அந்த வளரும் நடிகை யிடம் வழிந்த பிரபலங்கள் பதைபதைப்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு.
காரணம்... அந்த இளம் நடிகையிடம் பிரபலங்கள் ஜொள்ளுவிட்ட சொல்லாடல் கள், சந்திப்புகளுக்கான அழைப்பு கள் கசியத் தொடங்கியிருக் கின்றன.
சில பெரிய படங்களில் சின்ன ரோல்களில் நடித்திருக்கும் அவர் சில குறும்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அதனால் அந்த நடிகை ‘"குறும் பட நாயகி'’ என்றே அறியப்படு கிறார்.
"நாயகன்'’படத்தின் நாயகி பெயரை தன் பெயராகக் கொண்ட அந்த நடிகை தன் வசீ கரிக்கும் பேச்சால் எல்லாரையும் வசியப்படுத்தி, தான் விரித்த வலையில் எளிதாக விழ வைப்பதில் வல்லவர் என்கிறார் கள் ஏரியாவில்.
பிரபலங்களின் செல் போனுக்கு "குட் மார்னிங்'’என குறுஞ்செய்தி போட்டு தன் ஆட்டத்தை தொடங்குவார்.
அடுத்து பிரத்யேகமாக படம் பிடிக்கப்பட்ட தனது புகைப்பட

அடுத்து பிரத்யேகமாக படம் பிடிக்கப்பட்ட தனது புகைப்படத்தை அனுப்புவார்.
கறுப்புநிறம் கொண்ட அந்த நடிகை... "திறமை இருந்தாலும் நான் கறுப்பாக இருப்பதால்தான் எனக்கு பட வாய்ப்புத் தராமல் சினிமா உலகம் என்னை ஒதுக்குகிறது. அதை மீறி... போராடித்தான் வாய்ப்பு களைப் பெறுகிறேன்'’என சென்ட்டிமெண்ட்டாக பேசி, பிரபலங்களிடம் அனுதாபம் பெற்று, அவர்களிடம் நட்பு பிடிப்பார்.
அப்படி நட்பாகும் பிரபலத் திடம் சினிமா வாய்ப்பு கேட்கும் படலத்தைத் தொடங்குவார்..
"குட் மார்னிங்'கில் குறுந் தகவல்களில் தொடங்கும் இந்தப் பழக்கம் போகப்போக நெருக்கம் காட்டி கடைசி எல்லைவரை சென்றுவிடும். அதிலும் அவரின் சிணுங்கல் மொழியில் கிறங்கி விடுவார்கள் பிரபலங்கள். அதைவைத்து வாய்ப்பு வேட்டை நடத்துவதோடு, பணவேட் டையும் நடத்துவாராம் அந்த குறும்பட நாயகி.
இப்படியாக அவர் விரித்த வலையில் சிக்கிய திரைப் புள்ளிகள் ஏராளம்.
அதில் சிலரின் விபரம் கிடைத்தது.
தியாகி ஒருவரின் பெயரை தன் பெயராகக் கொண்ட டைரக்டர் அவர். இன்னும் திருமணமாகாத அவர் இந்த குறும்பட நடிகைமீது ஸிம்பதி யாகி, காதல்வயப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இதனால் சில லட்சங்களைக் கூட அந்த நடிகைக்கு செலவு செய்திருக்கிறார்.’"மன்மத ராசா'னு தன்னை வளையவந்த நடிகைக்கு ஏற்கனவே பல வருடங்களாக ஒரு காதலர் இருப்பதையும், இப்போது படம் இயக்க தயாராகிவரும் ஒரு புதுமுக இயக்குநர் அந்த நடிகையிடம் நெருக்கமாக இருப்பதையும் தெரிந்து பழக்கத்தைத் துண்டித்து விலகி விட்டார் டைரக்டர்.
வித்தியாசமான ஸ்டை லில் படங்களைத் தரக்கூடிய டைரக்டர் அவர். நடிப்பிலும் அசத்தக்கூடியவர். அவரை பிடிக்காத உதவி இயக்குநர் களும்கூட "தலைவரு திமிங் கிலம் தானுங்கோ'’என்கிற அளவிற்கு பிடித்தமானதாக இருக்கும் அவரின் மேக்கிங் ஸ்டைல்.
காமெடி நடிப்பில் வளர்ந்து வரும் நடிகர் அவர். பாலகர் என்பதை குறிப்பது போல ஆரம்பித்து, முருகக் கடவுளின் பெயர்களில் ஒன் றைக் கொண்டிருக்கும் அவரின் பெயர்.
மேடைப் பேச்சாளர் களுக்கு உடைத்து தரப்படும் வாயு கலந்த பானத்தை குறிக்கும் பெயரில் படம் எடுத்த டைரக்டர் அவர். அவருடைய பெயரின் முன்பாதியில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவரின் பெயர் இருக்கும்.
நட்சத்திரத்தை லோ கோவாகக் கொண்ட பிரபல சேனல் மூலம் பிரபலமாக இருப்பவர் அந்த காமெடிக்காரர். புராண காவியம் ஒன்றின் ஹீரோவின் பெயரை தனது பெயராகக் கொண்டவர் இந்த நடிகர். குடும்பங்கள் குடி யிருக்கும் இடத்தையும், இந்த நடிகரின் பெயரையும் சேர்த்து இப்போது அந்த சேனலில் வரும் காமெடி ஷோவிலும் இந்த நடிகர் நடித்துவருகிறார்.
"த்ரிஷா இல்லேன்னா இன்னொரு நடிகை'’ என்பார்களே... அந்த நடிகையை வைத்து ஆவிப் படம் எடுத்தவர் அந்த டைரக்டர். ஆவிக்கு பழைய மாடல் மகிழ்வூர்தி ஒன்றில் உருவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகவும் பிரபலமானது.
கவலைப்படாத யூத் அமைப்பு படம் எடுத்த டைரக்டர் அவர். பெயரில் ‘கோல்டு’ உண்டு.
"இவர்களெல்லாம் அந்த குறும்பட நடிகையின் லிஸ்ட்டில் உண்டு' என்கிறது கோடம்பாக்கம் ஏரியா.
சமீபத்தில்... குறும்பட நாயகியின் உண்மை கேரக்டரை ஒரு டீம் கண்டுபிடித்ததில் பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அவரது போன் முக்கியமான ஒரு இடத்தில் சிக்கியதால் போன் ரகசியங்கள் வெளியே கசியத்தொடங்கியதாம். கோடம்பாக்கத்தில் இவர் பேசிய ஆடியோ மற்றும் பலருக்கும் இவர் ரசித்து அனுப்பிய குறுந் தகவல்கள் கசியத் தொடங்கி யுள்ளன.
குறும்பட நடிகை அலுவலகம் வருகிறார் என் றாலே அவரது நட்பு வட் டத்தினர் சமீப நாட்களாக தெறித்து ஓடுகின்றனராம் உஷா ராக.
-ஆர்.டி.எ(க்)ஸ்