டூரிங் டாக்கீஸ்!

d

"அவர்கிட்ட நீ சொல்லு...'

"நீயே சொல்லு...'

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் அவருடைய மகனும் இப்படி ஜாடையில் எதையோ பேசிக்கொள்ள... அதைக் கவனித்த எம்.ஜி.ஆர்., அந்தப் பெண்ணிடம் "என்னம்மா?' என விசாரிக்கிறார்.t

""பெண்கள் எந்தச் சங்கடமும் இல்லாம பார்க்கிறதுக்குத் தகுந்தது உங்களோட படங்கள் மட்டும்தான்... ஆனா "இதயக்கனி' படத்துல...'' என அந்தப்பெண் சொல்ல, அதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் இடம்பெற்ற கவர்ச்சிக்கான காரணம், கதையின் அமைப்பு என்பதைச் சொல்லி... ""இனிமே அப்படி இருக்காது'' என சொல்லி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் காதலுணர்ச்சி, கடமையுணர்ச்சி, வீரவுணர்ச்சி என்கிற

"அவர்கிட்ட நீ சொல்லு...'

"நீயே சொல்லு...'

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் அவருடைய மகனும் இப்படி ஜாடையில் எதையோ பேசிக்கொள்ள... அதைக் கவனித்த எம்.ஜி.ஆர்., அந்தப் பெண்ணிடம் "என்னம்மா?' என விசாரிக்கிறார்.t

""பெண்கள் எந்தச் சங்கடமும் இல்லாம பார்க்கிறதுக்குத் தகுந்தது உங்களோட படங்கள் மட்டும்தான்... ஆனா "இதயக்கனி' படத்துல...'' என அந்தப்பெண் சொல்ல, அதைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் இடம்பெற்ற கவர்ச்சிக்கான காரணம், கதையின் அமைப்பு என்பதைச் சொல்லி... ""இனிமே அப்படி இருக்காது'' என சொல்லி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் காதலுணர்ச்சி, கடமையுணர்ச்சி, வீரவுணர்ச்சி என்கிற மூன்று முக்கிய அம்சங்களுடன்தான் இருக்கும். வீரவுணர்ச்சியில் வெளிப்படுத்தும் வசீகரத்தை காதலுணர்ச்சியிலும் வெளிப்படுத்துவார். இதுதான் எம்.ஜி.ஆர். ஸ்டைல்.

"சரசம் முத்தினா விரசம்' என்று கிராமங்களில் ஒரு வழக்காடல் உண்டு.

படம் பார்க்கிற ரசிகர்களை சுண்டியிழுக்கும் சரசக் காட்சிகளில் விரசம் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வார். அதிலும் தீவிர ரசிகர்களுக்கு, கதாநாயகியின் கவர்ச்சி இரண்டாம்பட்சமே. அவர்கள் காதல் காட்சிகளிலும்கூட எம்.ஜி.ஆரைத்தான் ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெகுநிதானமாக ஆடியதைப் பார்த்த நடிகை கஸ்தூரி, "பல்லாண்டு வாழ்க' படத்தில் "போய் வா நதி அலையே' பாடலுக்கு எம்.ஜி.ஆரும் லதாவும் நடித்த விதத்தை ஒப்பிட்டு... வலைப்பக்கத்தில், "என்னய்யா இது... "பல்லாண்டு வாழ்க' படத்துல வாத்தியாரு லதாவை தடவினதைவிட அதிகமா தடவுறாங்க' என ஒரு பதிலைப் போட...

k

இதுதான் பலத்த சர்ச்சையாகியிருக்கிறது.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவிக்க... நடிகர் சங்கத்தின் கவனத்திற்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில்... நடிகை லதாவும், கஸ்தூரிக்கு தன் கண்டனத்தை தெரிவித்ததோடு...

""மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானு கோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டுமொத்தமா மன வருத்தப்படுறபடி இப்படியெல்லாம் எழுதலாமா? கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் எந்தப் படத்திலயும் நான் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா... அவங்க நடிச்ச படத்திலிருந்தே சொல்லியிருக்கலாமே?'' என தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

""எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால்... நான் மனமார வருந்துகிறேன்'' என வருத்தம் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

கூடவே... ""நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள்'' என்று குறிப்பிட்டிருப்பதுடன், ""புரட்சித்தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதய தெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசக் கலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்திவிட்டேன் என்கிற குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன்'' என்றும்... ""இந்துமத தெய்வங்கள்கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்'' எனவும் விளக்கம் சொல்லியுள்ளார் கஸ்தூரி.

"தலைவன் மிரட்டிட்டான்' என உற்சாக மிகுதியில் ரசிகர்கள் சொல்வது... அவர்களின் ஹீரோவை இழிவுபடுத்துவதாக ஆகாது.

இப்படியான வெளிப்பாடுதான் கஸ்தூரியின் கமெண்ட்டும்.

ஆனாலும் "தடவுறது' என்கிற வார்த்தையை கஸ்தூரி தவிர்த்திருக்கலாம்.

-இரா.த.சக்திவேல்

nkn160419
இதையும் படியுங்கள்
Subscribe