கோலிவுட் ரீல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் இரு வாரங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.
ரியல் ஜோடியான சூட் டோடு ரீல் ஜோடியாகவும் "டெடி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க சாயிஷாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதால்... கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
"கரீபியன் தீவு' படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற ஜானி டெப்பும், நடிகை ஆம்பர் ஹெட்டும் திருமணம் செய்துகொண்
கோலிவுட் ரீல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் இரு வாரங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.
ரியல் ஜோடியான சூட் டோடு ரீல் ஜோடியாகவும் "டெடி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க சாயிஷாவுக்கு அனுமதி கிடைத்திருப்பதால்... கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
"கரீபியன் தீவு' படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற ஜானி டெப்பும், நடிகை ஆம்பர் ஹெட்டும் திருமணம் செய்துகொண்ட சில வருடங்களிலேயே பிரிந்துவிட்டனர்.
விவாகரத்து வழக்கில் ‘"ஜானி என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்'’ என குற்றம் சுமத்தியிருந்தார் ஆம்பர். ஆனால்... "என்னை தினமும் அடிச்சது ஆம்பர்தான். என் கை விரலைக்கூட ஒரு வாட்டி உடைச்சார்' என ஜானி பதில் குற்றச் சாட்டுடன், சுமார் 80 சி.சி.டி.வி. வீடியோ ஆதாரங்களையும் கோர்ட்டில் ஒப்ப டைத்திருக்கிறார்.
டோலிவுட் ரீல் ஜோடியாக ஹிட் படங்களைத் தந்த நாகசைதன்யாவும், சமந்தாவும் சில வருடங்களுக்குமுன் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த ரியல் ஜோடி மீண்டும் "மஜ்லி' படத்தில் ரீல் ஜோடியாக நடித்துவருகிறார்கள்.
ஹாலிவுட்டில் நடிக்கப்போன இடத்தில் பிரியங்கா சோப்ராவுக்கும், பாப் பாடகர் நிக்கிற்கும் காதல் வந்து... சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்த ரியல் ஜோடி... "சக்கர்' எனும் இசை ஆல்பத்தில் ஜோடி போட்டனர். சமீபத்தில் வெளியான இந்த ஆல்பம் பெரிய அளவில் ஹிட்டடிக்கவே... பிரியங்காவுக்கு காஸ்ட்லி கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார் நிக். "கணவனோட வெற்றி மனைவிக்கு பரிசைத் தரும்' என மகிழ்ச்சிகரமாக தெரிவித் திருக்கிறார் பிரியங்கா.
ஹாலிவுட் ரீல் மற்றும் ரியல் தம்பதிகளான பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி இரு வருடங் களுக்கு முன் விவா கரத்தாகி பிரிந்து விட்டனர். பிரிவுக்கான காரணங்களை அப்போது ஏஞ்சலினா சொல்ல வில்லை. ஆனால்... ""பிராட் என் னோட சிந்தனைகளை மேம்படுத்திய வர். அதேசமயம் அவர் தீவிர மதுப்பழக் கத்திற்கு ஆளாகிட் டார். அதனால அவரைத்தேடி வந்த பல வாய்ப் புகளை அவரால் ஏற்க முடியல. அதுமட்டுமில்லாம... என் மேல அவருக்கு எப்பவும் பொறாமை இருந்தது. அதனால தான் விலகிட்டோம்''’ என இப்போது சொல்லி யிருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி இந்தி சேனல் ஒன்றில் நடுவராக இருக்கிறார். நிகழ்ச்சியின் படப்பிடிப் பில் அவர் பிஸியாக இருந்தபோது... சக நடுவ ரான டைக்ரடர் அனுராக் பாசு... ஷில்பாவின் செல்போனை எடுத்து, "நான் என் கணவரை பிரியப்போகிறேன்' என ஒரு மெஸேஜை ஷில்பா வின் அம்மாவுக்கு அனுப்பி விட... "நல்லாத்தான இருந் தாங்க.. என்ன பிரச்சினை யோ?' என பதட்டமான ஷில்பாவின் அம்மா... உடனே போன் செய்து விசாரிக்க... அப்புறம்தான் இந்த விளையாட்டு ஷில்பாவுக்கு தெரியவந்திருக்கிறது.