Advertisment

டூரிங் டாக்கீஸ்! பயோபிக் பஞ்சாயத்து!

touringtalkies

சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்ஸி ராணியின் வாழ்க்கைக் கதை "மணிகர்னிகா- தி குயின் ஆஃப் ஜான்ஸி'’ என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டது. கங்கனா ரணவத் ‘"ஜான்ஸி'யாக நடித்த இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிம்பு, அனுஷ்கா நடித்த "வானம்'’படத்தை இயக்கிய கிரிஷ் இந்தப் படத்தையும் இயக்கினார். touringtalkiesமுக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கிரிஷுக்கும், கங்கனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்... இயக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார் கிரிஷ். இதனால் மீதக் காட்சிகளை கங்கனாவே இயக்கி முடித்தார். இதனால் டைட்டிலில் டைரக்டர் பெயரில் கிரிஷுடன், கங்கனா பெயரும் இடம்பிடித்தது.

Advertisment

இதனால் கங்கனா மீது கிரிஷுக்கு கோபம். இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வெளிப்படையாக வ

சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்ஸி ராணியின் வாழ்க்கைக் கதை "மணிகர்னிகா- தி குயின் ஆஃப் ஜான்ஸி'’ என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டது. கங்கனா ரணவத் ‘"ஜான்ஸி'யாக நடித்த இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிம்பு, அனுஷ்கா நடித்த "வானம்'’படத்தை இயக்கிய கிரிஷ் இந்தப் படத்தையும் இயக்கினார். touringtalkiesமுக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கிரிஷுக்கும், கங்கனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்... இயக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார் கிரிஷ். இதனால் மீதக் காட்சிகளை கங்கனாவே இயக்கி முடித்தார். இதனால் டைட்டிலில் டைரக்டர் பெயரில் கிரிஷுடன், கங்கனா பெயரும் இடம்பிடித்தது.

Advertisment

இதனால் கங்கனா மீது கிரிஷுக்கு கோபம். இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில்...

ஆந்திர சினிமா மற்றும் அரசியலில் புகழ்பெற்ற என்.டி.ஆரின் வாழ்க்கைக் கதை இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. என்.டி.ஆராக அவரின் மகனும் பிரபல ஹீரோவுமான பாலகிருஷ்ணா நடித்திருந்தார். கூடவே அதிக பொருட்செலவில் இந்த இரு பாகங்களையும் பாலகிருஷ்ணாவே தயாரித்திருந்தார்.

தெலுங்கு மக்கள் கிருஷ்ணராக கொண்டாடிய "என்.டி.ஆரின் பயோபிக்' என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

"என்.டி.ஆர். - கதாநாயகுடு'’என்ற பெயரில் இந்த ஜனவரியில் வெளியான முதல் பாகம் மிக சுமாரான வரவேற்பையே பெற்றது. இரண்டாம் பாகமான ‘"என்.டி.ஆர். - மகாநாயகுடு'’ படத்தை வெளியிட சினிமா வர்த்தகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் பத்து நாட்களுக்கு முன் ‘"பார்ட்-2'’வெளியாகி... பெரும் தோல்வியைத் தழுவியது. இந்த இரண்டு பாகங்களையும் கிரிஷ் இயக்கியிருந்தார்.

தன் தந்தையின் பயோபிக்கிற்கு வரவேற்பு கிடைக்காததில் பாலகிருஷ்ணா ரொம்பவே மனவருத்தம் அடைந்தார்.

"மணிகர்னிகா'’விஷயத்தில் கிரிஷுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் கங்கனா... இந்தச் சமயம் பார்த்து கிரிஷை பழி தீர்த்திருக்கிறார்.

"கிரிஷை நம்பி... மோசம்போய்விட்டார் பாலகிருஷ்ணா'’எனத் தெரிவித்திருக்கிறார்.

பாலகிருஷ்ணா தரப்பில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தவர்கள்... ஒரு சென்ட்டிமெண்ட் காரணத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது... பாலகிருஷ்ணா தயாரித்து நடிக்கிற படங்கள் பெரும்பாலும் வெற்றியைப் பெறுவதில்லை... என்பதுதான்.

இதையடுத்து தனது வழக்கமான "மசாலா பாணி' படம் ஒன்றில் நடித்துவரும் பாலகிருஷ்ணா... அந்தப் படத்தை தயாரிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளாராம்.

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதையை சினிமாவாக எடுக்க பல தரப்பிலும் முயற்சிகள் நடக்கின்றன.

"தி அயர்ன் லேடி'’ என்ற பெயரில் படமாக்கப் போவதாக மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி முதலில் அறிவித்தார்.

touringtalkies

டைரக்டர் விஜய், டைரக்டர் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக "ஜெ., வாழ்க்கையை படமாக்கப்போவதாக' அறிவித்தனர்.

டைரக்டர் கௌதம்வாசுதேவ் மேனன், வெப் சீரியலாக ஜெ.வின் வாழ்க்கைக் கதையை படமாக்க திட்டமிட்டார்.

touringtalkies

சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்தும் ஜெ. வாழ்க்கைக் கதையை சினிமாவாக தயாரிக்க திட்டமிட்டார். "இந்தப் படத்தை லிங்குசாமி இயக்குவார்' எனவும் ஜென் ஆனந்த் அறிவித்தார். இதில் சசிகலா மற்றும் நடராஜன் கேரக்டர்களின் முக்கியத்துவத்தை விளக்கும்படி கதையமைப்பு இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

தனது தந்தை திவாகரனுக்கு முக்கியத்துவம் தராமல், தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சசிகலாவின் போக்கால்... அப்படியே அந்த படத் திட்டத்தை கைவிட்டுவிட்டாராம் ஜெய் ஆனந்த்.

பாரதிராஜாவும் ஜெ. பயோபிக்கில் சைலண்ட்டாக இருக்கிறார்.

கௌதம்மேனன் ட்ரயல் ஷூட் பண்ணியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நித்யாமேனனை ஜெ.வாக நடிக்கவைத்து தீவிரமாக பட வேலைகளில் இருக்கிறார் பிரியதர்ஷினி.

விஜய் நடித்து, டைரக்டர் விஜய் இயக்கிய "தலைவா'’படத்தில் டைட்டில் லோகோ சாயலிலேயே "தலைவி'’என டைட்டில் வைத்து, அதிகாரப்பூர்வமாக ‘ஜெ. பயோபிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் டைரக்டர் விஜய்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn130219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe