டூரிங் டாக்கீஸ்!

a

கல்யாணம் ஆன கொஞ்சநாள்லயே...

பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸுக்கும் திருமணமாகி 117-வது நாளிலேயே... இருவரும் பிரியவிருப்பதாக அமெரிக்க yபத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி... அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் தனது இசை ஆல்பம் ஹிட்டடித்த தற்காக பிரியங்காவுக்கு காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசளித்தார் நிக்.

"பிரியங்கா அடிக்கடி பார்ட்டி வைப்பதும், பார்ட்டிகளுக்கு போவதும் நிக்கிற்கு பிடிக்க வில்லை... அதுதான் இவர்களிடையே மனக் கசப்புக்கு காரணம்...'’ என அந்த செய்தியில் சொல்லப்படுகிறது. ஆனால்... இந்த செய்தி வெ

கல்யாணம் ஆன கொஞ்சநாள்லயே...

பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸுக்கும் திருமணமாகி 117-வது நாளிலேயே... இருவரும் பிரியவிருப்பதாக அமெரிக்க yபத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி... அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் தனது இசை ஆல்பம் ஹிட்டடித்த தற்காக பிரியங்காவுக்கு காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசளித்தார் நிக்.

"பிரியங்கா அடிக்கடி பார்ட்டி வைப்பதும், பார்ட்டிகளுக்கு போவதும் நிக்கிற்கு பிடிக்க வில்லை... அதுதான் இவர்களிடையே மனக் கசப்புக்கு காரணம்...'’ என அந்த செய்தியில் சொல்லப்படுகிறது. ஆனால்... இந்த செய்தி வெளியான நேரத்தில் பிரியங்காவும், நிக்கும் குடும்பத்தினருடன் மியாமி தீவில் உற்சாகமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார்கள்.

‘பிரியப்போவதாக வந்த சேதி வதந்திதான்’ என்பதறிந்து பிரியங்காவின் ரசிகர்கள் நிம்மதி யடைந்திருக்கிறார்கள்.

பிரியங்காவும் இந்தச் செய்திக்கு பதிலடியாக தனது கொழுந்தன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளி யிட்டு... பதிலடி தந்திருக்கிறார்.

பிரியங்காவின் ஒன்றுவிட்ட சகோதரியான பரினிதி சோப்ராதான்... செய்தி வெளியிட்ட மீடியா மீது கோபத்தை வெளிப்படுத்தியதுடன்... பிரியங்கா மீது நிக் வைத்திருக்கும் பிரியத்தையும் சொல்லி யிருக்கிறார்.

கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே...

e

"மதராச பட்டணம்'’ எமி ஜாக்ஸன்... பாலிவுட் நடிகர் பிரதிக்குடன் ஏற்பட்ட காதலை... பிரதிக்கின் போக்குப் பிடிக்காமல் முறித்துக்கொண்டார். கடந்த ஆண்டு... தன் சொந்தஊரான லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜுடன் காதல்வயப்பட்டார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள் ளது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆனாலும்... தான் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் எமி.

கல்யாணம்னு சொல்லிச் சொல்லி..

an

ஜெய்-அஞ்சலி காதலில் கருத்து வேறுபாடு வந்ததால்... இருவரும் முன்புபோல பேசிக்கொள்வதில்லை. அஞ்சலி ரொம்ப பிஸியாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால்... ‘"அஞ்சலிக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்குது... அஞ்சலிக்கு சீக்கிரமே திருமணம்.. திருமணம் செய்து கொண்டபின் அஞ்சலி நடிக்கமாட்டார்...' இப்படி அடிக்கடி செய்திகள் உலா வர... அஞ்சலி கடுப்பாக இருக்கிறார்.

""என்னை சினிமாவுலருந்து வெளி யேத்துறதுக்காக இப்படி தொடர்ச்சியா செய்தி பரப்புறாங்க. எனக்கு இப்ப கல்யாணம் இல்ல. தற்சமயம் நான் சினிமாவத்தான் காதலிக்கிறேன். கல்யாணம் ஆனாலும் தொடர்ந்து நான் சினிமாவுல நடிப்பேன்''’என தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.

கல்யாணத்துக்கு கொஞ்சநாள் முன்ன...

d

திருமணம் செய்துகொண்ட பிறகு சமந்தா- நாகசைதன்யா சேர்ந்து நடித்திருக்கும் "மஜ்லி'’ தெலுங்குப் படவிழாவில் பேசிய சமந்தாவின் மாமனா ரும், ஹீரோவுமான நாகார்ஜுனா... ’""சைதன்யாவும், சமந்தாவும் தங்களோட காதலை எங்ககிட்ட சொல் லாம மறைச்சிட்டாங்க. ஆனா எங்க வீட்டு நாய்தான் இவங்களோட காதலை முதல்ல கண்டுபிடிச்சு எங்களுக்குச் சொல்லுச்சு. ஒரு நாள் சமந்தா எங்க வீட்டுக்கு வந்தப்ப... எங்க வீட்டு நாய்... சமந்தாகிட்ட பிரியமா நடந்துக்கிச்சு. இதனால் டவுட் ஆகி விசாரிச்சப்போ... சமந்தாவுக்கு முன்கூட்டியே நாயை அறிமுகப்படுத்தியிருக்கார் சைதன்யா...''’எனச் சொல்லி... விழா அரங்கையே கலகலப்பாக்கியிருக்கிறார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn050419
இதையும் படியுங்கள்
Subscribe