Advertisment

டூரிங் டாக்கீஸ்! காதலர் தின கதைகள்!

nayanthara

"நயன்தாரா இருக்கும் படம் வெற்றிக்கு உத்திரவாதம்' என்கிறது மார்க்கெட் நிலவரம்.

Advertisment

5, 6 வருடங்களுக்கு முன் தனக்கு ஜோடியாக நடித்த நயனை, "விஸ்வாசம்' படத்திலும் நாயகியாக்கினார் அஜித். அதேபோல பத்துவருடங்களுக்கு முன் தனக்கு ஜோடியாக நடித்த நயனை அட்லி இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்தில் ஜோடியாக்கியிருக்கிறார் விஜய்.

nayantharaகடந்த ஆண்டு தனக்கு ஜோடியாக நடித்த நயனை மீண்டும் தனது "மிஸ்டர் லோக்கல்' படத்தில் ஜோடியாக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படி பிரபல ஹீரோக்கள் பலரும் நயனுடன் டூயட் பாட விரும்பும் நிலையில்... கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நட

"நயன்தாரா இருக்கும் படம் வெற்றிக்கு உத்திரவாதம்' என்கிறது மார்க்கெட் நிலவரம்.

Advertisment

5, 6 வருடங்களுக்கு முன் தனக்கு ஜோடியாக நடித்த நயனை, "விஸ்வாசம்' படத்திலும் நாயகியாக்கினார் அஜித். அதேபோல பத்துவருடங்களுக்கு முன் தனக்கு ஜோடியாக நடித்த நயனை அட்லி இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்தில் ஜோடியாக்கியிருக்கிறார் விஜய்.

nayantharaகடந்த ஆண்டு தனக்கு ஜோடியாக நடித்த நயனை மீண்டும் தனது "மிஸ்டர் லோக்கல்' படத்தில் ஜோடியாக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படி பிரபல ஹீரோக்கள் பலரும் நயனுடன் டூயட் பாட விரும்பும் நிலையில்... கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துவருகிறார் நயன். லேட்டஸ்ட்டாக "ஐரா' படத்தில் இரண்டு கெட்-அப்களில்... அதிலும் குறிப்பாக கறுப்பு ஒப்பனையில் மிரட்டலாக வருகிறார் நயன்.

Advertisment

தமிழ்- தெலுங்கு-மலையாளத்தில் நயன் நடித்திருக்கும் ஐந்து படங்கள் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. இதுபோக ஏழெட்டுப் படங்கள் கைவசம் இருக்கின்றன.

வாய்ப்புகள் இப்படி வரிசைகட்டுவதால்... தனது டைரக்டர் காதலர் விக்னேஷ் சிவனுடனான திருமணத்தை மேலும் ஓரிரு ஆண்டுகளுக்கு தள்ளிப்போட்டிருக்கிறார் நயன்.

கடந்த மாதத்தில் மட்டும் இரண்டுமுறை... நயனும், சிவனும் அமெரிக்கா சென்று வந்திருக்கிறார்கள்.

காதலருக்கு சட்டப்படி கணவராக பதவி உயர்வு தராமல் இருந்தாலும்... காதலர் தின ஸ்பெஷலாக இன்னொரு புரமோஷனை கொடுத்திருக்கிறார் நயன்.

சிவனை தான் கதைநாயகியாக நடிக்கவிருக்கும் படத்தின் தயாரிப்பாளராக்குகிறார் நயன்.

காதல்... காதலாக இருக்கிறது!

ஜினிகாந்த்' படத்தில் ஜோடியாக நடித்து நட்பாகி, "காப்பான்' படத்தில் ஜோடியாக நடித்து காதலாகி... இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் ஆர்யாவும், சாயிராவும். இதுபற்றி செய்திகள் வந்தாலும்... அதிகாரப்பூர்வமாக இருவருமே தெரிவிக்கவில்லை.

காதலர்தின ஸ்பெஷலாக தங்களின் காதலையும், அடுத்தமாதம் திருமணம் நடக்கவிருப்பதையும் இருவரும் வலைப்பக்கம் மூலம் நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

காதல்.... கல்யாண பந்தமாகிறது!

காமெடி நடிகை "தேனடை' மதுமிதாவும் அவரது மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸும் விரும்பி வந்தனர். ரொம்ப நாளைக்கு முன்பே குடும்பத்தாரால் தீர்மானிக்கப்பட்ட இவர்களின் திருமணம் ... காதலர் தின ஸ்பெஷலாக இப்போது நடந்திருக்கிறது.

காதல்... கல்யாண பந்தமானது!

"காற்றின் மொழி' உட்பட பல படங்களில் நடித்திருக்கும் சாண்ட்ராவும், நடிகர் ப்ரஜினும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

காதலர் தின ஸ்பெஷலாக... சாண்ட்ரா கர்ப்பமாக இருப்பதை அறிவித்து மகிழ்ந்துவருகிறார்கள் இந்தத் தம்பதி.

காதல்... வாழ்க்கையை உயர்த்துகிறது!

radhikaopte

டிகை ராதிகா ஆப்தேவும் லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்கும் ஏழாண்டுகளுக்கு முன்.. காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ராதிகா சினிமாவில் பிஸியாக இருப்பதால் மும்பையில் வசிக்கிறார். லீவு கிடைப்பதைப் பொறுத்து அவர் இங்கு வருவதும்... இவர் அங்கு போவதும்... வழக்கம்.

""நாங்க தனித்தனியா வசிச்சாலும்... மத்த தம்பதிகள்போல நாங்களும் சண்டை போட்டுக்குவோம். ஆனா... மத்த தம்பதிகளுக்கு மாறா... உடனே பேசிக்குவோம். எங்களோட காதல்ல உண்மை இருக்கிறதாலதான் வாழ்க்கை நல்லா இருக்கு''’ என காதலர் தின ஸ்பெஷலாக ராதிகா ஆப்தே சொல்லியுள்ளார்.

காதல்... வாழவைக்கிறது!

-ஆர்.டி.எ(க்)ஸ்

nkn160219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe