நயன்தாராவுக்கு இருக்கும் மவுசு கோலிவுட்டின் பிற நடிகைகளை பொறாமைப்பட வைக்கிறது. முன்னணி ஹீரோக்கள் மீண்டும் மீண்டும் நயன்தாராவையே தங்கள் படங்களுக்கு ஜோடியாக்குகிறார்கள்.
ரஜினியுடன் "தர்பார்', விஜய்யுடன் "விஜய்-63', சூர்யா-டைரக்டர் சிவா கூட்டணிப் படம், சிவகார்த்தியுடன் "மிஸ்டர் லோக்கல்' என பிஸியாக இருக்கிறார். அஜீத்துடன் நயன்தாரா நடித்த "விஸ்வாசம்' இன்னும் வசூலை அள்ளிக்கொண்டிருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது.
நயன்தாரா கதைநாயகியாக நடித்த "ஐரா' படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியபோதும் நயனின் கால்ஷீட்டுக்காக ஏங்குபவர்கள் வரிசை நீண்டுகொண்டே போகிறது.
இதனால்தான் காதலர் விக்னேஷ்சிவனை திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை தள்ளி வைத்துக் கொண்டேயிருக்கிறார் நயன்.
நயன் பற்றி இன்னொரு சுவாரஸ்ய தகவல்... சம்பாத்தியத்தை தங்கத்தில் முதலீடு செய்து வருகிறாராம்.
விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு அசத்திய கீர்த்தி சுரேஷிற்கு கோலிவுட்டில் மவுசு குறைந்தாலும் பாலிவுட்டில் வரவேற்பாகியிருக்கிறது.
விளையாட்டை மையமாகக் கொண்ட இந்திப் படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி.
"நடிகையர் திலகம்' சாவித்திரியின் வாழ்க்கைக் கதையான "மகா நடி' படத்தில் கீர்த்தியின் மகா நடிப்பைப் பார்த்து விட்டுத்தான்... "நான் கீர்த்தியோட ரசிகை ஆயிட்டேன்' எனச் சொன்னார் பாலிவுட் நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி. அதோடு அஜய்தேவ்கானை வைத்து தன் அப்பா போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தியை சிபாரிசும் செய்திருக்கிறார் ஜான்வி.
முதல் இந்திப் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தியின் நடிப்புத் திறமைக்கு கிடைத்திருக்கிறது.
நடிப்புத் திறமை மூலம் மவுசை தக்கவைப்பது ஒருவிதம் என்றால்... ஒரு மாதிரியான விதத்தில் ரசிகர்களிடம் மவுசை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் சில நடிகைகள்.
உடற்பயிற்சி செய்வது, சாப்பிடுவது, குளிப்பது என தங்களின் ஒவ்வொரு நிகழ்வையும் கவர்ச்சிகரமாக படம் பிடித்து தங்களின் சமூக வலைத்தள கணக்கில் பதிவு செய்து... ரசிகர்களிடம் தங்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள்.
இந்த பாணியில் மவுசு காட்டுவதில் முன்னணியில் இருக்கிறார் யாஷிகா ஆனந்த்... என்கிறார்கள் வலை நோக்கர்கள்.
"செக்ஸ் படம் பார்த்த அனுபவம்' பற்றியெல்லாம் ரசிகர்களிடம் பேசி உஷ்ணமூட்டுகிறார் யாஷி.
-ஆர்.டி.எ(க்)ஸ்