கொண்டனர் நெருக்கத்தை.
சில தினங்களுக்கு முன் ஓவியாவின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் கேக் வெட்டி பார்ட்டி கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்தார் ஆரவ். இதன் மூலம் மீண்டும் இவர்கள் நெருக்கம் பெரிய அளவில் பிக்-அப் ஆகியிருக்கு.
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது... பாரதிராஜா, ஏ.எல்.அழகப்பன், எஸ்.வீ.சேகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சில மாதங்களுக்கு முன் சந்தித்தும்... முறையிட்டனர்.
இதையடுத்து... தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடமும் புகார் செய்யப்பட்டு... இப்போது மாவட்ட பதிவாளர் சேகரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திற்கான தனி அதிகாரியாக நியமித்திருக்கிறது அரசு.
சங்க வரவு-செலவுகளுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை, சங்க வைப்புநிதியை இஷ்டத்திற்கு செலவு செய்திருக்கிறார்கள், ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை... சங்கத்திற்காக புதிய அலுவலகம் அமைத்த பிறகு அதன் முகவரியை பதிவாளரிடம் தெரிவிக்கவில்லை...
இப்படியான குற்றச்சாட்டுகளின் பேரில் சங்கத்தை அரசு கைப்பற்றியிருக்கிறது.
இனி நிர்வாகிகள் தனி அதிகாரியின் அனுமதியில்லாமல் சங்க நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாது.
முறைப்படி தேர்தல் நடத்தி புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் தனி அதிகாரி விலக்கிக்கொள்ளப்படுவார்.
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் விஷால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
மீண்டும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருக்கிறார் விஷால். ஆனால் விரைவில் வரவிருக்கும் நடிகர்சங்க தேர்தலில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவாரா? என்பது தெரியவில்லை.
"ஒரே நேரத்தில் இரட்டைச் சவாரி வேண்டாம்'’என்று விஷாலுக்கு ஆலோசனை சொல்றாங்களாம்.
சமீபத்தில் நடந்த நடிகர்சங்க செயற்குழு கூட்டத்திற்குப் பின் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர்... “"விஷால் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகத் தெரியவில்லை'’எனச் சொல்லியுள்ளார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்