லக மெங்கும் நூற் றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு, 80 விழாக் களில் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டு 34 விருதுகளைப் பெற்றுள்ள படம்... தேசிய விருதையும் வென்று பின்னர் திரைக்கு வந்திருக்கிறது. பின்னணி இசை கிடையாது, பாடல்கள் கிடையாது, விறுவிறுப்பு, பொழுதுபோக்குக்கான எந்த அம்சங்களும் கிடையாது, அழகழகான கோணங்கள், ஃப்ரேம்கள், லொகேஷன்கள் கிடையாது. ஆனாலும் வரவேற்பைப் பெற்ற "டுலெட்' படத்தில் என்னதான் இருக்கிறது?

Advertisment

2007 காலகட்டத்தில் உலகமயமாக்கலின் விளை வாக தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து வேலை வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய அந்த தருணத்தில் வேறு வேலைகளில் இருந்தவர்களுக்கு வீட்டு வாடகை என்பது மிகப்பெரும் சுமையானது. இதைத் தாங்க முடியாமல் நகரத்தை விட்டு வெளியேறி புறநகர் பகுதிகளுக்கு சென்ற வர்கள் அதிகம். வீடு... மனிதனின் அத்தியாவசிய அடிப் படைத் தேவையாகவும் ஆகப்பெரும் லட்சியமாகவும் இருப் பது. பிழைப்புக்காக நகரத்துக்கு இடம்பெயர்பவர்களின் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது. வாடகை உயர்வால் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலைக்கு வரும் இளங்கோ-அமுதா தம்பதி தங்கள் குழந்தை சித்தார்த்துடன் வீடு தேடுவதும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் விதவிதமான கேள்விகள், சவால்கள், அவமதிப்புகள், அனுபவங்களும்தான் இயக்குனர் செழியனின் "டுலெட்.

tolet

ஒரு ஒளிப்பதிவாளர், தான் இயக்கும் முதல் படத்துக்கு எந்த ஒரு மேக்-அப்பும் சேர்க்காமல், சொல்ல வந்த கதையை முழுமையாக, உண்மையாக இருக்கும்படி இயக்கியதற்காகவே அவரை ஆரத்தழுவி வரவேற்கலாம். அப்படியென்றால் படத்தில் எதுவும் இல்லையா, வறட்சியாக இருக்குமா? இல்லை. படமெங்கும் நாம் புன்னகைக்க, நெகிழ, அதிர்ச்சியடைய பல தருணங்கள் இருக்கின்றன. கதை நடக்கும் இடத்தின் சத் தங்களே இசையாகி, காட்சிகளுடன் சேர்ந்து கதை சொல் கின்றன. படம் முடிந்து நெடுநேரத்திற்குப் பெரிய தாக்கத்தையும் சிந்தனையையும் நமக்குள் உண்டாக்குகிறது "டுலெட்.' "ஈரானிய சினிமாக்களையே எத்தனை நாட்களுக்கு உதாரணம் சொல்வது, நாம் அந்த அளவுக்கு ஒரு படமெடுக்க வேண்டும்' என்ற நோக்கத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் செழியன்.

Advertisment

ஒப துறையின் வளர்ச்சி பிற சாதாரண, எளிய பணிகளில் இருந்த மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்துத் தொடங்கும் படம், ஒப ஊழியர்களின் மீதான காழ்ப்பாகவோ குற்றச்சாட்டுகளாகவோ செல்லாமல் இருப்பது ஆறுதல். வீடு தேடும் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் ஒவ்வொரு வகை. ஜன்னலே இல்லாத ஒரு வீடு, "கறுப்புச் சட்டையெல்லாம் போடாதீங்க' என கண்டிக்கும் ஒரு வீட்டுக்காரர், ஒரு வீட்டை காலி செய்யும் முன்பே அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டுப் பார்க்க வருபவர்கள் முன்பு கூனிக்குறுகி நிற்கும் தருணம், வீட்டை வாடகைக்குக் கொடுக்க முடிவு செய்யும் முன் உரிமையாளர் செய்யும் பின்புல விசாரணை என "டுலெட்' நம்மில் பலர் கடந்த வந்துள்ள உண்மை அனுபவங் களின் தொகுப்பு. வறட்சியான உண்மைகள் மட்டுமில்லை, கவிதையான பல காட்சிகளும் உண்டு. அப்பா சட்டையை அயர்ன் செய்யும்போது சுவரிலிருந்து பிய்த்து கசக்கி எறியப்பட்ட தன் ஓவிய காகிதத்தையும் அயர்ன் பண்ண சிறுவன் சித்தார்த் கொடுப்பது, வீடு தேடும்போது ஒரு வீட்டில் வயதான ஒரு தம்பதியும் மூன்று பூனைகளும் வாழ்வதைப் பார்த்து "நம்மால் அவர்கள் வேறு இடம் தேடும் நிலை ஏற்படக்கூடாது' எனக் கருதி அந்த வீட்டை வேண்டாம் என்று சொல்வது... இப்படி கவித்துவமான தருணங்கள் பல உண்டு.

சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், சிறுவன் தருண்... மூவரும் ஒரு எளிய குடும்பத்தை மிக இயல்பாகப் பிரதி பலிக்கிறார்கள். இளங்கோ என்ற உதவி இயக்குநராக, சினிமாவில் வெற்றி பெற முயலும் இளைஞராக, அதுவரை சினிமாவுக்குள்ளேயே கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து செலவுக்குப் பணம் ஈட்டும் குடும்பஸ்தனாக துளியளவும் விலகலில்லாமல் நம்முன் வாழ்கிறார் சந்தோஷ். இயலாமையிலும் வறுமையிலும் அவ்வப்போது நடக்கும் சிறிய நகைச்சுவை என அந்தப் பாத்திரத்தின் அத்தனை உணர்வு களையும் அழகாக வெளிப்படுத்துகிறார். சந்தோஷ், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. ஷீலா... கணவனின் இயலாமை மீது கொள்ளும் கோபம், அதேநேரம் அவனை விட்டுக் கொடுக்காத காதல் என மிக இயல்பாக நடித்திருக்கிறார். "எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லப்பா, எனக்கு ஒரு வீடு மட்டும் வாங்கித் தா' என்று கூறி வீட்டில் என்ன வெல்லாம் வேண்டுமென்று விளக்கும் இடம் கவிதை. சிறு வன் தருண், படம் பார்க்கும்போது பூக்கும் நம் புன்னகைக்கு முழுப்பொறுப்பு. அழகாக இருக்கிறான் என்று கூறி முடித்து விட முடியாது; நன்றாக நடித்தும் இருக்கிறான். வீட்டு உரி மையாளராக ஆதிரா, வீடு காட்டும் நண்பராக அருள்எழிலன் ஆகியோ ரும் சிறப்பாகப் பங்களித் திருக்கிறார்கள்.

தேவையில்லாத வெளிச் சம் உட்பட எந்தவித எக்ஸ்ட்ரா விஷயங்களும் இல்லாமல் படத்தை தூய்மையாகக் கொடுத்திருக்கிறார் செழியன். அந்த சிறிய வீட்டுக்குள் தான் கிட்டத்தட்ட பாதி படம் நடக்கிறது. ஆனாலும் விதவிதமான கோணங்களால் சலிப்பு ஏற்படாமல் கொண்டுசெல்வது ஒளிப்பதிவாளர் செழியனுக்கு கிடைத்த வெற்றி. வசனங்கள், மிக இயல்பான உரையாடல்களாக அமைந்துள்ளன. வீடு கிடைத்துவிட வேண்டும் என்று நமக்குள் உண்டாகும் பதற்றம், படம் நம்முள் உறவாடு வதை உணர்த்துகிறது. ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பு தொழில்நுட்ப ரீதியில் எளிமையாக, இந்தப் படத்தின் ஜீவனுக் கேற்ப இருக்கிறது. அதேநேரம் வீடு கிடைக்குமா என்ற பதற்றத்தை உரு வாக்குவதிலும் பங்குவகித்துள்ளது.

Advertisment

"டுலெட்', உண்மை மட்டுமே நிறைந்த திரைப்படமாக நமக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. இதில் பேசப்படும் பிரச்சனைகள், வெளிப்படுத்தப்படும் உணர்வு கள் உலகின் எல்லா தேசத்துக் கும் பொதுவானவை. "டுலெட்', தமிழகத்திலி ருந்து ஓர் உண்மையான உலகத் திரைப்படம்.

-வசந்த்