Advertisment

டூரிங் டாக்கீஸ்!

touringtalkies

காதுக்கு எட்டினது கைக்கு எட்டல!

-அரசு மானியத்தில் விளையாடும் அதிகாரம்!

சினிமாவில் தரமான, குறைந்த பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும்விதமாக ஆண்டுதோறும்... அரசு மானியம் வழங்கப்படுவது வழக்கம்.

Advertisment

touringtalkiesஆனால்... கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து மானியம் வழங்கப்படவில்லை.

கலைஞர் அரசும், ஜெ. அரசும் சினிமாக்காரர்களின் இந்த மானியக் கோரிக்கையையும், திரைப் படைப்பாளிகளுக்கு தரப்பட வேண்டிய விருதுகளையும் தராமல் இழுத்தடித்தே வந்தன.

Advertisment

இ.பி.எஸ். அரசு பதவியேற்றதும்... 2007 முதல் 2014 வரையிலான எட்டாண்டுகளுக்கான மானியம் தர முடிவு செய்தது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி மற்றும் டி.வி.மாசிலாமணி தலைமையில் மானியம்பெற தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய குழு அமைத்தது அரசு.

எட்டாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 422 சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மானியம் கேட்டு தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்தனர்.

இதை பரிசீலித்து தேர்வுக்குழு முடிவை அறிவித்தது.

2007-ஆம் ஆண்டிற்கு 14 திரைப்படங்கள், 2008-ஆம்

காதுக்கு எட்டினது கைக்கு எட்டல!

-அரசு மானியத்தில் விளையாடும் அதிகாரம்!

சினிமாவில் தரமான, குறைந்த பட்ஜெட் படத்தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும்விதமாக ஆண்டுதோறும்... அரசு மானியம் வழங்கப்படுவது வழக்கம்.

Advertisment

touringtalkiesஆனால்... கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து மானியம் வழங்கப்படவில்லை.

கலைஞர் அரசும், ஜெ. அரசும் சினிமாக்காரர்களின் இந்த மானியக் கோரிக்கையையும், திரைப் படைப்பாளிகளுக்கு தரப்பட வேண்டிய விருதுகளையும் தராமல் இழுத்தடித்தே வந்தன.

Advertisment

இ.பி.எஸ். அரசு பதவியேற்றதும்... 2007 முதல் 2014 வரையிலான எட்டாண்டுகளுக்கான மானியம் தர முடிவு செய்தது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி மற்றும் டி.வி.மாசிலாமணி தலைமையில் மானியம்பெற தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய குழு அமைத்தது அரசு.

எட்டாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 422 சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மானியம் கேட்டு தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்தனர்.

இதை பரிசீலித்து தேர்வுக்குழு முடிவை அறிவித்தது.

2007-ஆம் ஆண்டிற்கு 14 திரைப்படங்கள், 2008-ஆம் ஆண்டிற்கு 18 திரைப்படங்கள், 2009-ஆம் ஆண்டிற்கு 22 திரைப்படங்கள், 2010-ஆம் ஆண்டிற்கு 21 திரைப்படங்கள், 2011-ஆம் ஆண்டிற்கு 17 திரைப்படங்கள், 2012-ஆம் ஆண்டிற்கு 22 திரைப்படங்கள், 2013-ஆம் ஆண்டிற்கு 12 திரைப்படங்கள், 2014-ஆம் ஆண்டிற்கு 23 திரைப்படங்கள்... ஆக மொத்தம் 8 ஆண்டுகளுக்கு மொத்தம் 149 சிறு பட்ஜெட் படங்களுக்கு தலா 7 லட்ச ரூபாய் வீதம் மொத்தம் 10 கோடியே 43 லட்ச ரூபாய் மானியமாக தர குழுசெய்த பரிந்துரையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தரப்படும் இந்த மானியத்திற்கான (அரசாணை எண்: 133/நாள்-13-07-2017) அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இ.பி.எஸ். அரசு இதற்கான நிதியை ஒதுக்கியது. இதையடுத்து... தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 149 படத்தயாரிப்பாளர்களுக்கும் 05-02-2018-ல் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் ’மானியம் தரப்படுவதற்கு உரிய ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் என்பதால் ஆதார் அட்டை, ஃபான் கார்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரக் கடிதம், பேங்க் பாஸ்புக் நகல் உள்ளிட்ட விவரங்களை கலைவாணர் அரங்கத்தில் செயல்படும் திரைப்படத்துறையினர் நலவாரியத்தில் கொடுக்கும்படி’கடிதம் அனுப்பியது.

அதன்படி தயாரிப்பாளர்கள் விவரங்களைச் சமர்ப்பித்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல்... ‘மானியத்தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்டதாக...’ ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் முன்கூட்டியே வவுச்சரில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டது சம்பந்தப்பட்ட துறை.

ஆனால் இவ்வளவுநாளாகியும் 149 தயாரிப்பாளர்களுக்கும் மானியத்திற்கான காசோலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ராஜீவ்காந்தி கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "குப்பி', ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற "வெண்ணிலா கபடிக்குழு', குடும்பப் பாசத்தை வலியுறுத்திய "மாயாண்டி குடும்பத்தார்', குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்த விழிப்புணர்வு படமான "அச்சமுண்டு அச்சமுண்டு', இயற்கையின் பின்னணியில் சந்தேகத்தால் அழியும் அழகிய காதலைச் சொன்ன "மைனா',’சூழலில் சிதறும் காதலைச் சொன்ன "அவள் பெயர் தமிழரசி', தன்னம்பிக்கையையும் உழைப்பையும் வலியுறுத்திய ‘"அம்பாசமுத்திரம் அம்பானி', சரண்யா பொன்வண்ணனுக்கு தேசியவிருது கிடைக்கக் காரணமான... தேனி மாவட்ட வாழ்வியலைச் சொன்ன "தென்மேற்கு பருவக்காற்று', சுயநலவாதிகளால் மில் தொழிலாளிகளின் வாழ்க்கை கெடுவதைச் சொன்ன ‘"கிருஷ்ணவேணி பஞ்சாலை', பெண்ணின் மன அழுத்தங்களைப் பேசிய "ஆரோகணம்', ஆசிரியர் மாண்பை உயர்த்திப் பிடித்த "சாட்டை', எங்கும் ஊடுருவியிருக்கும் தீவிரவாதத்தைச் சொன்ன "ஆள்', கணிதமேதை ராமனுஜரின் வாழ்க்கைக் கதைப் படமான "ராமானுஜன்'’உள்ளிட்ட பல நல்ல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் இந்த மானியத்திற்காக காத்திருக்கிறார்கள்.

touringtalkiesஇதுபற்றி தயாரிப்பாளர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது...

""ஒவ்வொரு படத்துக்கும் தலா ஏழு லட்சம் ரூபாய் மானியம் கிடைப்பதால்... "சம்பந்தப்பட்ட 149 படத் தயாரிப்பாளர்களும் தலா ஒரு லட்சம் கமிஷன் தரவேண்டும்'’ என பிரஷ்ஷர் வந்தது.

எந்த அரசாங்கம் மானியம் கொடுத்தாலும்... தயாரிப்பாளர்கள் கமிஷன் கொடுப்பது வழக்கமான நடைமுறை என்பதால்... பழகிப்போனதால்... அதில் சம்பந்தமில்லாத வேறு யாரும் விளையாடிவிடக் கூடாது என்பதால்... தயாரிப்பாளர் சங்கத்துப் பிரமுகர் யாரேனும் ஒருவர் பொறுப்பில் மானியம் பெற தேர்வான தயாரிப்பாளர்கள் தாங்கள் கொடுக்கவேண்டிய கமிஷனை கொடுத்துவிடுவது வழக்கம்.

ஆனால்... அரசாங்கத்துடன் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சுமுகமான உறவில் இல்லை. அதனால்... கலெக்ஷன் பொறுப்பை தயாரிப்பாளர் சங்கம் ஏற்கவில்லை.

இதனால் மானியம் காதுக்கு எட்டியும் கைக்கு எட்டாமல் இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் இதுல அக்கறை காட்டல. "நாங்க உங்களோட மானியத்த வாங்கித் தர்றோம். ஒரு லட்சரூபா வேணாம்... தலா 50 ஆயிரம் குடுங்க'’’ என அரசியலோடு சம்பந்தப்பட்ட சிலர் வசூல் வேட்கையோடு வளைய வருகிறார்கள்.

""பல தயாரிப்பாளர்கள் கஷ்டத்துலதான் இருக்காங்க. வட்டிக்கு வாங்கித்தான் இந்த கட்டிங் தொகையைத் தரமுடியும். உறுதியா கிடைக்கும்னு தெரிஞ்சா வட்டிக்கி வாங்கிக் கொடுக்கலாம். எந்த உத்தரவாதமும் இல்லாம எப்படிக் கொடுக்கமுடியும்? கட்டிங்கை வசூல் பண்றவங்க... கரெக்ட்டா அதை கொடுக்க வேண்டிய இடத்துல கொடுப்பாங்களானு தெரியலையே...''’என்றார்கள்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

touringtalkies
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe