ரசியல் தலைவர்கள், சமூக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள், ராணுவ அதிகாரிகள்... என பல்துறை பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் "பயோபிக்' மோகம் கோலி-பாலி-ஹாலி என எல்லா "வுட்'களிலும் அதிகரித்து வருகிறது.

2005 ஆம் ஆண்டு...

touringtalkies

டெல்லியில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற 15 வயது மாணவி மீது ஒருதலை காதல் கொண்ட ஒரு அயோக்கியன் திராவகம் வீசியதில் லட்சுமியின் அழகிய முகம் சிதைந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவரின் முக அமைப்பு முழுமையாக மீட்கப்படவில்லை. இருப்பினும்... புற அழகு சிதைக்கப்பட்டதால் முடங்கிக் கிடக்காமல்... சமூக அக்கறையுடனான தனது செயல்களால் தன்னை அழகாக்கிக்கொண்டிருக்கிறார் லட்சுமி.

Advertisment

திராவக வீச்சில் பாதித்தோருக்காக லட்சுமி குரல் கொடுத்துவருகிறார். இதற்காக ஒரு அமைப்பையும் நடத்திவருகிறார் லட்சுமி. இதன் முக்கிய நோக்கமே... மிக எளிதாக கிடைக்கும் ஆசிட் விற்பனையை நிறுத்துவதுதான். லட்சுமியின் இந்தப் போராட்டத்திற்கு ஓரளவு பலனும் கிடைத்துவருகிறது.

போராளி லட்சுமியின் கதை சினிமாவாகிறது. இதில் தீபிகா படுகோனே நடிப்பதுடன், சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நல்ல காரியமாக இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார் தீபி.“லட்சுமியின் கதையைக் கேட்டதும் மனது பாதித்தது. இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி பெண்களின் கருணை, பலம், நம்பிக்கை, வெற்றி உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும்'' என ஏற்கனவே தெரிவித்திருந்தார் தீபிகா. இந்த நல்ல நோக்கத்தை லட்சுமியும் வர வேற்றிருந்தார். இந்தப் படத்திற்கு "சபாக்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இந்திச் சொல்லுக்கு அர்த்தம் "பாடம்' என்பதாகும்.

லட்சுமியாக நடிக்கும் தனது முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ள தீபிகா... ""இது என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதா பாத்திரமாக அமையும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

touringtalkies

"தலைவி' என்ற பெயரில் தமிழிலும், "ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை படமாக்குகிறார் டைரக்டர் விஜய்.

இதில் ஜெ.வாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் கங்கனா ரணாவத். ""ஒரு சாதனைப் பெண்மணியின் வாழ்க்கை கதையில்... அவராகவே நடிப்பதில் பெருமைப்படுகிறேன்'' என கங்கனா தெரிவித்துள்ளார்.

டயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக அமலாபால் நடிக்க, மலையாளத்தில் ஒரு த்ரில்லர் படம் தயாராகிறது. கேரள காவல்துறை மருத்துவர் உமாதத்தன் மூலம் துப்பறியப்பட்ட ஒரு வழக்குச் சம்பவத்தை வைத்து இந்தப் படத்திற்கு கதை எழுதப்பட்டுள்ளது.

மெரிக்காவில் ரஜ்னீஷ்புரம் என்கிற ஆசிரமம் அமைத்து பிரபலமாக இருந்த இந்தியச் சாமியார் "ரஜ்னீஷ் சாமியார்' என்கிற ஓஷோ. உலகம் முழுக்க இவரின் ஃபாலோயர்கள் இருந்தார்கள். 80-களின் இறுதியில் ஓஷோ மீதும், அவரின் உதவியாளரான மா ஆனந்த் ஷீலா மீதும் போதைப் பொருள் வைத்திருந்தது... உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது அமெரிக்க அரசு. அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி ஓஷோ நாடு கடத்தப்பட்டார். பல்வேறு நாடுகளில் அவர் அடைக்கலம் கோரியும்... அடைக்கலம் தர மறுத்ததால்... இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு... 1990-ல் ஓஷோ மறைந்தார். ஓஷோ மீதான விசாரணையின் போது... அவர்மீது அமெரிக்க அரசு சில கதிர்வீச்சு களை நிகழ்த்தியதால்தான்... அவருக்கு மரணம் ஏற்பட்டது... என்கிற பேச்சும் இன்றளவும் உண்டு.

ஓஷோவின் உதவியாளர் மா ஆனந்த் ஷீலா... அமெரிக்க சிறையில் பலகாலம் தண்டனை அனுபவித்து... நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டார். இப்போது சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழ்ந்துவருகிறார்.

மா ஆனந்த் ஷீலாவின் வாழ்க்கைக் கதையும், அவருடைய பார்வையில் கொஞ்சம் ஓஷோவின் வாழ்க்கைக் கதையும் கலந்து ஹாலிவுட்டில் படமாகவிருக்கிறது.

இதில் ஷீலாவாக, தான் நடிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

-ஆர்.டி.எ(க்)ஸ்