"தொடர்ச்சியாக தொல்லை தருவதையே வாடிக்கையாகக் கொண் டிருக்கிறார் பாபி சிம்ஹா' என்கிற கோபத்தில் இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

t"நாலு நாள்தான் நடிச்சேன். அப்புறம் படத்திலிருந்து விலகிட்டேன். டூப் வச்சு எடுத்திருக்காங்க... மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை வச்சு டப்பிங் பண்ணியிருக்காங்க' என தான் நடித்த "அக்னி தேவி' படத்திற்கு எதிராக பிரச்சினை செய்தார் பாபி.

ஆனால் "இதுபற்றி விவாதிக்க தயாரிப்பாளர் சங்கம் பலமுறை அழைத்தும்... சங்கத்தை பாபி சிம்ஹா மதிக்கல' என்கிறார்கள்.

காரணம் என்ன?

Advertisment

""இப்படி ரிலீஸ் நேரத்துல கூடுதல் பணம் கேட்டு குடைச்சல் கொடுப்பது பாபி சிம்ஹாவோட வழக்கம்.

"சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' பட வெளியீட்டப்பவும் பல பொய் குற்றச்சாட்டுகளைச் சொன்னார். "மீரா ஜாக்கிரதை' பட வெளியீட்டப்பவும் பிரச்சினையை கிளப்பினார். இதுக்கு ஒரு முடிவுகட்டத்தான் பாபி சிம்ஹாவை பஞ்சாயத்துக்கு கூப்பிடுது சங்கம். ஆனா வராம டேக்கா கொடுக்கிறார்'' என்கிறார்கள்... விஷயமறிந்தவர்கள்.

பாபி சிம்ஹா மீதான புகாரை நடிகர் சங்கத்துக்கு ஃபார்வேட் செஞ் சிருக்க தயாரிப்பாளர் சங்கம்.

Advertisment

தேர்தல் நேரம்ங்கிறதால நடவடிக்கைய இன்னும் தொடங்கல.

தேர்தலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சீக்கிரம் தேர்தல் வரப்போகுதில்ல...

ஜீத்தின் "பில்லா-2', கமலின் "உன்னைப் போல் ஒருவன்' படங்களை இயக்கிய சக்ரி டொலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்த த்ரில்லர் படம் "கொலையுதிர் காலம்'.

இந்தப் படத்தின் தயாரிப் பாளர்களில் ஒருவராக இருந்த இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

இப்படி சில சிக்கல்கள் இருந்த நிலையில் படத்தின் விநியோக உரிமையை வாங்கிய மதியழகன்... படத்தின் ட்ரெய்லர் tவெளியீட்டு விழாவை நடத்தினார். இதில் தான் ராதாரவி, நயன்தாரா பற்றி சர்ச்சைக் குரிய கருத்துகளைச் சொல்லி சலசலப்பேற்றினார்.

இதனால் கோபமான நயனின் காதலரான விக்னேஷ் சிவன்...

"இது முழுமையாக முடிக்கப்படாத படம், கைவிடப்பட்ட படம்' என்று கருத்து தெரிவிக்க...

"இதனால் பட வியாபாரம் பாதித்ததாக' விக்னேஷ் சிவன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது படக்குழு.

"ஒரு அடார் லவ்' படம் மூலம் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தப் படத்தில் நூரின் நாயகியாகவும், பிரியா தோழியாகவும் நடிப்பதாகத்தான் கதை அமைக்கப்பட்டது. ஆனால் பிரியாவின் "கண்ணடி' பிரபல மானதால் அவரை நாயகியாக்கி, நூரினை துணை நடிகையாக்கி விட்டனர்.

""கதையை மாற்றியதால்... பிரியாவை ஹீரோயின் ஆக்கிய தால் படம் படுதோல்வியடைந்தது.

தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியால் பிரியாவை கதாநாயகியாக்கினேன்'' என படத்தின் டைரக்டர் ஓமர் தெரிவிக்க... ""நான் சில உண்மைகளைச் சொன்னா தாங்கமாட்டீங்க'' என பிரியா கோபப்பட்டார்.

பிரியாவின் இந்தக் கோபத்தால் அதிர்ச்சியான கேரள சினிமா உலகம்... பிரியாவுக்கு புதுப்பட வாய்ப்புகளை தர மறுக்கிறது.

இன்னொருபுறம் இந்தியில் பிரியா நடிக்கும் "ஸ்ரீதேவி பங்களா' படத்தை சட்டரீதியாக முடக்கி வைக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தீவிரமாக இருக்கிறார். இதனால் பாலிவுட்டிலும் புதிய வாய்ப்புகள் பிரியாவுக்கு கிடைக்கவில்லை.

கண்ணடி பிரியா மீது இப்படி கண்ணடி பட்டிருச்சே!

-ஆர்.டி.எ(க்)ஸ்