ரசியல் நையாண்டிப் படமான ‘"எல்.கே.ஜி'’ சிறப்புக் காட்சியாக அதிகாலை ஐந்து மணிக்கு சென்னையில் வெளியாகவிருப்பதாக, அந்தப் படத்தின் ஹீரோ ஆர்.ஜே.பாலாஜி தெரிவிக்க... பிரபல ஹீரோ விஷ்ணு விஷால் ‘"அதிகாலை காட்சி மதிப்பிழந்து வருகிறது'’என ஒரு கருத்தைப் போட்டார்.

விஷ்ணுவிஷாலின் அப்பா ரமேஷ் குடவாலா, போலீஸ் அதிகாரி. தீயணைப்புத்துறையில் பணியாற்றுகிறார். இதை மறைமுகமாக குறிப்பிட்டு... "எங்கள் படக்குழுவில் யாரும் தீயணைப்புத் துறையில் வேலை செய்யவில்லை. ரெக்கமண்டேஷனில் படத்திற்கு தியேட்டர் பிடிக்கவில்லை. இது மெரிட்டில் கிடைத்த ஸீட்'’என பாலாஜி பதிலடி தர...

மாறி மாறி இப்படி வார்த்தைகளைவிட்டு மோதிக் கொண்டார்கள் இருவரும்.

பிறகு... இருவரும் போனில் பேசி, சமாதானமாகியிருக்காங்க.

Advertisment

atlee

விஜய்யின் ‘"மெர்சல்'’ படம் உண்டாக்கிய சர்ச்சையால் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோ ரின் கவனத் தையும் இந்தப் படம் ஈர்த்தது. விஜய் நடிப்பிற்காக இங்கிலாந்து நாட்டு படவிழாவில் விருதும் கிடைத்தது. ஆனா லும் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்திற்கு நஷ்டம்தான். இதனால் அந்த நிறுவனம் சுந்தர்.சி. இயக்கத்தில் தயாரிக்கவிருந்த "சங்க மித்ரா'’படத்தை கைவிட்டது. தனுஷ் இயக்கத்தில் தயாரித்து வந்த "நான் ருத்ரன்'’படம் ஃபைனான்ஸ் பற்றாக்குறையால் நிற்கிறது.

Advertisment

இந்த நெருக்கடி ஏற்பட காரணம்... தேவையில்லாமல் பல காட்சிகளை பெரும் செலவில் எடுத்து, அதை படத்தில் சேர்க்காமல் வீணடித்த டைரக்டர் அட்லிதான். "தெறி' படத்திலும் இப்படித்தான் செலவு வைத்தார். இதனால் தான்... அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விளையாட்டு உலகில் நிகழும்’ அரசியல் பற்றிய கதை படத்தை தயாரித்துவரும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்... "சொன்ன பட்ஜெட்டில் படம் எடுத்துத் தரவேண்டும்'’என அட்லியுடன் தனியா ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

பிரியா வாரியரின் கண்ணடி காட்சியால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஒரு அடார் லவ்'’ மலையாளப் படம் சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு திருப்தியில்லை. இதனால் படத்தின் பத்து நிமிட க்ளைமாக்ஸ் காட்சியை நீக்கிவிட்டு புதிய க்ளைமாக்ஸை எடுத்துச் சேர்த்திருக் காங்க.

kamal

ருபத்திமூன்று வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட "இந்தியன்'’படத்தில் கமல் போட்டிருந்த ‘சேனாபதி’ எனும் வயோதிகர் கெட்-அப்பிற்கான ஒப்பனை மிகச் சிறப்பாக இருந்தது. இப்போது தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் "இந்தியன் -2'வுக்காக கமலுக்கு ஹாலிவுட் நிறுவனத்தால் செய்யப்பட்ட வயோதிகர் ஒப்பனை, டைரக்டர் ஷங்கருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

அதற்குள் பாராளுமன்றத் தேர்தல் முஸ்தீபுகளில் கமல் இறங்கிவிட்டதால்... ‘"இந்தியன்-2'’கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால்... "கமல் இடம்பெறாத காட்சி களை எடுத்துக்கொண்டிருக்கிறார் டைரக்டர். ‘படம் கைவிடப்படவில்லை'’என அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனமும் அறிவித்துள்ளது.

udayanidhi

விஜய்சேதுபதிக்கு "மக்கள்செல்வன்' என்கிற பட்டத்தை, தான் இயக்கிய "தர்மதுரை'’படத்தில் போட்டார் சீனுராமசாமி. இந்தப் பட்டத்தை விஜய்சேதுவின் ரசிகர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘"கண்ணே கலைமானே'’ படத்தை இயக்கியிருக்கும் சீனு, டைட்டிலில் உதயநிதிக்கு ‘"மக்கள் அன்பன்'’ என பட்டம் போட விரும்ப... உதயநிதி பட்டத்தை தவிர்க்கச் சொல்லிவிட்டார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்